5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

”டிராமா வேண்டாம்.. முழக்கங்கள் வேண்டாம்” எதிர்க்கட்சிகளுக்கு மோடி கோரிக்கை!

18வது மக்களவை கூட்டத்தொடரின் முதல் அமர்வு இன்று தொடங்கியது. முன்னதாக, நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது பேசிய அவர், "18வது மக்களவை இன்று தொடங்குகிறது. உலகின் மிகப்பெரிய தேர்தல் மிகவும் பிரமாண்டமாகவும், கம்பீரமாகவும் நடத்தப்பட்டது. சுதந்திரத்திற்குப் பிறகு இரண்டாவது முறையாக மக்களவைத் தேர்தலும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது. எங்களுடைய நோக்கம், செயல்பாடு ஆகியவற்றுக்காகவே 3வது முறை மக்கள் வாய்ப்பளித்துள்ளனர்” என்றார்.

”டிராமா வேண்டாம்.. முழக்கங்கள் வேண்டாம்” எதிர்க்கட்சிகளுக்கு மோடி கோரிக்கை!
பிரதமர் மோடி
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 24 Jun 2024 11:48 AM

பிரதமர் மோடி கோரிக்கை: 18வது மக்களவை கூட்டத்தொடரின் முதல் அமர்வு இன்று தொடங்கியது. முன்னதாக, நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது பேசிய அவர், “18வது மக்களவை இன்று தொடங்குகிறது. உலகின் மிகப்பெரிய தேர்தல் மிகவும் பிரமாண்டமாகவும், கம்பீரமாகவும் நடத்தப்பட்டது. சுதந்திரத்திற்குப் பிறகு இரண்டாவது முறையாக மக்களவைத் தேர்தலும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது. எங்களுடைய நோக்கம், செயல்பாடு ஆகியவற்றுக்காகவே 3வது முறை மக்கள் வாய்ப்பளித்துள்ளனர். ஜனநாயகத்தில் இன்று ஒரு புகழ்பெற்ற நாள். சுதந்திரத்திற்குப் பிறகு முதல் முறையாக புதிய நாடாளுமன்ற கட்டடத்தில், பதவியேற்பு விழா நடக்கிறது.  இந்த குறிப்பிடத்தக்க நாளில், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து எம்.பி.க்களுக்கும் நான் மனமார்ந்த வரவேற்பைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். எதிர்க்கட்சிகளிடம் இருந்து நல்ல நடவடிக்கையை நாட்டு மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Also Read: ”வயநாடு மக்களின் அளவற்ற அன்பு” ராகுல் காந்தி எழுதிய உருக்கமான கடிதம்!

நாட்டின் சாமானிய குடிமக்களின் எதிர்பார்ப்புகளை எதிர்க்கட்சிகள் நிறைவேற்றுவார்கள் என்று நம்புகிறேன். ஜனநாயகத்தின் மாண்பைக் காக்க எதிர்க்கட்சிகள் நாடகம், முழுக்கங்களை நாடாளுமன்றத்தில் எழுப்ப வேண்டாம். மக்களுக்கு தேவையானதை நாடாளுமன்றத்தில் பேசுங்கள். நாட்டிற்கு ஒரு நல்ல எதிர்க்கட்சி. பொறுப்பான எதிர்க்கட்சி தேவை. இந்த 18வது மக்களவையில் வெற்றி பெற்ற எம்.பி.க்கள் சாமானியர்களின் இந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முயற்சிப்பார்கள் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.

நாளை ஜூன் 25ஆம் தேதி. இந்திய ஜனநாயகத்திற்கு களங்கம் ஏற்பட்டதன் 50ஆம் ஆண்டு நினைவு நாள். எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்ட ஜூன் 25ஆம் தேதி ஒரு கறுப்பு தினம். இந்திய அரசியலமைப்பு முற்றிலும் நிராகரிக்கப்பட்டது.  அரசியலமைப்பின் ஒவ்வொரு பகுதியும் துண்டு துண்டாக கிழிந்ததை இந்தியா ஒருபோதும் மறக்காது. நாடு சிறைச்சாலையாக மாற்றப்பட்டது. ஜனநாயகம் முற்றிலுமாக நசுக்கப்பட்டது. நமது அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாத்து, இந்திய ஜனநாயகம் மரபுகளைக் காக்கும் அதே வேளையில், இனி இந்தியாவில் இதுபோன்ற செயலைச் செய்ய யாரும் துணிய மாட்டார்கள் என்று நாட்டு மக்கள் தீர்மானம் எடுப்பார்கள்.

50 ஆண்டுகளுக்கு முன்பு நிறைவேற்றப்பட்ட, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, சாதாரண மக்களின் கனவுகளை நிறைவேற்றுவதற்கான தீர்மானத்தை எடுப்போம். கடந்த 10 ஆண்டுகளில், நாங்கள் எப்போதும் ஒரு பாரம்பரியத்தை நடைமுறைப்படுத்த முயற்சித்தோம். ஆட்சியை வழிநடத்த பெரும்பான்மை தேவை என்று நாங்கள் நம்புகிறோம். ஆனால் நாட்டை வழிநடத்துவதற்கு ஒருமித்த கருத்து மிகவும் முக்கியமானது. எனவே, நாட்டுக்கு சேவை செய்யவும் 140 கோடி மக்களின் கனவை நனவாக்கவும் எம்.பிக்கள் பாடுபட வேண்டும்” என்றார்.

Also Read: நீட் மறுதேர்வை எழுதாத 750 மாணவர்கள்.. அதிர்ச்சி கொடுத்த தேசிய தேர்வு முகமை!

Latest News