இந்தியன் தாத்தாவாக மாறிய கணவன்.. லஞ்சம் வாங்கிய மனைவிக்கு ஜெயில்! - Tamil News | Man exposes and shares evidence of his wife taking bribes in Telangana | TV9 Tamil

இந்தியன் தாத்தாவாக மாறிய கணவன்.. லஞ்சம் வாங்கிய மனைவிக்கு ஜெயில்!

Telangana: ஹைதராபாத் நகரில் மணிகொண்டா பேரூராட்சி அமைந்துள்ளது. இங்கு துணை செயற்பொறியாளராக (டிஇஇ) திவ்யஜோதி என்ற பெண் பணியாற்றி வருகிறார். இதனிடையே பொதுமக்களிடம் இருந்து பணி நடக்க திவ்யஜோதி லஞ்சம் வாங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது. மனைவி அடிக்கடி கணிசமான அளவு பணத்தை தவறாமல் வீட்டிற்கு கொண்டு வந்ததை கணவர் ஸ்ரீபாத் பார்த்து சந்தேகமடைந்துள்ளார்.

இந்தியன் தாத்தாவாக மாறிய கணவன்.. லஞ்சம் வாங்கிய மனைவிக்கு ஜெயில்!

கோப்பு புகைப்படம்

Updated On: 

09 Oct 2024 21:44 PM

தெலங்கானாவில் லஞ்சம் வாங்கிய மனைவியை கணவன் போலீசில் பிடித்துக் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லஞ்சம் என்பது நகரம் தொடங்கி கடைக்கோடி கிராமம் வரை தலை விரித்தாடும் பிரச்னையாக உள்ளது. அரசு நிர்வாகத்தில் எந்தவொரு வேலையாக வேண்டும் என்றாலும் லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலை இருப்பதாக பெரும்பாலும் நம்மைச் சுற்றியிருப்பவர்கள் புலம்புவதை கேட்டிருப்போம். நாமும் கூட அதனால் பாதிக்கப்பட்டிருப்போம். இவர்களை எல்லாம் தண்டிக்கவோ, மனம் திருந்தவோ வாய்ப்புகள் அமையாதா என்று கூட யோசித்திருப்போம். ஆனால் லஞ்சம் என்பது நம்மிடையே இருந்து ஒழிக்கப்பட வேண்டும் என சினிமாவில் வசனம் உண்டு. அதனை மெய்பிக்க்கும் வண்ணம் தெலங்கானா சம்பவம் நடைபெற்றுள்ளது.

Also Read: Nobel Prize: 3 பேருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு.. என்ன காரணம் தெரியுமா?

அம்மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் நகரில் மணிகொண்டா பேரூராட்சி அமைந்துள்ளது. இங்கு துணை செயற்பொறியாளராக (டிஇஇ) திவ்யஜோதி என்ற பெண் பணியாற்றி வருகிறார். இதனிடையே பொதுமக்களிடம் இருந்து பணி நடக்க திவ்யஜோதி லஞ்சம் வாங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது. மனைவி அடிக்கடி கணிசமான அளவு பணத்தை தவறாமல் வீட்டிற்கு கொண்டு வந்ததை கணவர் ஸ்ரீபாத் பார்த்து சந்தேகமடைந்துள்ளார். இதுபற்றி கேட்டபோது லஞ்ச பணம் என்பது உறுதியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து யாரிடமும் லஞ்சம் வாங்கக்கூடாது என அவரின் கணவர் ஸ்ரீபாத் மனைவியை எச்சரித்ததாக கூறப்படுகிறது. ஆனால் மனைவி திவ்யஜோதி லஞ்சம் வாங்குவது வாடிக்கையாக இருந்துள்ளது. இதுதொடர்பாக கேட்டால் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்படுவது, கணவனை தகாத வார்த்தையால் திவ்யஜோதி திட்டுவதும் தொடர்கதையாகி உள்ளது.

Also Read: சிதம்பரம் கோயிலில் கிரிக்கெட்.. தப்பில்லை என்ற எச்.ராஜா.. குவியும் கண்டனம்!

இப்படியான நிலையில் நாளுக்கு நாள் நிலைமை மோசமாக, பொறுத்துக்கொள்ள முடியாத கணவர் ஸ்ரீபாத் விவாகரத்துக்கோரி குடும்ப நீதிமன்றத்தை நாடியுள்ளார். மேலும் திவ்யஜோதியின் சட்டவிரோத நடவடிக்கைகளை அம்பலப்படுத்த முடிவு செய்தார். அதன்படி மனைவி லஞ்சம் வாங்கும் காட்சிகள், வாங்கிய பணத்தை வைத்துள்ள இடம் ஆகியவற்றை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களிலும். ஊடகத்திலும் வெளியிட்டார்.  இதனைத் தொடர்ந்து வீடியோக்கள் அடிப்படையில் திவ்யஜோதியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளதாக கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட வீடியோக்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன் 2 படத்தை மேற்கோள் காட்டி பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். இந்தியன் 2 படத்தில் குடும்ப உறுப்பினர்களால் லஞ்சம் வாங்கியவர்கள் அடையாளம் காட்டப்படுவது போல் காட்சி இருக்கும். இந்தியன் தாத்தா ஆக வரும் கமல்ஹாசனும் லஞ்சம் நம்மிடையே இருந்து முதலில் ஒழிக்கப்பட வேண்டும் என தெரிவித்திருப்பார். ஆனால் இதெல்லாம் நிஜ வாழ்க்கையில் சாத்தியமா என்பது போல் கேள்வி எழுப்பிய ரசிகர்கள் படத்தை கடுமையாக ட்ரோல் செய்தனர். அப்படம் படுதோல்வி அடைந்தது. இதனால் இந்தியன் 3 படத்தை ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தை நடத்தும் அளவுக்கு சென்று விட்டது. ஆனால் படத்தில் வருவது போல நிஜத்தில் நடைபெற்றுள்ளது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: Bigg Boss 8 Tamil: 3வது நாளிலே இவ்ளோ சண்டையா? கலவரமான பிக்பாஸ் வீடு!

கோவையில் நடந்த சம்பவம்

இதனிடையே கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஊஞ்சலம்பட்டியைச் சேர்ந்த ஜெயராமன் என்பவருருக்கு சொந்தமான நிலம் பொட்டையம்பாளையத்தில் உள்ளது. இந்த விளைநிலத்திற்கு மின் இணைப்பு கேட்டு பொங்கல் நகரம் உதவி பொறியாளர் அலுவலகத்தில் ஜெயராமன் விண்ணப்பித்திருந்தார். ஆனால் விண்ணப்பத்தை பரிசீலிக்கவும், புதிதாக மின் இணைப்பு வழங்கவும் உதவி பொறியாளராக பணியாற்றி வரும் சத்தியவாணி லஞ்சம் கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ஜெயராமன் திருப்பூர் லஞ்ச ஒழிப்புத் துறையிடம்  புகார் அளித்தார். இதனை தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் ரசாயனம் தடவிய பணத்தை ஜெயராமனிடம் கொடுத்து சத்தியவாணியிடம் கொடுக்குமாறு அறிவுறுத்தியினர். அதனைப் பெறும் போது திருப்பூர் லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் சசிரேகா தலைமையிலான போலீசார் ஜெயராம் சத்தியவாணியை கையும் களவுமாக பிடித்தனர்.  இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டாப் 10 இடம் பிடித்த சீரியல்கள் லிஸ்ட் இதோ!
ஹேப்பி பர்த்டே அக்‌ஷரா ஹாசன்...
பிறந்த நாள் வாழ்த்துகள் ஸ்னேகா...!
மன அழுத்தம் குறைய இதை செய்யுங்கள்!
Exit mobile version