Loksabha Speaker Election: வரலாற்றில் முதல்முறை.. மக்களவை சபாநாயகர் பதவிக்கு தேர்தல்!

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், 18வது மக்களவை கூட்டத் தொடரின் முதல் அமர்வு நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று இடைக்கால சபாநாயகராக ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி பர்த்ருஹரி மஹ்தாப் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை இன்று குடியரசுத் தலைவர் பிறப்பித்துள்ளார். புதிய அரசாங்கம் அமைந்ததைத் தொடர்ந்து கூட்டப்பட்ட முதல் கூட்டத்தொடர் என்பதால் புதிய எம்பிக்கள் நேற்று பதவி ஏற்று கொண்டனர். இன்று 2வது நாளாக எம்பிக்கள் பதவியேற்று வருகின்றனர். இந்த நிலையில், புதிய சபாநாயகரை தேர்வு செய்வதற்கான தேர்தல்  நாளை நடைபெற உள்ளது.

Loksabha Speaker Election: வரலாற்றில் முதல்முறை.. மக்களவை சபாநாயகர் பதவிக்கு தேர்தல்!

மக்களவை சபாநாயகர் தேர்தல்

Updated On: 

25 Jun 2024 14:37 PM

மக்களவை சபாநாயகர் பதவிக்கு தேர்தல்: பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், 18வது மக்களவை கூட்டத் தொடரின் முதல் அமர்வு நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று இடைக்கால சபாநாயகராக ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி பர்த்ருஹரி மஹ்தாப் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை இன்று குடியரசுத் தலைவர் பிறப்பித்துள்ளார். புதிய அரசாங்கம் அமைந்ததைத் தொடர்ந்து கூட்டப்பட்ட முதல் கூட்டத்தொடர் என்பதால் புதிய எம்பிக்கள் நேற்று பதவி ஏற்று கொண்டனர். இன்று 2வது நாளாக எம்பிக்கள் பதவியேற்று வருகின்றனர். இந்த நிலையில், புதிய சபாநாயகரை தேர்வு செய்வதற்கான தேர்தல்  நாளை நடைபெற உள்ளது. இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் முதல்முறையாக மக்களவை சபாநாயகர் பதவிக்கு தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தல் நாளை காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.

Also Read: வருமான வரி விலக்கு.. மத்திய பட்ஜெட்டில் இடம்பெற போகும் முக்கிய அம்சம் என்ன?

ஓம் பிர்லா vs கொடிக்குன்னில் சுரேஷ்:

பொதுவாக சபாநாயகர் பதவிக்கு தேர்தல் நடத்தப்படுவதில்லை. ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் ஒருங்கிணைந்து ஒருமனதாக போட்டியின்றி ஒருவரைத் தேர்ந்தெடுப்பது மரபாகும். ஆனால், துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிகளுக்கு வழங்க பாஜக மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதனால், சபாநாயகர் பதவிக்கு தேர்தல் நடத்தும் நிலை உருவாகியுள்ளது. மக்களவை சபாநாயகர் பதவியில் உடன்பாடு ஏற்படாததை தொடர்ந்து, பாஜகவும், காங்கிரஸ் கட்சியும் வேட்பாளர்களை அறிவித்துள்ளன.

அதன்படி, மக்களவை சபாநாயகர் பதவிக்கு தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஓம் பிர்லாவும், I.N.D.I.A கூட்டணி சார்பில் கொடிக்குன்னில் சுரேஷூம் போட்டியிடுகின்றனர். I.N.D.I.A கூட்டணி சார்பில் கொடிக்குன்னில் சுரேஷ் வேட்புமனு தாக்கல் செய்தபோது திமுக எம்.பி. ஆ.ராசா, காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். அதே சமயம், என்டிஏ கூட்டணி சார்பல் ஓ.பீர்லா வேட்பு மனு தாக்கல் செய்தபோது உள்துறை அமைச்சர் அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் இருந்தனர்.

மக்களவை சபாநாயகர் தேர்வு குறித்து பேசிய ராகுல் காந்தி, “எதிர்க்கட்சிகளுக்கு துணை சபாநாயகர் பதவியை வழங்கினால், மக்களவை சபாநாயகர் தேர்வில் அரசுக்கு ஆதரவளிப்போம். மக்களவை துணை சபாநாயகர் பதவி எதிர்க்கட்சிகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதே நாடாளுமன்றத்தின் மரபு. துணை சபாநாயகர் பதவி எதிர்க்கட்சிகளுக்கு கொடுத்தால் மட்டுமே நாங்கள் ஆதரவு தெரிவிப்போம் என ராஜ்நாத் சிங்கிடம் தெளிவாக கூறிவிட்டோம்” என்றார்.

சபாநாயகர் தேர்தல் எப்படி நடக்கும்?

மக்களவையில் மொத்தம் 543 எம்.பிக்கள் உள்ளன. இதில் சபாநாயர் பதவிக்கு பெரும்பான்மையாக 272 எம்.பிக்களின் ஆதரவு வேண்டும். அதாவது, 272 அல்லது அதற்கு மேற்பட்ட எம்.பிக்களின் ஆதரவு உள்ளதோ அவர்கள் சபாநாயகராக தேர்வு செய்யப்படுவார். எம்.பிக்களின் எண்ணிக்கையை கணக்கிட்டு இடைக்கால சபாநாயகர் பர்த்ருஹரி மஹ்தாப் முடிவை அறிவிப்பார். தற்போதைய சூழலில், பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணிக்கு 293 எம்.பிக்களின் ஆதரவு உள்ளது. அதே சமயம், I.N.D.I.A கூட்டணிக்கு 236 எம்.பிக்கள் மட்டுமே உள்ளன. இதனால், பாஜக கூட்டணியின் வேட்பாளர் ஓம் பிர்லா நாளைய தேர்தலில் வென்று மீண்டும் மக்களவை சபாநாயகராக பதவியேற்க அதிக வாய்ப்புள்ளது என்று தெரிகிறது. ஆனால், ஓம் பிர்லாவுக்கு பதில் கொடிக்குன்னில் சுரேஷுக்கு வாக்களித்ததால் நிலைமை என்பது தலைகீழாக மாறும். இதனால் நாளைய சபாநாயகர் தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Also Read: முதல் மழைக்கே தாங்காத ராமர் கோயில்.. மேற்கூரையில் கசிவு – தலைமை அர்ச்சகர்..!

இணையத்தை கலக்கும் பார்வதியின் நியூ லுக்
சன் டிவியா? விஜய் டிவியா? இந்த வாரம் டிஆர்பி-யில் முந்தியது யார்
மன அழுத்த பாதிப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி?
குளிர்காலத்தில் நாம் செல்ல முடியாத இந்தியாவின் இடங்கள்!