மோடி பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் கார்கே பங்கேற்பா? தேசிய அரசியலில் பரபரப்பு!
மோடியின் காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான I.N.D.I.A கூட்டணி 234 இடங்களை கைப்பற்றியிருக்கிறது. காங்கிரஸ் 99 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. எனவே, மோடி பதவியேற்கும் விழாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் கார்கே கலந்து கொள்வார் என்று காங்கிரஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோடி பதவியேற்பு விழா: நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக 240 இடங்களில் வென்ற நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்ற குழுத் தலைவராக மோடி தேர்ந்தெடுக்கப்பட்டதை தொடர்ந்து, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதை அடுத்து, இன்று மூன்றாவது முறையாக மோடி பதவியேற்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் குடியரசுத் தலைவர் மாளிகையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 3வது முறையாக நாட்டின் பிரதமராக மோடி இன்று இரவு 7.15 மணிக்கு பதவி ஏற்க உள்ளார்.
கார்கே பங்கேற்பா?
இதில், பிரதமர் மோடிக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்க உள்ளார். மோடியுடன் சுமார் 30 அமைச்சர்கள் இன்று பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த பதவியேற்பு விழாவில் பங்கேற்க பல்வேறு அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், க்
Also Read: மோடி அமைச்சரவையில் நிதிஷ், சந்திரபாபுவுக்கு எத்தனை இலாகாக்கள்? வெளியான முக்கிய தகவல்!
இந்த தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான I.N.D.I.A கூட்டணி 234 இடங்களை கைப்பற்றியிருக்கிறது. காங்கிரஸ் 99 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. எனவே, மோடி பதவியேற்கும் விழாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் கார்கே கலந்து கொள்வார் என்று காங்கிரஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உச்சகட்ட பாதுகாப்பு:
புதிய அரசு பதவியேற்பு விழாவில் டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. டெல்லியில் மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதாவது, குடியரசு தலைவர் மாளிகை மற்றும் பதவியேற்பு விழா நடைபெறும் கர்தவ்யா பாத் ஆகியவற்றில் முதல் அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விருந்தினர்கள் தங்கும் இடங்களை சுற்றி பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மத்திய டெல்லியை சுற்றிலும் மூன்றாவது அடுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சிறப்பு கட்டுப்பாடு அறைகள் ஏற்படுத்தப்பட்டு அனைத்து இடங்களும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும், ட்ரோன்கள், சிறிய ரக ஏர்கிராப்ட்கள், பாரா கிளைடர்கள் உள்ளிட்டவை பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் டெல்லி முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Also Read: 3வது முறையாக பிரதமராக இன்று பதவியேற்கும் மோடி.. டெல்லியில் குவிந்த உலக தலைவர்கள்!