பாராளுமன்றத்தில் பாகுபாடு, ஸ்கூல் ஹெட்மாஸ்டர்.. தங்கரை ஒரு பிடிபிடித்த கார்கே!
Mallikarjun Kharge vs Jagdeep Dhankhar: காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, மாநிலங்களவை தலைவரும், துணைக் குடியரசுத் தலைவருமான ஜக்தீப் தங்கரை ஹெட் மாஸ்டர் என விமர்சித்துள்ளார். அப்போது அவர் அரசின் செய்தித் தொடர்பாளர் போல் செயல்படுகிறார் என்றும் குற்றஞ்சாட்டினார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, மாநிலங்களவை தலைவர் ஜக்தீப் தங்கரை ஸ்கூல் ஹெட்மாஸ்டர் என விமர்சித்தார். அப்போது, 1952 முதல் தற்போது வரை இந்திய துணை ஜனாதிபதிக்கு எதிராக எந்தத் தீர்மானமும் கொண்டு வரப்படவில்லை என்றார். மேலும், மாநிலங்களவை தலைவர் ஒருபோதும் அரசியலில் ஈடுபடவில்லை என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கூறினார். தொடர்ந்து, தற்போது பாராளுமன்றத்தில் பாகுபாடு நிலவுவதாகவும் கார்கே குற்றஞ்சாட்டினார். ஜக்தீப் தங்கருக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் போது காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே புதன்கிழமை (டிச.11, 2024) இவ்வாறு பேசினார்.
மாநிலங்களவையில் அரசியலுக்கு முன்னுரிமை
தொடர்ந்து பேசிய கார்கே, மாநிலங்களைவயில் அரசியலுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்றார். இது குறித்து பேசிய அவர், “மாநிலங்களவையில் அரசியல் சாசன விதிகளை விட அரசியல் முன்னுரிமை பெற்றுள்ளது. மாநிலங்களவை தலைவர் பாரபட்சமான நடத்தையில் ஈடுபடுகிறார். அவரது நடத்தை பதவியின் கண்ணியத்திற்கு முரணாக உள்ளது” என்றார்.
தொடர்ந்து, “எதிர்க்கட்சிகளை குறிவைத்து இன்றைய அரசாங்கத்தை புகழந்து பேசுகிறார்” என்றார். முன்னதாக காங்கிரஸ் கூட்டணியில் உள்ள எதிர்க்கட்சிகள் ஜக்தீப் தங்கருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தன.
இந்தத் தீர்மானத்தில் ஜக்தீப் தங்கர் ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறார். அவரின் நடத்தைகள் அரசியல் சாசன அமைப்பு விதிகளுக்கு முரணாக உள்ளன எனத் தெரிவித்து இருந்தன.
இதையும் படிங்க : பிரதமர் மோடி வீடு முன்பு திரண்ட பாலிவுட் பிரபலங்கள்.. காரணம் இதுவா?
ஸ்கூல் ஹெட்மாஸ்டர்
இதற்கிடையில் மல்லிகார்ஜுன கார்கே, மாநிலங்களவை தலைவரை ஸ்கூல் ஹெட்மாஸ்டர் என விமர்சித்தார். அப்போது கார்கே, “மாநிலங்களவை தலைவர் பள்ளி தலைமை ஆசிரியர் போல் நடக்கிறார். அனுபவம் வாய்ந்த எதிர்க்கட்சிகளிடம் கூட பரப்புரையில் ஈடுபடுகிறார். அவர் அரசின் செய்தித் தொடர்பாளர் போல் செயல்படுகிறார்” என்றார்.
இந்த பாராளுமன்ற குளிர்கால கூடடத்தொடர் டிச.20ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கிடையில் ஜக்தீப் தங்கருக்கு எதிராக நோட்டீஸ் அளிக்கப்பட்டது. இதுகுறித்து, அரசியலமைப்பின் 67 (பி) பிரிவின்படி அளிக்கப்படுகிறது.
இதன்படி, தீர்மானத்தின் மீது முதலில் மாநிலங்களவையிம், தேவைப்பட்டால், மக்களவையிலும் தாக்கல் செய்யப்பட வேண்டும். இதன்மீது உறுப்பினர்கள் வாக்களிக்கப்பட வேண்டும். மேலும், குறித்து குறைந்தபட்சம் 14 நாள்களுக்கு முன்பே முன்னறிவிப்பு கொடுக்கப்பட வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ஜக்தீப் தங்கருக்கு எதிராக தீர்மானம்.. எதிர்க்கட்சிகள் செக்மேட்.. அரசியலமைப்பு விதி என்ன?