5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய ரெடி.. அதிர்ச்சி கொடுத்த மம்தா.. மேற்கு வங்க அரசியலில் ட்விஸ்ட்!

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மேற்கு வங்கத்தை ஆளும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் அரசுக்கு இது பெரும் நெருக்கடியாக மாறி உள்ளது.

முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய ரெடி.. அதிர்ச்சி கொடுத்த மம்தா.. மேற்கு வங்க அரசியலில் ட்விஸ்ட்!
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி (Photo Credit: PTI)
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 12 Sep 2024 20:37 PM

மம்தா பானர்ஜி அதிரடி: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மேற்கு வங்கத்தை ஆளும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் அரசுக்கு இது பெரும் நெருக்கடியாக மாறி உள்ளது. இந்த நிலையில், முதலமைச்சர் பதவியில் இருந்து விலக தயாராக உள்ளதாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி,  ”மக்கள் நலன் கருதி நான் பதவி விலக தயாராக உள்ளேன். எனக்கு முதல்வர் பதவி வேண்டாம். எனக்கு நீதி வேண்டும். நீதி வழங்கப்படுவதைப் பற்றி மட்டுமே நான் கவலைப்படுகிறேன். சாமானிய மக்கள் மருத்துவ சிகிச்சை பெற வேண்டும். மருத்துவர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தால், அரசு மருத்துவமனைகளில் கடந்த ஒரு மாதத்தில் 27 நோயாளிகள் மருத்துவச் சேவையின்றி உயிரிழந்துள்ளனர்” என்றார்.

மருத்துவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று உறுதியளித்த அவர், பேச்சுவார்த்தைக்கு அரசு எப்போதும் தயாராக உள்ளது என்றார். சமூக வலைதளங்களில் அரசுக்கு எதிரான செய்திகள் பெருகி வருவதை சுட்டிக்காட்டிய அவர்,  எங்கள் அரசு அவமதிக்கப்பட்டுள்ளது. இதில் அரசியல் சாயம் இருப்பது சாமானிய மக்களுக்குத் தெரியாது என்றார்.

மேலும், “வங்காள மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இந்தப் பிரச்னைக்கு இன்றே தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன். அவர்களுக்காக நாங்கள் மூன்று நாட்கள் காத்திருக்கிறோம். வங்காள மக்களைக் காப்பாற்றுவதற்காக இளைய மருத்துவர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன். இந்த நாட்டு மக்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். சாமானிய மக்களுக்கு நீதி வேண்டும்.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி மருத்துவர்கள் தங்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியாகி 3 நாட்கள் கடந்தாலும், சில சமயங்களில் பொறுத்துக் கொள்ள வேண்டியிருப்பதால், நாங்கள் எந்த ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கவில்லை. சில சமயம் பொறுத்துக் கொள்வது நம் கடமை” என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

Also Read: இந்தியாவின் காம்ரேட்.. மாணவர் சங்கம் டூ தேசிய அரசியல்.. யார் இந்த சீதாராம் யெச்சூரி?

விஸ்வரூபம் எடுக்கும் பெண் மருத்துவர் கொலை வழக்கு:

கடந்த மாதம் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. கொல்லப்பட்ட பெண் மருத்துவருக்கு நீதி கேட்டு, மேற்கு வங்க அரசு மருத்துவமனையில் பணியாற்றும் இளநிலை மருத்துவர்கள் ஒரு மாதத்திற்கு மேலாக பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் நோயாளிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். இதற்கிடையில், பெண் மருத்துவர் கொல்லப்பட்ட சம்பவத்தை தாமாக முன்வந்து விசாரித்து வரும் உச்ச நீதிமன்றம் மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட்டு செப்டம்பர் 10ஆம் தேதி மாலை 5 மணிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று உத்தரவிட்டும் மருத்துவர்கள் பேராட்டத்தை நடத்தி வருகின்றனர். இது  மேற்கு வங்கத்தை ஆளும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் அரசுக்கு இது பெரும் நெருக்கடியாக மாறி உள்ளது. இந்த சூழலில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய தயார் என்று மம்தா கூறியுள்ளார்.

Also Read: செம்ம சான்ஸ்.. ஆதார் கார்ட்டை அப்டேட் செய்ய கூடுதல் அவகாசம்.. சீக்கிரம் வேலைய முடிங்க!

முன்னதாக, ஆர்.ஜி மருத்துவமனையின் முதல்வராக இருந்த சந்தீப் கோஷ் தனது பதிவியை ராஜினாமா செய்தார். இதனை அடுத்து சிபிஐ அதிகாரிகள் அவரை கைது செய்தனர். சம்பவம் நடந்த உடனேயே அவர் புகார் அளிக்காமல் தாமதம் செய்தது, கொல்லப்பட்ட மருத்துவரின் பெற்றோரிடம் தவறான தகவலை கூறியது சந்தீப் கோஷ் மீது சந்தேகத்தை எழுப்பியது. மேலும், மருத்துவக் கல்லூரி அரசு மருத்துவனையில் சந்தீப் கோஷ் நிதி முறைகேட்டில் ஈடுபட்டது தொடர்பாக அவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News