5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Tirupati: திருப்பதியில் கிலோ கணக்கில் தங்கம் அணிந்து வந்து சாமி தரிசனம்.. பக்தர்களின் கவனத்தை ஈர்த்த குடும்பத்தினர்..

பேரிடர்களை தீர்த்து வைக்கும் இறைவனுக்கு காணிக்கை செலுத்தும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் காரணமாக திருப்பதி தேவஸ்தான சொத்து மதிப்பும் அதிகரித்து வருகிறது. வெங்கடாசலபதிகு சொந்தமாக விலையில்லா தங்க ஆபரணங்களும், இந்த ஆண்டின் முதல் 6 மாதத்திற்கான உண்டியல் வருமானம் ரூ. 670.21 கோடி ஸ்ரீவாரி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

Tirupati: திருப்பதியில் கிலோ கணக்கில் தங்கம் அணிந்து வந்து சாமி தரிசனம்.. பக்தர்களின் கவனத்தை ஈர்த்த குடும்பத்தினர்..
கிலோ கணக்கில் தங்கம் அணிந்து வந்து சாமி தரிசனம் செய்தவர்கள்
Follow Us
aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Published: 23 Aug 2024 14:29 PM

திருப்பதி: மகாராஷ்டிரா மாநிலம் புனோவை சேர்ந்த சன்னி, சஞ்சய் தத்தாத்ரய்யா குஜார், ப்ரீத்தி சோனி ஆகிய ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் இன்று விஐபி தரிசனம் மூலம் திருப்பதி கோயிலில் ஏழுமலையானை வழிபட்டனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த இவர்கள் மூன்று பேரும் கிலோ கணக்கில் தங்க ஆபரணங்களை கழுத்தில் அணிந்து கோயிலுக்கு சென்று ஏழுமலையானை வழிபட்டது அங்கு இருக்கும் பக்தர்களை பெரிதும் ஈர்த்துள்ளது. உலக பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்று திருப்பதி ஏழுமலையான் கோயில். இங்கு ஆண்டு தோறும் கோடிகணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். உலகின் பணக்கார கடவுளாகவும் கருதப்படுகிறார். குறிப்பாக இங்கு சர்வ தரிசனம் எனப்படும் இலவச தரிசனம், கல்யாண உத்சவம், ஊஞ்சல் சேவை, தீப அலங்கார சேவை, 300 ரூபாய் டிக்கெட் தரிசனம், விஐபி தரிசனம் என பல வகைகளாக பிரித்து திருமலா திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கி வருகிறது. இவற்றை தவிர விசேஷ நாட்களான பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி என பல சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது.

மேலும் படிக்க: சிமெண்டால் செய்யப்பட்ட பூண்டு.. காய்கறி சந்தையில் விற்பனை செய்யப்பட்டதால் அதிர்ச்சி!

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் தங்களால் முடிந்த காணிக்கையை செலுத்திவிட்டு போவார்கள். பேரிடர்களை தீர்த்து வைக்கும் இறைவனுக்கு காணிக்கை செலுத்தும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் காரணமாக திருப்பதி தேவஸ்தான சொத்து மதிப்பும் அதிகரித்து வருகிறது. வெங்கடாசலபதிகு சொந்தமாக விலையில்லா தங்க ஆபரணங்களும், இந்த ஆண்டின் முதல் 6 மாதத்திற்கான உண்டியல் வருமானம் ரூ. 670.21 கோடி ஸ்ரீவாரி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: சென்னையில் இனி மழைக்கு வாய்ப்பில்லை.. பிற மாவட்டங்களில் எப்படி?

.இப்படி கோடி கணக்கில் சொத்து மதிப்பு கொண்ட திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் விஐபி தரிசனம் செய்வார்கள். விஐபி தரிசனம் செய்யும் நபர்கள் கோயில் உண்டியலில் காணிக்கை செலுத்துவது வழக்கம். ஆனால் இன்று ஒரே குடும்பத்தை சேர்ந்த சன்னி, சஞ்சய் தத்தாத்ரய்யா குஜார், ப்ரீத்தி சோனி ஆகிய மூவரும் கிலோ கணக்கில் தங்க நகை அணிந்து வந்து சாமி தரிசனம் செய்தனர். கிலோ கணக்கில் கழுத்தில் தங்க ஆபரணங்களுடன் சாமி கும்பிட வந்த மூன்று பேரையும் அங்கு கூடியிருந்த பக்தர்கள் வியப்புடன் பார்த்துச்சென்றனர். ஆனால் அவர்கள் மற்றவர்களின் பார்வையை சாதாரணமாக கடந்து சென்றனர். இவர்களை கோயிலுக்கு வெளியே பார்த்த பல பக்தர்கள் அவர்களுடன் செல்பி எடுத்து கொண்டு மகிழ்ந்தனர்.

Latest News