PM Modi Singapore Visit: புருனேவிற்கு செல்லும் முதல் இந்திய பிரதமர்.. 3 நாள் பயணத்தின் முக்கியத்துவம் என்ன?
பிரதமர் லாரன்ஸ் வோங்கின் அழைப்பின் பேரில் மோடி சிங்கப்பூர் செல்கிறார். “இந்தியா-சிங்கப்பூர் மூலோபாய கூட்டாண்மையின் முன்னேற்றத்தை தலைவர்கள் மதிப்பாய்வு செய்வார்கள் மற்றும் பரஸ்பர ஆர்வமுள்ள பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்த கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வார்கள்” என்று வெளிவிவகார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பிரதமர் மோடி புருனே பயணம்: பிரதமர் நரேந்திர மோடி, நாளைசெப்டம்பர் 3 ஆம் தேதி முதல் செப்டம்பர் 5 ஆம் தேதி வரை 3 நாள் பயணமாக புருனே மற்றும் சிங்கப்பூருக்கு அரசுமுறை பயணம் மேற்கொள்கிறார். இந்தியாவும் புருனே நாட்டிற்கும் இடையே இருக்கும் 40 ஆண்டுகால் உறவை மேம்படுத்தும் வகையில் இந்த பயணம் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 40 ஆண்டுகளில் முதல் முறையாக இந்திய பிரதமர் புருனே நாட்டிற்கு பயணம் மேற்கொள்வது இதுவே முதன்முறையாகும். 3 மற்றும் 4 ஆம் தேது புருனேவிற்கும், 4 மற்றும் 5 ஆம் தேதி சிங்கப்பூருக்கும் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
Also Read: ரஷ்ய உளவாளி பெலுகா திமிங்கலம்.. நார்வேயில் சடலமாக கண்டெடுப்பு..வெளிநாடுகளின் சதி காரணமா?
பிரதமர் லாரன்ஸ் வோங்கின் அழைப்பின் பேரில் மோடி சிங்கப்பூர் செல்கிறார். “இந்தியா-சிங்கப்பூர் மூலோபாய கூட்டாண்மையின் முன்னேற்றத்தை தலைவர்கள் மதிப்பாய்வு செய்வார்கள் மற்றும் பரஸ்பர ஆர்வமுள்ள பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்த கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வார்கள்” என்று வெளிவிவகார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
Starting shortly!
Tune in for a special briefing on Prime Minister’s visit to Brunei and Singapore:https://t.co/yvvDLaB5EM
— Randhir Jaiswal (@MEAIndia) September 2, 2024
புருனே பயணம், அதன் ஆட்சியாளரும் பிரதமருமான சுல்தான் ஹாஜி ஹசனல் போல்கியாவின் அழைப்பின் பேரில், போர்னியோ தீவில் அமைந்துள்ள இந்தியாவிற்கும் புருனேவிற்கும் இடையே இராஜதந்திர உறவுகளை நிறுவியதன் 40 வது ஆண்டு நிறைவை ஒட்டி மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் ‘ஆக்ட் ஈஸ்ட்’ கொள்கை மற்றும் இந்தோ-பசிபிக் பற்றிய அதன் பார்வையில் புருனே ஒரு முக்கிய பங்குதாரராக இருப்பதைக் குறிப்பிட்ட வெளியுறவுத்துறை அமைச்சகம், பாதுகாப்பு ஒத்துழைப்பு, வர்த்தகம் மற்றும் முதலீடு, எரிசக்தி, விண்வெளி தொழில்நுட்பம், புருனே உடனான தற்போதைய துறைகளில் இந்தியாவின் ஒத்துழைப்பை இந்த பயணம் வலுப்படுத்தும் என்று குறிப்பிட்டுள்ளது.
Also Read: இனி வாய்ஸ் மூலமே பணம் அனுப்பலாம்.. டை பண்ண வேண்டிய அவசியம் இல்லை.. கூகுள் பே அதிரடி!
சிங்கப்பூர் பயணத்தின் போது பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் தர்மன் சண்முகரத்னத்துடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார். தொழில் அதிபர்களையும் சந்திக்கவுள்ளார்.
இந்த வார தொடக்கத்தில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் , வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் ரயில்வே மற்றும் ஐடி அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் ஆகியோர் சிங்கப்பூரில் 26 ஆகஸ்ட் 2024 அன்று நடைபெற்ற 2வது இந்தியா-சிங்கப்பூர் அமைச்சர்கள் வட்டமேசையில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.