5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

எமனாக மாறிய இட்லி.. வாயில் வைத்ததும் பிரிந்த உயிர்.. ஓணம் கொண்டாட்டத்தில் சோகம்!

கேரளாவில் இட்லி சாப்பிட்ட ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓணம் பண்டிகையின்போது இந்த சம்பவம் நடந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரே நேரத்தில் மூன்று இட்லி சாப்பிட்ட அவர் அடுத்த சில நொடிகளில் அவரது தொண்டையில் சிக்கி மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனே பக்கத்தில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதனை செய்ததில் அவர் உயிரிழந்தாக கூறினார்.

எமனாக மாறிய இட்லி.. வாயில் வைத்ததும் பிரிந்த உயிர்.. ஓணம் கொண்டாட்டத்தில் சோகம்!
இட்லி (Image credit: Getty)
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 16 Sep 2024 15:59 PM

கேரளாவில் இட்லி சாப்பிட்ட ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓணம் பண்டிகையின்போது இந்த சம்பவம் நடந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்னிந்திண உணவுகள் எப்போதுமே அதன் உயர்தரமான சுவைகள் மற்றும் பல்வேறு வகையான உணவு முறைகளுக்கு பெயர் பெற்றவை. அதில் குறிப்பாக மலிமை பூ போன்ற இட்லிகள் முதல் மிருதுவான தோசைகள் வரை இந்த உணவுகள் அனைத்தும் மக்களின் இதயங்களை கவர்ந்துள்ளன. குறிப்பாக, இட்லி. இது அனைவரின் தேர்வாக எப்போது இருக்கும். ஏனென்றால் இது ஈஸியாக செரிமானம் ஆகக் கூடிய உணவாக இருக்கிறது. இதனால் தென்னிந்திய வீடுகளில் பெரும்பாலும் காலை உணவுகள் இட்லி கட்டாயம் இருக்கும். அந்த அளவுக்கு இட்லி மிகவும் மக்களிடையே மிகவும் பிடித்த உணவாக இருக்கிறது. இந்த நிலையில், இட்லி சாப்பிட்டே ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் யார்? எதனால் உயிரிழந்தார்? என்பதை பார்ப்போம்.

எமனாக மாறிய இட்லி:

நேற்று ஓணம் பண்டிகை கேரளா முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஓணம் பண்டிகையையொட்டி பல்வேறு மாவட்டங்களில் போட்டிகள் நடத்தப்பட்டது. அதன்படி, பாலக்காடு அருகே உள்ள கஞ்சிக்கோடு கொல்லப்புரா என்ற பகுதியில் கிளப் சார்பில் ஓணம் கொண்டாட்டம் நடத்தப்பட்டது. இதனால் சுற்றுவட்டார பகுதி மக்கள் பலரும் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர். இதில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. அதில் ஒன்று இட்லி சாப்பிடும் போட்டி. குறிப்பிட்ட நேரத்தில் அதிக இட்லி சாப்பிடுபவர்களுக்கு ரூ.5,000 பரிசாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் பலரும் கலந்து கொண்டனர். அதில் ஒருவர் 50 வயதான சூரேஷ்.

Also Read: டெல்லியின் அடுத்த முதல்வர் யார்? ரேஸில் இருக்கும் 5 தலைகள்.. யார் இவர்கள்?

இவர் அந்த போட்டியில் கலந்து கொண்டார். போட்டி தொடங்கியதும் இட்லியை வேகமாக சாப்பிட்டதும், அவரது தொண்டையில் இட்லி சிக்கிக் கொண்டது. உடகே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர் பரிசோதனை செய்ததில் அவர் உயிரிழந்ததாக கூறினர். சம்பவ இடத்திலேயே மூச்சு திணறி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இயற்கைக்கு மாறான மரணம் என வாளையார் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

ஓணம் கொண்டாட்டத்தில் சோகம்:

உயிரிழந்தவர் சுரேஷ் என்றும் இவர் லாரி ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார் என்று தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், “இட்லி சாப்பிடும் போட்டியில் 60க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டார். இந்த போட்டியில் வெறும் இட்லி மட்டுமே சாப்பிட வேண்டிய நிலை இருந்தது. இந்த போட்டியில் சுரேஷ் ஒரே நேரத்தில் மூன்று இட்லியை சாப்பிட்டார். அடுத்த சில நொடிகளில் அவரது தொண்டையில் சிக்கி மூச்சு திணறல் ஏற்பட்டது. உடனே பக்கத்தில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதனை செய்ததில் அவர் உயிரிழந்தாக கூறினார்.

Also Read: கூட்டு பாலியல் வன்கொடுமை.. மருத்துவரின் ஆணுறுப்பை அறுத்த செவிலியர்!

இதனை இயற்கைக்கு மாறான சம்பவம் என்று வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றனர். இதுபோன்று போட்டி வைப்பது முதல்முறையல்ல. பரோட்டா சாப்பிடுவது, பிரியாணி சாப்பிடுவது என ஆங்காங்கே பல போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக பண்டிகை காலங்களில் இதுபோன்ற போட்டிகள் நடத்தப்படுகிறது. இதனால் பலரும் உயிரிழந்துள்ளனர். இப்படி உயிருக்கே ஆபத்தாக இருக்கும் இதுமாதிதிரியான போட்டிகளை ரத்து செய்ய வேண்டும் என மக்களின் கோரிக்கையாக உள்ளது. கேரளாவில் இட்லி சாப்பிட்ட ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓணம் பண்டிகையின்போது இந்த சம்பவம் நடந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Latest News