5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Accident: சார்ஜர் மூலம் தாக்கிய மின்சாரம்.. தெலங்கானாவில் இளைஞர் உயிரிழப்பு!

மாலோத் அனில்  ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தபோது அவரது கைது தெரியாமல் சார்ஜ் போடப்பட்டிருந்த சுவிட்ச் போர்டின் மீது பட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. அலறல் சத்தம் கேட்டு வந்த குடும்பத்தினர் உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாலோத் அனிலை  கொண்டு சென்றனர். ஆனால் அவரின் உடல்நிலை மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Accident: சார்ஜர் மூலம் தாக்கிய மின்சாரம்.. தெலங்கானாவில் இளைஞர் உயிரிழப்பு!
கோப்பு புகைப்படம்
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 28 Oct 2024 15:48 PM

மின்சாரம் தாக்கி மரணம்: தெலங்கானா மாநிலத்தில் செல்போன் சார்ஜர் மூலம் மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள கமாரெட்டி மாவட்டத்தில் தான் இந்த சோக சம்பவம் நடந்துள்ளது. அப்பகுதில் வசித்து வரும் 23 வயது இளைஞர் ஒருவர் தூங்கிக் கொண்டிருந்த போது  ​தனது படுக்கைக்கு அருகில் இருந்த இருந்த சுவிட்ச் போர்டில் மாட்டப்பட்டிருந்த செல்போன் சார்ஜரை தொட்டுள்ளார். அப்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது. இந்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை (அக்டோபர் 25) அன்று நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்ட தகவல்படி, “மாலோத் அனில் என்ற இளைஞர் தனது மொபைல் ஃபோனை சார்ஜ் செய்வதற்காக தனது படுக்கைக்கு அருகில் இருந்த சுவிட்ச் போர்டை உபயோகித்துள்ளார். பின்னர் தூங்கச் சென்றுள்ளார்.

இதனிடையே  மாலோத் அனில்  ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தபோது அவரது கைது தெரியாமல் சார்ஜ் போடப்பட்டிருந்த சுவிட்ச் போர்டின் மீது பட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. அலறல் சத்தம் கேட்டு வந்த குடும்பத்தினர் உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாலோத் அனிலை  கொண்டு சென்றனர். ஆனால் அவரின் உடல்நிலை மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Also Read: தமிழக வெற்றிக் கழக மாநாடு.. தொகுத்து வழங்கிய பெண் யார் தெரியுமா?

இதனைத் தொடர்ந்து சிறப்பு வசதிகள் கொண்ட அரசு மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி மாலோத் அனில் உயிரிழந்தார். அவருக்கு 3 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகியுள்ளது.  ஒன்றரை வயதில் பெண் குழந்தையும் உள்ள நிலையில் மாலோத் அனில் மரணம் அவரது குடும்பத்தினர் மத்தியில் பேரிடியாக அமைந்துள்ளது. இதுதொடர்பாக கமாரெட்டி மாவட்ட காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாலோத் அனில் கைகள் ஈரமாக இருந்த நிலையில் தான் அவர் மீது மின்சாரம் தாக்கியதாக சொல்லப்படுகிறது. எனினும் பொதுமக்கள் பாதுகாப்பாக மின்சாதன பொருட்களை கையாள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடரும் சம்பவங்கள்

முன்னதாக, தெலங்கானாவின் கம்மம் மாவட்டத்தில் நேற்று  40 வயதுடைய நபர் தனது  நாயை குளிப்பாட்ட தண்ணீரை சூடாக்க முயற்சித்துள்ளார். அப்போது தவறுதலாக அவரது மின்சார ஹீட்டரின் கம்பியை தொட,  மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதேபோல் ஜி நரேஷ் என்ற நபர் தனது வீட்டில் மொபைல் ஃபோனை சார்ஜ் செய்யும் போது மின்சாரம் தாக்கி இறந்தார்.  தொலைபேசியை சார்ஜ் செய்து கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: என் தங்கை வித்யா இறந்தப்போ ஏற்பட்ட பாதிப்பு அனிதா இறந்தப்போ வந்துச்சு – விஜய்

இதனிடையே திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள கண்டபடி பகுதியைச் சேர்ந்த லாரன்ஸ் என்பவர் முக்கூடல் பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசின் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் ஒப்பந்த பணியாளராக பணிபுரிந்து வந்தார். தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் பல்வேறு பகுதிகளுக்கு தாமிரபரணி நதியிலிருந்து குடிநீர் திறப்பதற்காக ஏராளமான உறைக் கிணறுகள் அமைக்கப்பட்டது அந்த வகையில் முக்கூடல் அருகே அமைந்துள்ள உறைக் கிணற்றில் பழுது ஏற்பட்டதை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்ட லாரன்ஸ் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மின்சாரம் தாக்கியதால் தூக்கி வீசப்பட்ட அவரின் உடல் தாமிரபரணி ஆற்றுக்குள் விழுந்ததால் சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு சேரன்மகாதேவி தீயணைப்பு வீரர்கள் உடலை மீட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

கவனம் தேவை

பொதுவாக மின்சாதன பொருட்களை கையாளும் போது மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும். குறிப்பாக குழந்தைகளிடமிருந்து சுவிட்ச் போர்டு, மீட்டர் பாக்ஸ் போன்றவை எட்டாத உயரத்தில் இருக்குமாறு அமைத்துக் கொள்ள வேண்டும். மழைக்காலங்களிலும், லோ வால்டேஜ் ஏற்படும் சமயங்களும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக ஈர கைகளைக் கொண்டு சுவிட்ச் போடுதல், சார்ஜ் போட்டுக் கொண்டு செல்போன் உபயோகித்தல் அல்லது பேசுதல், சுவிட்சை அணைக்காமல் மின்சாதன பொருட்களை அகற்ற முற்படுவது, அதேபோல் சுவிட்ச் போடப்பட்ட நிலையில் மின்சாதன பொருட்களை பொருத்த நினைப்பது போன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபடக்கூடாது என மின்சார வாரியம் வெளியிட்ட அறிவுறுத்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest News