வரலாற்றில் இணையும் மோடி.. நீண்ட கால பிரதமர்களின் லிஸ்ட் இதோ!

Prime Ministers List: நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக 240 இடங்களில் வென்ற நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்ற குழுத் தலைவராக மோடி தேர்ந்தெடுக்கப்பட்டதை தொடர்ந்து, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதை அடுத்து, இன்று மூன்றாவது முறையாக மோடி பதவியேற்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் குடியரசுத் தலைவர் மாளிகையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 3வது முறையாக நாட்டின் பிரதமராக மோடி இன்று இரவு 7.15 மணிக்கு பதவி ஏற்க உள்ளார். இதில், பிரதமர் மோடிக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்க உள்ளார்.

வரலாற்றில் இணையும் மோடி.. நீண்ட கால பிரதமர்களின் லிஸ்ட் இதோ!

மோடி-ஜவஹர்லால் நேரு-இந்திரா காந்தி

Updated On: 

09 Jun 2024 10:17 AM

மோடி பதவியேற்பு விழா: நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக 240 இடங்களில் வென்ற நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்ற குழுத் தலைவராக மோடி தேர்ந்தெடுக்கப்பட்டதை தொடர்ந்து, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதை அடுத்து, இன்று மூன்றாவது முறையாக மோடி பதவியேற்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் குடியரசுத் தலைவர் மாளிகையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 3வது முறையாக நாட்டின் பிரதமராக மோடி இன்று இரவு 7.15 மணிக்கு பதவி ஏற்க உள்ளார். இதில், பிரதமர் மோடிக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்க உள்ளார். மோடியுடன் சுமார் 30 அமைச்சர்கள் இன்று பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நாட்டின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேருவுக்கு பிறகு தொடர்ந்து 3வது முறையாக பிரதமர் பதவி ஏற்பவர் என்று பெருமையை மோடி பெறுகிறார்.

நீண்ட கால பிரதமர்களின் லிஸ்ட்:

இந்த நிலையில், இந்தியாவில் நீண்ட கால பிரதமர்கள் யார் என்ற பட்டியலை அலசி பார்ப்போம். நாட்டின் மிக நீண்ட காலம் பிரதமராகப் பதவி வகித்தவர் ஜவஹர்லால் நேரு. ஏறத்தாழ 17 ஆண்டுகள் அவர் பிரதமர் பதவியில் இருந்தார். அதாவது, நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு 16 ஆண்டுகள் 286 நாட்கள் பிரதமர் பதவியில் இருந்த நிலையில், இவருக்கு அடுத்த படியாக அவரது மகள் இந்திரா காந்தி 11 ஆண்டுகளாக பிரதமர் பதவியை அலங்கரித்தார். அதாவது, 11 ஆண்டுகள் 59 நாட்கள் பிரதமராக இருந்தார். இவர்களுக்கு அடுத்தப்படியாக நரேந்திர மோடி அடைந்துள்ளார். 2014ஆம் ஆண்டு மே 26ஆம் தேதி நாட்டின் 14வது பிரதமராக பதவியேற்றார் நரேந்திர மோடி. தொடர்ந்து இரண்டாவது முறையாக 2019ஆம் ஆண்டு மே 30ஆம் தேதி மீண்டும பிரதமராக பொறுப்பேற்றார். தற்போதைய நிலவரப்படி, நரேந்திர மோடி 10 ஆண்டுகள் 8 நாட்களுக்கு மேல் பிரதமர் பதவியில் இருந்து வருகிறார்.

இவருக்கு அடுத்தபடியாக மன்மோகன் சிங் 10 ஆண்டுகள் 8 நாட்கள் பிரதமர் பதவியில் இருந்தார். மேலும், அடல் பிஹாரி வாஜ்பாய் 6 ஆண்டுகள் 80 நாட்கள் பிரதமர் பதவியில் இருந்த நிலையில், ராஜீவ் காந்தி 5 ஆண்டுகள் 32 நாட்கள் பிரதமர் பதவியில் இருந்தார். மேலும், பிவி நரசிம்ம ராவ் 4 ஆண்டுகள் 330 நாட்களும், மொரார்ஜி தேசாய் 2 ஆண்டுகள் 126 நாட்களும், லால் பகதூர் சாஸ்திரி 1 வருடம் 216 நாட்களும், விஸ்வநாத் பிரதாப் சிங் 343 நாட்களும், இந்தர் குமார் குஜரால் 332 நாட்களும், சந்திர சேகர் 223 நாட்களும், சரண் சிங் 170 நாட்கள் பிரதமர் பதிவியில் இருந்தனர்.

அதேபோல, காங்கிரஸ் சார்பில் 6 பேர் பிரதமர் பதிவியை அலங்கரித்தனர். ஜவர்ஹர்லால் நேரு, லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, நரசிம்ம ராவ், மன்மோகன் சிக், குல்சாரிலால் நந்தா (தற்காலிக பிரதமர்) ஆகியார் காங்கிரஸ் சார்பில் பிரதமராக இருந்தனர். பாஜக சார்பில் 2 பேர் பிரதமர் பதவியில் இருந்தனர். பாஜகவை சேர்ந்த வாஜ்பாய் 6 ஆண்டுகள் 80 நாட்களாக பதவி வகித்தார். தற்போது மோடி 10 ஆண்டுகளுக்கு மேல் பதவியில் இருக்கிறார்.

Also Read: உச்சக்கட்ட எதிர்பார்ப்பு.. இந்தியாவை ஆளப்போவது யார்? நாளை வாக்கு எண்ணிக்கை!

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!