திடீரென சபரிமலை கோயில் மேற்கூரையில் இருந்து விழுந்த பக்தர்.. உயிரிழந்த சோகம்!
Sabarimala Devotee Death: சபரிமலை கோயிலில் உள்ள மேற்கூரையில் இருந்து பக்தர் குதித்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கூரையில் இருந்து கீழே விழுந்த அவர், மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை கோயிலில் உள்ள மேற்கூரையில் இருந்து பக்தர் குதித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கூரையில் இருந்து விழுந்த பக்தருக்கு கை, கால்களில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், உயிரிழந்துள்ளார். இவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. கேரள மாநிலம் சபரிமலை கோயில் பிரசித்தி பெற்றது. சபரிமலை கோயிலில் ஆண்டுதோறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை நடைபெறும். குறிப்பாக கார்த்திகை மாதத்தில் நடைபெறும் இந்த பூஜையில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.
சபரிமலையில் பக்தர் உயிரிழப்பு
நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து சபரிமலைக்கு ஐயப்ப பக்தர்கள் மாலை அணிவித்து விரதம் இருந்து தரிசனம் செய்வார்கள். தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்வார்கள். இதற்காக தேவஸ்தானம் தரப்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சபரிமலை ஐயப்பன் கோயிலில் நேற்று அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது, அதாவது, சபரிமலை சன்னிதானத்தில் உள்ள மேற்கூரையில் இருந்து பக்தர் ஒருவர் கீழே குதித்துள்ளார். அவர் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 40 வயதான குமாரசாமி என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
மேற்கூரையில் இருந்து கீழே விழுந்த அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக அவரது கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் அவர் கோட்டயம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
Also Read : பெற்றோர் கண்டிப்பு.. 10ஆம் வகுப்பு மாணவன் எடுத்த விபரீத முடிவு.. தஞ்சையில் அதிர்ச்சி!
இவர் சில நாட்களாக மன உளைச்சலில் இருந்துள்ளதாக கூறப்படுகிறது. மன உளைச்சலில் இருந்த அவர் சபரிமலை சன்னிதானத்தில் மேற்கூரையில் இருந்து விழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
சபரிமலை வருவாய்
இதற்கிடையில், சபரிமலை ஐயப்பன் கோயிலின் வருவாய் கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளது. டிசம்பர் 16ஆம தேதி வரை 29 நாட்களில் ரூ. 163.89 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை இதே காலத்தில் ரூ.141.13 கோடியாக இருந்தது. இந்த ஆண்டு வருமானம் ரூ.22 கோடிக்கு மேல் அதிகரித்துள்ளது.
இந்த ஆண்டு 29 நாட்களில் 29 நாட்களில் 22 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்துள்ளன்ர. கடந்த ஆண்டு 18 லட்சம் பேர் தரிசனம் செய்த நிலையில், இந்த ஆண்டு 11 லட்சம் உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் பிரசாதம் விற்பனை மூலம் ரூ.80 கோடிக்கு மேல் கிடைத்துள்ளது. மேலும், காணிக்கையாக ரூ.52.27 கோடியாகவும் கிடைத்துள்ளதாக தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read : சென்னைக்கு கடத்திய ரூ.1.7 கோடி தங்கம்.. சிக்கிய விமான ஊழியர்.. பரபர வாக்குமூலம்!
மேலும், சபரிமலை பக்தர்களுக்காக சிறப்பு பேருந்துகளும் எடுக்கப்பட்டுள்ளது. அதாவது, பக்தர்களின் கூட்ட நெரிசலை தவிர்க்க கோயம்புத்தூர் மற்றும் குமுளிக்கு தலா இரண்டு பேருந்துகளும், தென்காசி, திருநெல்வேலி, தேனி ஆகிய பகுதிகளுக்கு தலா ஒரு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது.