5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Varanasi Loksabha Results: வாரணாசியில் கடும் போட்டி.. மோடி பின்னடைவா?

Varanasi Loksabha Results: மக்களவைத் தேர்தலில் 543 தொகுதிகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. I.N.D.I.A கூட்டணி கடும் சவால் அளித்து வருகிறது. கருத்துக்கணிப்புகளுக்கு நேர் எதிர் மாறாக தேர்தல் முடிவுகள் வந்து கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட 219 தொகுதிகளில் இந்தியா கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. இந்த நிலையில்,  பிரதமர் மோடி போட்டியிட்ட வாரணாசியில் தொகுதியில் கடும் போட்டி நிலவுகிறது. கடந்த முறையும் இந்த தொகுதியில் மோடி போட்டியிட்டு வெற்றி பெற்றதால் எளிதில் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பிரதமர் மோடி திடீர் பின்னடைவை சந்தித்து வருகிறார்.

Varanasi Loksabha Results: வாரணாசியில் கடும் போட்டி.. மோடி பின்னடைவா?
வாரணாசி தொகுதி
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 04 Jun 2024 10:10 AM

வாரணாசி தொகுதியில் கடும் போட்டி: மக்களவைத் தேர்தலில் 543 தொகுதிகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இந்தியா கூட்டணி கடும் சவால் அளித்து வருகிறது. கருத்துக்கணிப்புகளுக்கு நேர் எதிர் மாறாக தேர்தல் முடிவுகள் வந்து கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட 219 தொகுதிகளில் இந்தியா கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. இந்த இரண்டு கூட்டணி இடம் பெறாத மற்ற கட்சிகள் 30 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. ஆட்சி அமைக்க 272 தொகுதிகள் தேவைப்படும் பட்சத்தில் பாஜக தலைமையிலான கூட்டணி போதுமான எண்ணிக்கையில் முன்னிலை வகித்து வந்தாலும் இன்னும் லட்சக்கணக்கான வாக்குகள் எண்ணுவதற்கு இருப்பதால் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில்,  பிரதமர் மோடி போட்டியிட்ட வாரணாசி தொகுதியில் கடும் போட்டி நிலவுகிறது. கடந்த முறையும் இந்த தொகுதியில் போட்டியிட்டு மோடி வெற்றி பெற்றதால் எளிதில் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பிரதமர் மோடி திடீர் பின்னடைவை சந்தித்து வருகிறார். காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராயை விட சுமார் 5 ஆயிரம் வாக்குகளுக்கு வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்துள்ளார்.  முன்னதாக கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வாரணாசி தொகுதியில் போட்டியிட்டு இமாலய வெற்றி பெற்றார் மோடி. மோடி 6 லட்சத்து 74 ஆயிரத்து 664 வாக்குகள் பெற்று நிலையில், சமாஜ் கட்சியின் சாலின் யாதவ் ஒரு லட்சத்து 95 ஆயிரத்து 159 வாக்குகள் கிடைத்தது.

 

Latest News