5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

இந்தியா கூட்டணியில் தொடர்கிறதா திரிணாமுல்? மம்தா பரபர பதில்!

”இந்தியா கூட்டணிதான் ஆட்சி அமைக்கும் என்பது பிரதமர் மோடிக்கே தெரியும். மம்மா சொல்வதை நான் நம்பவில்லை. கூட்டணியில் இருந்து வெளியேறிய மம்தா தேர்தலுக்கு பின் பாஜக பக்கம் போகலாம். காங்கிரஸ் கட்சியை அழித்துவிடலாம் என்றும், காங்கிரசுக்கு 40 சீட்டுக்கு மேல் வராது என்றும் பேசிக் கொண்டிருந்தார்கள். ஆனால், இப்போது காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் என்று கூறுகிறார்” என்றார் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி.

இந்தியா கூட்டணியில் தொடர்கிறதா திரிணாமுல்? மம்தா பரபர பதில்!
மம்தா பானர்ஜி
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 16 May 2024 16:40 PM

இந்தியா கூட்டணி: நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது. இதுவரை நான்கு கட்ட தேர்தல் முடிந்த நிலையில், ஐந்தாம் கட்ட தேர்தல் 20ஆம் தேதி நடக்கிறது. தேர்தல் நடக்கும் இடங்களில் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கக்கூடாது என்பதற்காக எதிர்க்கட்சிகள் இந்தியா கூட்டணி என ஓரணியில் திரண்டுள்ளனர். இதில், மேற்கு வங்கத்தில் தொகுதி பங்கீட்டில் காங்கிரஸ் உடன் உடன்பாடு எட்டாததை அடுத்து, இந்தியா கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனால், மேற்கு வங்கத்தில் பாஜக, திரிணாமுல், காங்கிரஸ் என மும்முனைப் போட்டி நிலவுகிறது. இப்படியான நிலையில்,  இந்தியா கூட்டணிக்கு வெளியில் இருந்து ஆதரவு திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு அளிக்கும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மம்தா சொல்வது என்ன?

இதுகுறித்து அவர் பேசுகையில், “400 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று பாஜக கூறுகிறது. ஆனால், அது நடக்காது என மக்கள் கூறுகிறார்கள். ஏற்கனவே நிறைவடைந்த 4 கட்டத் தேர்தலில் பாஜகவின் தோல்வி உறுதியாகிவிட்டது. அடுத்த மூன்று கட்ட தேர்தலிலும் இதே நிலை தான். அவர்கள் தேர்தல் வெற்றிக்காக ஏதேதோ பேசி வருகின்றனர். ஆனால், வெற்றி பெற முடியாது.

Also Read : பிரதமர் மோடியிடம் வேட்புமனு பெற்ற ஆட்சியர் தமிழ்நாட்டு காரரா? அடடே செம்ம!

இந்தியா கூட்டணி மத்தியில் ஆட்சி அமைக்க திரிணாமுல் காங்கிரஸ் வெளியில் இருந்து ஆதரவளிக்கும். கூட்டணி ஆட்சிக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வெளியில் இருந்தே வழங்குவோம்” என்றார். இவரது கருத்துகள் தேசிய அரசியலில் பெரும் விவாதத்தை கிளப்பி இருக்கும் நிலையில், பதிலடி கொடுத்திருக்கிறார்.  அதன்படி, “பலர் என்னை தவறாக புரிந்து கொண்டனர். நான் இந்தியா கூட்டணியில் உள்ளேன். நான்தான் இந்தியா கூட்டணியை உருவாக்கினேன்” என்றார்.

காங்கிரஸ் தரப்பு:

மம்தாவின் கருத்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்திரி கூறுகையில், ”இந்தியா கூட்டணிதான் ஆட்சி அமைக்கும் என்பது பிரதமர் மோடிக்கே தெரியும். மம்மா சொல்வதை நான் நம்பவில்லை. கூட்டணியில் இருந்து வெளியேறிய மம்தா தேர்தலுக்கு பின் பாஜக பக்கம் போகலாம். காங்கிரஸ் கட்சியை அழித்துவிடலாம் என்றும், காங்கிரசுக்கு 40 சீட்டுக்கு மேல் வராது என்றும் பேசிக் கொண்டிருந்தார்கள். ஆனால், இப்போது காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் என்று கூறுகிறார்” என்றார்.

மேற்கு வங்கத்தை பொருத்தைவரை 42 மக்களவை தொகுதிகள் உள்ளன. தனது கோட்டையை தக்க வைத்து கொள்ள மம்தாவின் திரிணாமல் காங்கிரஸ் முனைப்பு காட்டி வரும் நிலையில், கணிசமான தொகுதிகளை கைப்பற்ற பாஜக முயற்சிக்கிறது. கடந்த 2014ஆம் ஆண்டு மேற்கு வங்கத்தில் ஒரு மக்களவை தொகுதியில் ஜெயித்த பாஜக, 2019ல் 16 தொகுதிகளில் ஜெயித்தது. இந்த முறை இன்னும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற வேண்டுமென்று முயற்சி செய்கிறது.

Also Read : செந்தில் பாலாஜி ஜாமீன் மனு.. ஜூலை 10க்கு ஒத்திவைத்த உச்ச நீதிமன்றம்.. காரணம் என்ன?

Latest News