Assembly Elections: ஜார்க்கண்ட், மகாராஷ்டிராவுக்கு எப்போது தேர்தல்? தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

Maharashtra Jharkhand Assembly Election: மகராஷ்டிரா, ஜார்க்கண்ட் தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, மகாராஷ்டிரா மாநிலத்திற்கு  ஒரே கட்டமாக நவம்பர் 20ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜார்க்கண்ட மாநிலத்திற்கு  2 கட்டமாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Assembly Elections: ஜார்க்கண்ட், மகாராஷ்டிராவுக்கு எப்போது தேர்தல்? தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

தேர்தல் ஆணையம்

Updated On: 

15 Oct 2024 17:07 PM

மகராஷ்டிரா, ஜார்க்கண்ட் தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா சட்டசபைக்கு வருகிற நவம்பர் 26ஆம் தேதியும், 81 தொகுதிகளை கொண்ட ஜார்க்கண்ட் சட்டபேரவையின் பதவிக்காலம் ஜனவரி 5ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த நிலையில் தான் மகராஷ்டிரா, ஜார்க்கண்ட் மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட சட்டப்பேரவை தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, மகாராஷ்டிரா மாநிலத்திற்கு   ஒரே கட்டமாக நவம்பர் 20ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜார்க்கண்ட மாநிலத்திற்கு  2 கட்டமாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,  நவம்பர் 13, 20ஆம் தேதிகளில் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா தேர்தல் களம்:

மகாராஷ்டிராவில் மொத்தம் 288 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இங்கு ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 145 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். மகாராஷ்ராவில் தற்போது ஏக்நாத் ஷிண்டே சிவசேனா, பாஜக, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது.

இதற்கு எதிராக பிரதான எதிர்க்கட்சி கூட்டணியான உத்தவ் தாக்கரே சிவசேனா, காங்கிரஸ், சரத் பவார் தேசியவாத காங்கிரஸ் உள்ளது. கடந்த 2019 தேர்தலில் மொத்தமுள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் 105 இடங்களில் வென்று பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. அதன் கூட்டணி கட்சியான சிவசேனா 56 இடங்களில் வெற்றி பெற்றது.  பாஜக-சிவசேனா கூட்டணி ஆட்சி அமைக்க பெரும்பான்மை பெற்றது.

Also Read: மகளை கொலை செய்ய முடிவெடுத்த தாய்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்!

சிவசேனாவும் பாஜகவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டு இருந்தாலும் முதலமைச்சர் பதவியால் வந்த சண்டையில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணியில் இணைந்து சிவசேனா ஆட்சி அமைத்தது. ஆனால், சில மாதங்களிலேயே சிவசேனா இரண்டாக உடைந்து ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணி பாஜகவுடன் இணைந்து உத்தவ் தாக்கரே அரசை கவிழ்த்தது. பின்னர், பாஜகவுடன் கூட்டணி அமைத்து புதிய அரசாங்கத்தை ஏக்நாத் ஷிண்டே அமைத்தார்.

அதன்பிறகு, தேசியவாத காங்கிரஸ் கட்சியும் இரண்டாக உடைந்து அஜித் பவார் தலைமையிலான அணி பாஜக கூட்டணியில் இணைந்தது. இந்த நிலையில், புதிய அரசாங்கத்தை தேர்வு செய்ய சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மகாராஷ்டிராவில் ஒரே கட்டமாக  நவம்பர் 20ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய அக்டோபர் 20ஆம் தேதி தொடங்கி 29ஆம் தேதி முடிவடைகிறது. வேட்பு மனு பரிசீலனை அக்டோபர் 30ஆம் தேதியும், வேட்புமனு திரும்பு பெறவது நவம்பர் 4ஆம் தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை நவம்பர் 23ஆம் தேதி நடைபெற உள்ளது.

அன்றைய தினம் மகாராஷ்ராவில் யார் ஆட்சியை பிடிக்கிறார்கள் என்பது தெரிந்து விடும்.  மகாராஷ்டிராவில் மொத்தம் 9.63 கோடி வாக்காளர்கள் உள்ளனர். 4.97 கோடி ஆண் வாக்காளர்களும், 4.66 பெண் வாக்காளர்களும் உள்ளன.

ஜார்க்கண்ட தேர்தல் களம்:

ஜார்க்கண்ட் மாநிலத்தல் மொத்தம் 81 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இங்கு ஒரு கட்சி தனித்து ஆட்சி அமைக்க 41 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதல்வர்க தற்போது ஹேமந்த் சோரன் இருந்து வருகிறார். கடந்த 2019ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் ஹேமந்த் சோரனின் முக்தி மோர்ச்சா கட்சி 30 தொகுதிகளிலும், காங்கிரஸ் 16 தொகுதிகளிலும் வென்றது.

அதேபோல, பாஜக 25 தொகுதிகளை கைப்பற்றியது. கடந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் பொரும்பான்மை கிடைக்கவில்லை. இதனை அடுத்து, ஜார்க்கண்டில் முக்தி மோர்ச்சா மற்றும் காங்கிரஸ் கட்சி கூட்டணி ஆட்சி அமைத்தது. ஆட்சி அமைக்க 41 எம்எல்ஏக்கள் தேவையான நிலையில், இந்த கூட்டணியில் 46 எம்எல்ஏக்கள் இருந்தனர்.

இதனை அடுத்து முதல்வராக ஹேமந்த் சோரன் பொறுப்பேற்றார். பாஜக பிரதான எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் தான் புதிய அரசாங்கத்தை தேர்வு செய்ய சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.  ஜார்க்கண்ட மாநிலத்திற்கு  2 கட்டமாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,  நவம்பர் 13, 20ஆம் தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது.

முதல் கட்ட தேர்தலுக்கு அக்டோபர் 25ஆம் தேதி வேட்புமனு தாக்கல் கடைசி நாளாகும். இரண்டாம் கட்ட தேர்தலுக்கு 29ஆம் தேதி கடைசி தேதியாகும். முதல் கட்ட தேர்தலுக்கு வேட்பு மனு பரிசீலனை அக்டோபர் 28, இரண்டாம் கட்டத்திற்கு அக்டோபர் 30ஆம் தேதி நடைபெறும். முதல் கட்ட தேர்தலுக்கு அக்டோபர் 31ஆம் தேதி வேட்புமனுவை திரும்ப பெறலாம்.

Also Read: ”வன்முறைக்கு இடமில்லை” பாபா சித்திக் சுட்டுக் கொலை.. முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

இரண்டாம் கட்டத்திற்கு நவம்பர் 1ஆம் தேதி வேட்புமனுவை திரும்ப பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  வாக்கு எண்ணிக்கை நவம்பர் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் ஜார்க்கண்ட மாநிலத்தில் யார் ஆட்சியை பிடிக்கிறார்கள் என்பது தெரிந்து விடும்.

ஹிந்தியில் காஜல் அகர்வால் நடித்த முதல் படம் எது தெரியுமா?
மாளவிகாவிற்கு பிடித்த நடிகர் யார் தெரியுமா?
குளிர்காலத்தில் சாத்துக்குடி ஜூஸ் குடிக்கலாமா?
பலாப்பழ கொட்டையில் இத்தனை நன்மைகளா?