“தியானம் செய்ய கேமரா எதுக்கு”? மோடியின் குமரி விசிட் குறித்து மம்தா கிண்டல்!
மக்களவை தேர்தல் இறுதி கட்டத்தை நெருங்கி வரும் நிலையில், தியானம் செய்வதற்காக பிரதமர் மோடி இன்று கன்னியாகுமரி வருகிறார். இன்று மாலை தொடங்கும் தியானத்தை அடுத்த நாளான 31ஆம் தேதி வரை நீடிக்கிறது. இந்தநிலையில், மேற்கு வங்கத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடியின் கன்னியாகுமரி பயணம் குறித்து முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார். அதாவது, "அனைவரும் தியானம் செய்ய போகலாம். யாராவது தியானம் செய்யும்போது கேமராவை எடுத்து செல்வார்களா?” என்று தெரிவித்துள்ளார்.
மம்தா கருத்து: மக்களவை தேர்தல் இறுதி கட்டத்தை நெருங்கி வரும் நிலையில், தியானம் செய்வதற்காக பிரதமர் மோடி இன்று கன்னியாகுமரி வருகிறார். இன்று மாலை தொடங்கும் தியானத்தை அடுத்த நாளான 31ஆம் தேதி வரை நீடிக்கிறது. இந்தநிலையில், மேற்கு வங்கத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடியின் கன்னியாகுமரி பயணம் குறித்து விமர்சித்துள்ளார். அதன்படி, “அனைவரும் தியானம் செய்ய போகலாம். யாராவது தியானம் செய்யும்போது கேமராவை எடுத்து செல்வார்களா? தேர்தலுக்கு 48 மணி நேரத்திற்கு முன்பு தியானம் என்ற பெயரில் ஏசி அறையில் மோடி அமர்கிறார். அவர் கடவுள் என்றால் ஏன் தியானம் செய்கிறார்? மற்றவர்கள் தான் அவருக்காக தியானம் செய்ய வேண்டும். கன்னியாகுமரியில் பிரதமர் மோடியின் தியானத்தை தொலைக்காட்சியில் ஒளிபரப்பக் கூடாது. ஒளிபரப்பினால் அது தேர்தல் விதிகளை மீறியதாக கருதப்படும். தியானம் செய்யட்டும், ஆனால் அதை தொலைக்காட்சியில் ஒளிபரப்பக்கூடாது. மீறினால் நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்க உள்ளோம்” என்றார்.
Also Read: இந்தியாவின் எதிர்காலத்தை தீர்மானிக்கப்போகும் ஜூன் 4ம் தேதி.. வெற்றி யாருக்கு?
கன்னியாகுமரிக்கு விசிட் அடிக்கும் மோடி:
மக்களவை தேர்தல் இறுதி கட்டத்தை நெருங்கி வரும் நிலையில், தியானம் செய்வதற்காக பிரதமர் மோடி இன்று கன்னியாகுமரி வருகிறார். இன்று மாலை 3.55 மணிக்கு திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து புறப்படும் மோடி மாலை 5.15 மணிக்கு கன்னியாகுமரிக்கு வருகை தருகிறார். அதன்பின், 5.45 மணிக்கு விவோகானந்தர் மண்டபத்தில் அவர் தியானம் செய்கிறார். அடுத்த நாளான 31ஆம் தேதி வரை இது தொடர்ந்து நீடிக்கிறது. பிரதமர் மோடி 45 மணி நேரம் தொடர்ச்சியாக தியானம் செய்ய உள்ள நிலையில், 3 நாட்களும் அவர் இளநீர், பழச்சாறு போன்ற திரவு உணவுகளை மட்டுமே எடுத்து கொள்வார் என்று கூறப்படுகிறது. இந்த மூன்று நாட்களும் பாதுகாப்பு படையினர், மருத்துவக் குழுவினர், கேந்திரா பணியாளர்கள் மட்டுமே விவேகானந்தர் பாறையில் தங்கி இருப்பார்கள்.
ஜூன் 1ஆம் தேதி மாலை 3 மணிக்கு விவோகானந்தர் பாறையில் இருந்து அவர் படகு மூலம் புறப்படுகிறார். 3.10 மணிக்கு படகுத்துறையை அடைகிறார். 3.15 மணிக்கு படகுத்துறையில் இருந்து அவர் கார் மூலம் கன்னியாகுமரி ஹெலிபேடை அடைகிறார். 3.25 மணிக்கு ஹெலிகாப்டரில் புறப்படும் அவர், 4.05 மணிக்கு திருவனந்தபுரத்தில் இறங்குகிறார். அங்கிருந்து விமானம் மூலம் அவர் டெல்லிக்கு புறப்படுகிறார்.
Also Read: 2 மாத பிரச்சாரம் ஓய்கிறது.. இறுதி கட்டத்தை நோக்கி மக்களவை தேர்தல்!