Shocking Video: ”மாட்டுக்கறி இருக்கா?” முஸ்லீம் முதியவரை கொடூரமாக தாக்கிய கும்பல்.. ஓடும் ரயிலில் பரபரப்பு!
ரயிலில் மாட்டிறைச்சி கொண்டு சென்றதாக சந்தேகத்தின் பேரில் முதியவர் ஒருவர் சக பயணிகளால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இது சம்பந்தமான வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர சம்பவம் மகாராஷ்டிராவில் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர் ஹாஜி அஷ்ரப் முனியர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.
முதியவரை கொடூரமாக தாக்கிய கும்பல்: ரயிலில் மாட்டிறைச்சி கொண்டு சென்றதாக சந்தேகத்தின் பேரில் முதியவர் ஒருவர் சக பயணிகளால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இது சம்பந்தமான வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர சம்பவம் மகாராஷ்டிராவில் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவம் கடந்த வாரம் நடந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள இக்த்புரி அருகே விரைவு ரயிலில் மாட்டிறைச்சி கொண்டு சென்றதாக சந்தேகத்தின் பேரில் இஸ்லாமிய முதியவரை சக பயணிகள் கொடூரமாக தாக்கி உள்ளனர். இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரயிலில் 10க்கும் மேற்பட்டோர் சேர்ந்து இஸ்லாமிய முதியவரை தாக்குவதும், தகாத வார்த்தைகளால் பேசுவதும் போன்று வீடியோவில் பதிவாகி உள்ளது. முதலில் இருக்கை தொடர்பாக வாக்குவாதம் தொடங்கியது.
அந்த முதியவரை சுற்றி வளைத்து பலர் மிரட்டுவது வீடியோவில் தெரிகிறது. மாட்டிறைச்சி இருக்கா என்று 10 பேர் கொண்ட குழு கேட்டு இஸ்லாமிய முதியவரை மிரட்டுகிறது. தொடர்ந்து அவரை தாக்கவும் செய்கின்றனர். முதியவர் மிகவும் பயத்தில் இருக்கையில் அமர்ந்திருக்கிறார்.
அது ஆட்டு இறைச்சி என்றும் மாட்டிறைச்சி அல்ல என்றும் அந்த முதியவர் கூறுவது வீடியோவில் பதிவாகி உள்ளது.
Haji Ashraf Munyar from a village in Jalgaon District travelling in a train to Kalyan to meet his daughter was abused and badly beaten up by goons in a train near Igatpuri alleging him of carrying beef. pic.twitter.com/uOr3vlqBqB
— Mohammed Zubair (@zoo_bear) August 30, 2024
8 பேர் மீது வழக்குப்பதிவு:
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி வைரலானதை அடுத்து, ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக 5க்கும் மேற்பட்ட நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ரயில்வே போலீசார் கூறுகையில், “வீடியோ குறித்து தெரியவந்ததை அடுத்து, பாதிக்கப்பட்டவரை அடையாளம் கண்டுள்ளோம். தாக்குதலில் ஈடுபட்டவர்களில் சிலர் அடையாளம் காணப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது” என்றார்.
Also Read: வடை பாவால் வந்த வினை.. பட்டப்பகலில் தம்பதிக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்.. பரபர வீடியோ!
மேலும், இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர் ஹாஜி அஷ்ரப் முனியர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. ஜல்கான் மாவட்டத்தில் அவர் வசித்து வருகிறார். கல்யாணில் உள்ள தனது மகளின் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது, இகத்புரி அருகே மாட்டிறைச்சி எடுத்துச் சென்றதாக சந்தேகத்தின் பேரில் சக பயணிகள் அவரை தாக்கியுள்ளர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.