Hyderabad : சாதி மறுப்பு திருமணம்.. பெண் காவலரை கொலை செய்த அண்ணன்.. அதிர்ச்சி சம்பவம்!
Honor Killing | ஹைதராபாத் மாநிலத்தில் உள்ள ஹயாத் நகர் காவல் நிலையத்தில் 29 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கான்ஸ்டபிள் ஆக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு ஏற்கனவே திருமணம் நடைபெற்ற நிலையில், விவாகரத்தும் ஆகியுள்ளது. இந்த நிலையில் அந்தப் பெண் இரண்டாவதாக அதே கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து திருமணம் செய்துள்ளார்.
ஹைதராபாத்தில் வேறு சாதி ஆணை காதலித்து திருமணம் செய்ததால் 29 வயது பெண் காவலர் ஒருவரை அவரது அண்ணன் கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் சாதி மறுப்பு திருமணங்கள் ஆபத்தான நிலையில் உள்ளன. இந்திய குடும்பங்களை பொருத்தவரை, அவர்கள் தங்களது சாதியை சேர்ந்த மணமகன் அல்லது மணமகனை தான் தங்களது பிள்ளைகளுக்கு தேடுகின்றனர். மாறாக தங்கள் பிள்ளைகள் வேறு சாதி ஆணையோ அல்லது பெண்ணையோ காதலித்துவிட்டால் அவர்கள் கடுமையாக எதிர்க்கின்றனர். இன்னும் சில சமயங்களில் சாதி மனப்பான்மை கொண்ட பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் சிலர், சாதி மறுப்பு திருமணம் செய்துக்கொண்ட ஆண் மற்றும் பெண்ணை கொலை செய்யும் அளவுக்கு செல்கின்றனர். இந்த மனநிலை காரணமாக இந்தியாவில் அவ்வபோது பல சாதிய ஆணவ கொலைகள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஹைதராபாத்தை சேர்ந்த பெண் காவலர் தனது அண்ணனால் கொலை செய்யப்பட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
இதையும் படிங்க : Vijay Statement : தொடர்ந்து மக்களை கைவிடும் அரசு!.. பெஞ்சல் பாதிப்பு குறித்து விஜய் அறிக்கை!
அண்ணனால் கொலை செய்யப்பட்ட பெண் காவலர்
ஹைதராபாத் மாநிலத்தில் உள்ள ஹயாத் நகர் காவல் நிலையத்தில் 29 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கான்ஸ்டபிள் ஆக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு ஏற்கனவே திருமணம் நடைபெற்ற நிலையில், விவாகரத்தும் ஆகியுள்ளது. இந்த நிலையில் அந்தப் பெண் இரண்டாவதாக அதே கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். அந்த இளைஞர் வேற்று சாதியை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. இதனால் அந்தப் பெண்ணின் அண்ணனுக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லாமல் இருந்துள்ளது. இந்த பெண்ணின் பெற்றோர்கள் இறந்து விட்டதால் அவர் தனது அண்ணன் எதிர்ப்பையும் மீறி இந்த திருமணத்தை செய்துள்ளார். இந்த நிலையில் நேற்று (02.12.2024) காலை கொங்கார நாகமணி காவல் நிலையத்தில் கான்ஸ்டபிள் ஒருவர் தனது வேலைக்கு சென்று கொண்டிருந்தபோது பெண் காவலர் சாலையில் வைத்த தாக்கப்படுவதைக் கண்டுள்ளார். மேலும் அந்தப் பெண் காவலர் சம்பவ இடத்திலே உயிர் இழந்து விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், பெண் காவலரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதையும் படிங்க : Manjolai Tea Estate : மாஞ்சோலை தேயிலை தோட்ட விவகாரம்.. அரசே ஏற்று நடந்தக்கோரிய மனுக்கள் தள்ளுபடி!
காவல் நிலையத்தில் சரணடைந்த கொலையாளி
இந்த வழக்கு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், பெண் காவலரை கொலை செய்த அவரது அண்ணன் பரமேஷ், இப்ராஹிம் பட்டணம் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். மேலும் அவர் தனது தங்கையும் காவலருமான நாகமணியை கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார். நாகமணி இப்ராஹிம் பட்டணத்தில் வசித்து வந்த நிலையில் நேற்று தனது இருசக்கர வாகனத்தில் பணிக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த கார் ஒன்று அவர் மீது மோதி விபத்தை உள்ளாக்கியது என்று இம்ப்ராஹிம் காவல்நிலைய காவலர் சத்யநாராயணா தெரிவித்துள்ளார். அந்த காரை ஓட்டி வந்தது பெண் காவலரின் அண்ணன் என்றும், காரை கொண்டு இடித்தது மட்டுமன்றி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் காவலரை அவர் சரமாரியாக தாக்கியதாகவும் அந்த காவலர் வாக்கு மூலம் அளித்துள்ளார்.
இதையும் படிங்க : Flood Relief : 6 மாவட்டங்களுக்கு வெள்ள நிவாரணம்.. முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
மாற்று சாதி ஆணை திருமணம் செய்ததால் அண்ணனே தனது தங்கையை கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.