5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Crime: பள்ளி சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை.. வெடித்த போராட்டம்.. பள்ளிகள் சூறை.. பதற்றத்தில் மகாராஷ்டிரா!

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டததில் மழலையர் பள்ளியில் படித்த இரண்டு சிறுமிகளுள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை கண்டித்து நேற்று நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது. பள்ளியைச் சூறையாடிய போராட்டக்காரர்கள், உள்ளூர் ரயில் நிலையத்தில் நடத்திய ரயில் மறியலின்போது கல் வீச்சிலும் ஈடுபட்டனர். இதனால் போலீசார் தடியடி நடத்தினர். மேலும், அப்பகுதியில் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.

Crime: பள்ளி சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை.. வெடித்த போராட்டம்.. பள்ளிகள் சூறை.. பதற்றத்தில் மகாராஷ்டிரா!
போராட்டம்
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 21 Aug 2024 08:11 AM

மகாராஷ்டிராவில் பதற்றம்:  மகாராஷ்டிரா மாவட்டம் தானே மாவட்டத்தில் உள்ள பத்லாபூரில் உள்ள பள்ளியில் இரண்டு சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. பத்லாபூரில் உள்ள மழலையர் பள்ளியில் மூன்று மற்றும் நான்கு வயதுடைய இரண்டு சிறுமிகளை பள்ளியின் உதவியாளர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பத்லாப்பூர் காவல் நிலையத்தில புகார் அளிக்க சென்றபோது 11 மணி நேரம் காத்திருக்க வைத்தாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்து அம்மாநிலத்தில் பெரும் பேராட்டம் நடந்து வருகிறது. பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டுள்ளனர். அதேநேரத்தில் வேறு சிலர் பத்லாபூர் ரயில் நிலையத்துக்கு சென்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று காலை முதல் இந்த போராட்டம் நடந்தது.

Also Read: ஓடும் பேருந்தில் பிறந்த குழந்தைக்கு அடித்த ஜாக்பாட்.. என்ன தெரியுமா?

பள்ளியை சூறையாடிய பேராட்டக்காரர்கள் உள்ளூர் ரயில் நிலையத்தில் நடத்திய ரயில் மறியலின்போது கல் வீச்சிலும் ஈடுபட்டனர். பேராட்டக்கார்களில் சிலர் பள்ளியின் கேட்டை உடைத்து வகுப்பறைகளில் இருந்து ஜன்னல் கண்ணாடிகள், பெஞ்சுகள் மற்றும் கதவுகளை உடைத்து சேதப்படுத்தினர். இதையடுத்து, காவல்துறை மற்றும் பிற அதிகாரிகள் பேராட்டக்கார்களுடுன் நடத்திய சமதானப் பேச்சுவார்த்தை பலனளிக்கவில்லை. போராட்டத்தை களைக்க போலீசார் தடியடி நடத்தினர். மேலும், இணைய சேவைகள் அங்கு நிறுத்தப்பட்டுள்ளது.

சிறப்பு விசாரணை குழு:

ஆகஸ்ட் 13ஆம் தேதி சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டனர். பாதிக்கப்பட்ட சிறுமிகளில் ஒருவர் ஆகஸ்ட் 16ஆம் தேதி தனது பெற்றோரிடம் நடந்த கொடுமையை விவரித்தார். இதனால் பதறிப்போன பெற்றோர், சிறுமிகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். சிறுமிகளை பரிசோதித்த மருத்துவர் பிறப்பு உறுப்பில் இருந்த காயங்களை வைத்து சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை உறுதி செய்துள்ளார்.

Also Read: கொட்டிய கனமழை.. பைக்கோடு சாலையில் அடித்துச்செல்லப்பட்ட நபர்!

இதை அடுத்து, ஆகஸ்ட் 17ஆம் தேதி கைது செய்யப்பட்டார். போக்குசோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அந்த பள்ளியில் படிக்கும் உதவியாளர்மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.  இது தொடர்பாக பள்ளி முதல்வர், வகுப்பு ஆசிரியர், பெண் பணியாளர் ஆகியோரை பள்ளி நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது.  இவ்விவகாரத்தை விசாரிக்க காவல்துறை ஐஜி ஆர்த்தி சிங் தலைமையில் சிறப்பு விசாரணை குழுவை மகாராஷ்டிரா அரசு அமைத்துள்ளது.

Latest News