5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Uttarpradesh: ஆன்லைனில் ஆர்டர்.. டெலிவரி இளைஞரை கொன்று ஐபோனை எடுத்துச்சென்ற இளைஞர்!

ஐபோனுக்காக கொலை: உத்தரபிரதேசம் மாநிலத்தில் ஐபோன் டெலிவரி செய்ய சென்ற இளைஞர் இரு நபர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தொழில்நுட்பங்கள் பெருகிவிட்ட நிலையில் நாம் தேவைப்படும் பொருள்களை இருந்த இடத்திலிருந்து வாங்கும் அளவுக்கு வசதிகளும் வந்துவிட்டது. குண்டூசி தொடங்கி செல்போன், ஆடைகள், மின்சாதனங்கள், ஆபரணங்கள், உணவுகள், மளிகை பொருட்கள் என அனைத்தும் வீடு தேடி வரும் அளவிற்கு வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆன்லைன் விற்பனை தளத்தின் நடைபெறும் பணபரிவர்த்தனை அதிகரித்து […]

Uttarpradesh: ஆன்லைனில் ஆர்டர்.. டெலிவரி இளைஞரை கொன்று ஐபோனை எடுத்துச்சென்ற இளைஞர்!
கொலை செய்யப்பட்ட இளைஞர்
Follow Us
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Published: 01 Oct 2024 17:33 PM

ஐபோனுக்காக கொலை: உத்தரபிரதேசம் மாநிலத்தில் ஐபோன் டெலிவரி செய்ய சென்ற இளைஞர் இரு நபர்களால் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தொழில்நுட்பங்கள் பெருகிவிட்ட நிலையில் நாம் தேவைப்படும் பொருள்களை இருந்த இடத்திலிருந்து வாங்கும் அளவுக்கு வசதிகளும் வந்துவிட்டது. குண்டூசி தொடங்கி செல்போன், ஆடைகள், மின்சாதனங்கள், ஆபரணங்கள், உணவுகள், மளிகை பொருட்கள் என அனைத்தும் வீடு தேடி வரும் அளவிற்கு வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆன்லைன் விற்பனை தளத்தின் நடைபெறும் பணபரிவர்த்தனை அதிகரித்து வருகிறது. இதில் ஆன்லைன் விற்பனை தளங்களில் நாம் வாங்கும் பொருட்களுக்கு உடனடியாக பணம் தர தேவையில்லை. நமது கைக்கு பொருள் வந்தவுடன் பணம் கொடுக்கும் கேஷ் ஆன் டெலிவரி வசதியும் அனைத்து தளங்களிலும் செயல்பட்டு வருகிறது. இதனால் அந்த இணையதளங்களைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

Also Read:  Edappadi Palanisamy: இபிஎஸ் மீது திடீரென பறந்து வந்து விழுந்த செல்போன்.. டென்ஷனான நிர்வாகிகள்!

இப்படியான நிலையில் உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவை சேர்ந்த 35 வயதான ஆன்லைன் பொருட்களை டெலிவரி செய்யும் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாரத் சாஹூ என்ற அந்த டெலிவரி செய்யும் இளைஞர் உடல் இந்திரா கால்வாயில் இன்னும் தேடப்பட்டு வருகிறது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றும் முயற்சியில் முழு மூச்சில் இறங்கியுள்ளனர். ஆன்லைன் பொருட்களை டெலிவரி செய்யும் இளைஞரை யார் கொலை செய்தார்கள்? என்ன காரணமாக இருக்கும்? என போலீசார் பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வந்த நிலையில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதாவது ஐபோன் ஒன்றுக்காக இந்த கொலை நடைபெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. உத்தரபிரதேச மாநிலம் சின்ஹாட் பகுதியைச் சேர்ந்த கஜனன் என்ற நபர் சுமார் 1.5 லட்சம் மதிப்புள்ள ஐபோன் ஒன்றை பிரபல ஆன்லைன் பொருள்கள் விற்பனை செய்யும் தளத்தில் ஆர்டர் செய்துள்ளார். அதில் அவர் பணம் செலுத்துவதற்காக கேஷ் ஆன் டெலிவரி என்ற ஆப்ஷனை தேர்வு செய்துள்ளார். வழக்கம்போல அந்த ஐபோனை பாரத் சாஹூ தான் டெலிவரி செய்ய கடந்த செப்டம்பர் 23ஆம் தேதி கஜனை சந்திக்க சென்றுள்ளார்.

Also Read: அடுத்த திருமணத்திற்கு தயாரான வனிதா விஜயகுமார்? பிக்பாஸ் பிரபலம்தான் மாப்பிள்ளையா

அப்போது சாஹூவை கஜுனனும் அவரது நண்பரும் கழுத்தை நெறித்துக் கொண்டுள்ளனர். மேலும் அவரது உடலை ஒரு சாக்கு பையில் கட்டி இந்திரா கால்வாயில் வீசியுள்ளனர். கையில் பணம் இல்லாத நிலையில் கஜூனன் ஆன்லைனில் ஆர்டர் செய்த ஐபோன் உடன் சொகுசாக வாழ்ந்து வந்துள்னான். இதற்கிடையில் சாஹூ இரண்டு நாட்களாக வீடு திரும்பாத நிலையில் அவரது குடும்பத்தினர் செப்டம்பர் 25ஆம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

சாஹூவின் செல்போன் அழைப்பு விவரங்களை வைத்து போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். அப்போது அவன் கடைசியாக கஜனனின் எண்ணிற்கு பேசியது தெரிய வந்தது. ஆனால் கஜனன் எங்கு இருக்கிறார் என்ற விவரம் தெரியாமல் இருந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அவரின் நண்பர் ஆகாஷை தொடர்பு கொண்டு போலீசார் விசாரித்த போது இருவரும் சேர்ந்து சாஹூவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். இதனை தொடர்ந்து இந்திரா கால்வாயில் உடலை தேடும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவை பொருத்தவரை பொருட்களை டெலிவரி செய்ய செல்லும் ஊழியர்கள் மீதான தாக்குதல்கள் கொலை சம்பவங்கள் முதல் முறை அல்ல. கடந்த 2021 ஆம் ஆண்டு பெங்களூருவில் நடந்த கொள்ளை முயற்சி ஒன்றில் பொருள்களை டெலிவரி செய்ய சென்ற நபர் ஒருவர் கொல்லப்பட்டார். அதனைத் தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு நொதாவில் பணம் செலுத்தும் தகராறு டெலிவரி செய்யும் ஊழியரை வாடிக்கையாளர் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல் உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள் மீதும் தாக்குதல்கள், அவதூறான பேச்சுக்கள், அத்துமீறல்கள் உள்ளிட்டவை தொடர்ச்சியாக நடைபெற்று வருவதால் இதனை தடுக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் தெரிவித்துள்ளனர்.

Latest News