திடீரென வெடித்து சிதறிய பாய்லர்.. அலறிய தொழிலாளர்கள்.. 4 பேர் பலியான சோகம்!
மகாராஷ்டிராவில் உள்ள ரசாயண ஆலையில் பாய்லர் வெடித்ததில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாய்லர் வெடித்ததில் தீ பற்றி எரிந்தது. இந்த தீ அருகில் இருந்த இரண்டு கட்டடங்களுக்கும் பரவியது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. இந்த விபத்தில் காயம் அடைந்த 30க்கும் மேற்பட்டோருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
தானேவில் பாய்லர் வெடித்து விபத்து: மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தின் டோம்பிவிலி என்ற பகுதியில் ரசாயண தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் மதியம் 1.40 மணியளவில் பயங்கர சத்தம் கேட்டிருக்கிறது. அப்போது தான் பாய்லர் வெடித்தது தெரியவந்துள்ளது. பாய்லர் வெடித்ததில் தீ பற்றி எரிந்தது. இந்த தீ அருகில் இருந்த இரண்டு கட்டடங்களுக்கும் பரவியது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. முதலில் ஆலையின் நான்கு பாயிலர்கள் வெடித்து தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. அதன்பிறகு, ரசாயண கலந்த டிரம்கள் வெடித்து அருகில் உள்ள வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கின. அதோடு, தீ பற்றியும் எரிந்தது.
Also Read: பாலைவன மணலில் அப்பளம் பொரிக்கும் ராணுவ வீரர்.. வைரலாகும் வீடியோ!
4 பேர் உயிரிழப்பு:
இதனால், அப்பகுதியில் முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. பாய்லர் ஒரு கிலோமீட்டர் தொலைவில் இருந்து கேட்கும் அளவுக்கு சத்தமாக இருந்ததாக நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்தார். இதுகுறித்து அறிந்ததம் சம்பவ இடத்திற்கு மீட்பு படையினர் வந்தனர். அங்கு வந்த அவர்கள் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த விபத்தில் 30க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். மேலும் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். எட்டுக்கும் மேற்பட்ட தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
#WATCH | Maharashtra: Fire breaks out due to a boiler explosion in a factory located in the MIDC area in Dombivli. More than four fire tenders rushed to the site.
Details awaited. pic.twitter.com/gsv1GCgljR
— ANI (@ANI) May 23, 2024
இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள மகாராஷ்டிராவின் பொதுப்பணித்துறை அமைச்சர் ரவீந்திர சவான், சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மக்கள் பீதியடைய வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். மேலும், ”இந்த விபத்து தொடர்பாக, 8 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன” என்றும் பதிவிட்டிருந்தார். தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
Also Read: முத்தம் கொடுத்தது தப்பா? மணமகனை தாக்கிய மணமகள் குடும்பம்..உத்தர பிரசேதத்தில் ரணகளம்!