5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Loksabha Election Results: தனிப் பெரும்பான்மையை தவறவிட்ட பாஜக.. மீண்டும் பிரதமராவாரா மோடி?

கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற தேர்தல் ஜூன் 1ஆம் தேதி நிறைவடைந்தது. இதில் 31.2 கோடி பெண் வாக்களார்கள் உட்பட 64.2 கோடி வாக்காளர்கள் வாக்களித்தனர். இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. பாஜக பெரும்பாலான தொகுதியில் முன்னிலையில் உள்ளதாக தகவல் கிடைத்தது. ஆனால், பாஜகவுக்கும், எதிர்கட்சிகளுக்கும் இடையே உள்ள தொலைவு படிப்படியாக குறைந்தது தற்போதைய நிலவரப்படி, 290 தொகுதிகளில் பாஜக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. பாஜக மட்டும் 242 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. I.N.D.I.A கூட்டணி 235 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் மட்டும் 99 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.

Loksabha Election Results: தனிப் பெரும்பான்மையை தவறவிட்ட பாஜக.. மீண்டும் பிரதமராவாரா மோடி?
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 04 Jun 2024 22:26 PM

கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற தேர்தல் ஜூன் 1ஆம் தேதி நிறைவடைந்தது. இதில் 31.2 கோடி பெண் வாக்களார்கள் உட்பட 64.2 கோடி வாக்காளர்கள் வாக்களித்தனர். இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. பாஜக பெரும்பாலான தொகுதியில் முன்னிலையில் உள்ளதாக தகவல் கிடைத்தது. ஆனால், பாஜகவுக்கும், எதிர்கட்சிகளுக்கும் இடையே உள்ள தொலைவு படிப்படியாக குறைந்தது தற்போதைய நிலவரப்படி, 290 தொகுதிகளில் பாஜக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. பாஜக மட்டும் 242 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. I.N.D.I.A கூட்டணி 235 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் மட்டும் 99 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.

இதன் மூலம் 3வது முறை மோடி ஹாட்ரிக் வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. மோடி 3வது முறை பிரதமாராகிறார். எனினும், I.N.D.I.A கூட்டணிக்கு கருத்துக் கணிப்புகள் தெரிவித்ததை விட அதிக தொகுதிகள் கிடைத்துள்ளது முக்கிய திருப்பதாக கருதப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி தலைமையிலான பாஜக கூட்டணி 2014ல், 2019ல் நடைபெற்ற தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றது. இந்த தேர்தலிலும் பாஜக கூட்டணி 400 இடங்களுக்கு அதிமாக வெற்றி பெறும் என்று மோடி, அமித்ஷா பல மாதங்களாக கூறி வந்தனர்.

ஆனால், பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கூட கிடைக்கவில்லை. அதாவது, மத்தியில் ஆட்சி அமைக்க வேண்டுமானால் 272 எம்பிக்களின் ஆதரவு தேவை. ஆனால், இன்னும் எந்த கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. தனிப்பெரும்பான்மை கிடைக்க பாஜகவிற்கு 40 இடங்களுக்கு மேல் கிடைக்க வேண்டும். ஆனால் அதற்கு வாய்ப்பு குறைவாகவே உள்ளது. பாஜகவிற்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் அவர்கள் ஆட்சி அமைப்பது கடினம் என கூறப்படுகிறது.

இதனால், மத்தியில் ஆட்சியமைக்கப்போவது யார்? என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பாஜகவுக்கு ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை இருந்தாலும், அந்த கூட்டணியில் இருக்கும் சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் ஆகியோரை இழுக்க I.N.D.I.A  கூட்டணி முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஏனென்றால் சட்டப்பேரவையில் பெரும்பான்மை பெற்றிருக்கும் தெலுங்கு தேசம் கட்சி, 16 மக்களவைத் தொகுதிகளையும் வென்றுள்ளது. இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க தயார் என காங்கிரஸ் கூறியிருந்த நிலையில், அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல, பீகாரில் பாஜக கூட்டணியில் இருக்கும் நிதிஷ்குமார் 14 தொகுதிகளை வென்றுள்ளார். அவர் தேர்துலக்கு முன்பு தான் பாஜக கூட்டணிக்கு சென்றார் என்பதால் மீண்டும் I.N.D.I.A கூட்டணிக்கு வருமாறு நிதீஷ்குமாருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அடுத்த கட்டமாக என்ன நடக்கும் என பலரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இதனால், தேசிய அரசியலில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

Latest News