5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

போலி நீதிமன்றம் அமைத்த இளைஞர்.. ஆட்சியருக்கே பறந்த உத்தரவு.. சிக்கியது எப்படி?

Gujarat Fake Court Crime: குஜராத் மாநிலத்தில் பல வருடங்களாக போலியாக நீதிமன்றம் செயல்பட்டு வந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல ஆண்டுகளாக இளைஞர் ஒருவர் நீதிமன்றத்தை நடத்தி வந்ததும் மட்டுமில்லாமல், மக்களிடம் பணம் வாங்கிக் கொண்டு சில தீர்ப்பையும் வழங்கியுள்ளது விசாரணை அம்பலமானது. இதனை அடுத்து, போலீசார் அந்த இளைஞரை கைது செய்துள்ளனர்.

போலி நீதிமன்றம் அமைத்த இளைஞர்.. ஆட்சியருக்கே பறந்த உத்தரவு.. சிக்கியது எப்படி?
கைதான நபர்
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 22 Oct 2024 11:59 AM

குஜராத் பல வருடங்களாக போலியாக நீதிமன்றம் செயல்பட்டு வந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல ஆண்டுகளாக இளைஞர் ஒருவர் நீதிமன்றத்தை நடத்தி வந்ததும் மட்டுமில்லாமல், மக்களிடம் பணம் வாங்கிக் கொண்டு சில தீர்ப்பையும் வழங்கியுள்ளது விசாரணை அம்பலமானது. இதனை அடுத்து, போலீசார் அந்த மோசடி கும்பலை கைது செய்துள்ளனர்.  நாட்டில் போலி என்பது அனைத்து துறையிலும் இருக்கிறது. போலி அரசு அலுவலகம், போலி மருத்துவமனை என பல அமைத்து மோசடிகள் அரங்கேறி வருகின்றனர்.

போலி நீதிமன்றம் அமைத்த இளைஞர்

ஆனால், யாரும் யோசிக்க முடியாத அளவுக்கு குஜராத்தில் ஒரு மோசடி கும்பல் நீதிமன்றத்தை அமைத்து வழக்குகளை விசாரித்து வந்திருக்கிறது.  குஜராத் மாநிலம் காந்தி நகரில்  நீதிமன்றம் போல் அலுவலகத்தை அமைத்து வழக்கை விசாரித்தாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த மோசடியில் ஈடுபட்டவர் சாமுவேல் கிறிஸ்டியன் என்பவர் அடையாளம் காணப்பட்டுள்ளது. போலீசாரின் கூற்றுப்படி, இவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக போலி நீதிமன்றத்தை நடத்தி வந்துள்ளார். இவர் முதலில் 2019ஆம் தேதி போலி நீதிமன்றத்தை அமைத்தார்.

முதலில் 2019ஆம் ஆண்டு அரசு நிலம் தொடர்பான வழக்கில் ஒருவருக்கு ஆதரவாக செயல்பட இந்த போலி நீதிமன்றத்தை அமைத்துள்ளார்.  நீதிமன்றம் நியமித்த மத்தியஸ்தர் என்று கூறி மனுதாரர்களிடம் பணம் பறித்து மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

அவர் மனுதாரர்களிடம் ஒரு குறிப்பிட்ட தொகையை பெற்று அவர்களுக்கு வசமாக அந்த தீர்ப்பை வழங்கி வந்திருக்கிறார். யார் பணம் தருகிறார்களே அவர்களுக்கு சாதமாக தீர்ப்பு வழங்கியுள்ளார்.

Also Read: காலையில் கணவருக்காக விரதம்… மாலையில் போட்டு தள்ளிய மனைவி.. அதிர்ச்சி காரணம்!

போலீசாரிடம் மோசடி கும்பல் சிக்கியது எப்படி?

மேலும், சிட்டி சிவில் நீதிமன்றத்தில் நிலத்தகராறு தொடர்பான நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்த தகவல்களை அவர் சேகரித்து, அந்த சம்பந்தப்பட்ட நபரை கிறிஸ்டியன் மத்தியஸ்தர் என்று கூறி தொடர்பு கொள்வார் எனவும் குறிப்பிட்ட தொகையை கொடுத்தால் பிரச்னையை விரைவில் முடித்து விடுவேன் என்று கூறி மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

பிறகு இரண்டு தரப்பினரை காந்தி நகரில் உள்ள போலி அலுவலகத்தைற்கு அழைத்து, அங்கு விசாரணை போன்று நடத்தி, யார் தனக்கு அதிக பணம் தருகிறார்களே அவர்களுக்கு சாதகமாக தீர்ப்பையும் வழங்கியுள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.

மேலும், வழக்கறிஞர்கள்,  நீதிமன்ற ஊழியர்கள் போன்றும் கிறிஸ்டியனின் கூட்டாளிகள் நடித்துள்ளனர். மொத்தமாக ஒரு உண்மையான நீதிமன்றம் போல் அவர்கள் அமைத்து மக்களிடம் பணத்தை பறித்து மிகப்பெரிய மோசடியை செய்து வந்திருக்கின்றனர்.  மேலும், போலியான உத்தரவை மற்றொரு வழக்கறிஞர் மூலம் ஆட்சியருக்கே அனுப்பி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

குஜராத்தை அலறவிட்ட மோசடி:

இந்த மோசடி குறித்து அகமதாபாத்தில் உள்ள நகர சிவில் நீதிமன்றப் பதிவாளர் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் இளைஞர் கிறிடியனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 2023ஆம் ஆண்டு குஜராம் மாநிலத்தில் ஒன்றரை ஆண்டுகளாக போல் சுங்கச்சாவடி பல கோடி ரூபாய் மோசடி கும்பல் கொள்ளையடித்து பெரும் பரபரப்பை கிளப்பியது. பாமன்போர்-கட்சி தேசிய நெடுஞ்சாலையில் போலி சுங்கச்சாவடி அமைத்து பணத்தை கொள்ளையடித்தனர். சுமார் ரூ.1.5 கோடி  வரை கொள்ளையடித்துள்ளனர்.

Also Read: பிரிக்ஸ் உச்சி மாநாடு.. ரஷ்யா செல்லும் பிரதமர் மோடி.. முக்கியத்துவம் என்ன?

இந்த மெகா மோசடி தொடர்பாக ஐந்து பேரை கைது செய்ததாக தெரிகிறது. இந்த மோசடியை தொடர்ந்து, தற்போது  போலி நீதிமன்றம் அமைத்து சுமார் 5 ஆண்டுகளுக்கு மேலாக பணத்தை கொள்ளையடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Latest News