5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

பிரியங்காவுடன் கைக்கோர்க்கும் மம்தா.. வயநாட்டில் சம்பவம் செய்ய காத்திருக்கும் I.N.D.I.A கூட்டணி!

வயநாடு மக்களவைத் இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிரியங்காவை ஆதரித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரச்சாரம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கொல்கத்தாவில் மம்தா பானர்ஜியை காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் நேற்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில்  பிரியங்கா காந்தியை ஆதரித்து பிரச்சார செய்வது பற்றி காங்கிரஸ் தரப்பில் இருந்து கேட்கப்பட்ட நிலையில், அதற்கு மம்தா பானர்ஜி ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

பிரியங்காவுடன் கைக்கோர்க்கும் மம்தா.. வயநாட்டில் சம்பவம் செய்ய காத்திருக்கும் I.N.D.I.A கூட்டணி!
மம்தா – பிரியங்கா காந்தி
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 06 Nov 2024 11:51 AM

கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிரியங்காவை ஆதரித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரச்சாரம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் கேரளத்தின் வயநாடு மற்றும் உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதிகளில் போட்டியிட்ட ராகுல் காந்தி, இரு தொகுதிகளிலும் வெற்றி வாகை சூடினார். உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் 3.90 லட்ச வாக்குகள் வித்தியாசத்திலும், வயநாடு தொகுதியில் 3.50 லட்சம் வாக்குகள் வித்தியாசத்திலும் ராகுல் காந்தி வெற்றி பெற்றார். அரசியலைப்பின்படி, ஒருவரால் இரண்டு தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் எம்.பியாக இருக்க முடியாது. எனவே, எதாவது ஒரு தொகுதியில் எம்.பி.பதவியை அவர் ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்பட்டது.

Also Read: படத்தை மிஞ்சும் காட்சிகள்.. ட்ரெண்டிங்காக அந்தரத்தில் தொங்கிய பெண்..!

அதன்படி, கடந்த 18ஆம் தேதி வயநாடு தொகுதி எம்.பி பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ய உள்ளதாகவும், அந்த தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் சுமார் 20 ஆண்டுகளாக காங்கிரஸின் பிரச்சார முகமாக செயல்பட்டு வந்த பிரியங்கா காந்தி முதல்முறையாக நேரடியாக ஒரு தொகுதியில் வேட்பாளரமாக போட்டியிட இருக்கிறார். எனவே, வயநாடு தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த நிலையில், வயநாடு மக்களவைத் இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிரியங்காவை ஆதரித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரச்சாரம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கொல்கத்தாவில் மம்தா பானர்ஜியை காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் நேற்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில்  பிரியங்கா காந்தியை ஆதரித்து பிரச்சார செய்வது பற்றி காங்கிரஸ் தரப்பில் இருந்து கேட்கப்பட்ட நிலையில், அதற்கு மம்தா பானர்ஜி ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Also Read: சர்வதேச யோகா தினம்.. ராணுவ வீரர்கள் முதல் மாணவர்கள் வரை யோகா செய்து அசத்தல்..

Latest News