இளம்பெண்ணை கொன்ற காதலன்.. பூட்டிய அறையில் நாள் முழுவதும் சடலத்துடன் இருந்த கொடூரம்!
Crime News : பெங்களூருவில் இளம்பெண் காதலனால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அசாமைச் சேர்ந்த இளம்பெண் தனது காதலுடன் பெங்களூருவில் ஒரு ஹோட்டலில் இரண்டு நாட்களாக தங்கி இருந்த நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பெங்களூருவில் இளம்பெண் காதலனால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அசாமைச் சேர்ந்த இளம்பெண் தனது காதலுடன் பெங்களூருவில் ஒரு ஹோட்டலில் இரண்டு நாட்களாக தங்கி இருந்த நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ளார். விசாரணையில் அவரது காதலன் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. காவல்துறையின் கூற்றுப்படி, அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் மாயா கோகோய். இவர் கடந்த நவம்பர் 20ஆம் தேதி தனது காதலனுடன் பெங்களூருவில் உள்ள ஹேட்டாலுக்கு வந்து தங்கி உள்ளார். அப்போது இவர்களுக்கு இடையில் சண்டை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
காதலியை கொன்ற காதலன்
இந்த ஆத்திரத்தில் பெண் மாயா கோகோயை அவரது காதலன் கொலை செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஹோட்டலில் மூன்று நாட்கள் காதலுடன் தங்கி இருந்த அந்த பெண்ணை, அவரது காதலன் குத்திக் கொலை செய்திருக்கிறார். கொலை செய்துவிட்டு சடலத்துன் ஒரு நாள் முழுவதும் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த நவம்பர் 23ஆம் தேதி இளம்பெண்ணின் காதலன் மட்டும் ஹோட்டல் அறையில் இருந்து வெளியே வந்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த ஹோட்டல் ஊழியர்கள் அந்த அறைக்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது, அந்த அறையில் உள்ள போர்வை, தலையணைகளில் ரத்தக்கறை இருந்துள்ளன.
இதனை பார்த்த ஹோட்டல் ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்தில் வந்த போலீசார் அந்த இளம்பெண்ணின் உடலை மீட்டுள்ளனர். நவம்பர் 23 அன்று இளம்பெண்ணின் உடல் கண்டெக்கப்பட்டுள்ளது. நவம்பர் 23 முதல் 26 வரை அவர்களது அறைக்கு வேறு யாரும் செல்லவில்லை என்று போலீசார் கூறினர்.
Also Read : ஒரே நேரத்தில் 3 பூரி சாப்பிட்ட சிறுவன்.. மூச்சு திணறி உயிரிழந்த சோகம்!
ஒரு நாள் சடலத்துடன் இருந்த கொடூரம்
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இளம்பெண்ணை கொன்ற அந்த நபரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும், வாடகை அறையை விட்டு வெளியே அந்த இளைஞர் வெளியே வந்த பிறகே இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இதைத்தொடர்ந்து போலீசார் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர். அந்த இளைஞர், மாயாவின் சடலத்துடன் ஒரு நாள் தங்கியிருந்ததால் உடலை துண்டு துண்டாக வெட்டி வேறு இடத்தில் வீச திட்டமிட்டிருந்தாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலும், அந்த பெண்ணை கொலை செய்தது ஆரவ் ஹர்ணி என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இவரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும், எந்த காரணத்திற்காக இந்த கொலை நிகழ்ந்தது என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதோடு, அசாமைப் பூர்வீகமாகக் கொண்ட மாயா, யூடியூப் சேனலை நடத்தி வந்தார். அவர் பெரும்பாலும் ஃபேஷன், உணவு போன்ற வீடியோக்களைப் பகிர்ந்து வந்தார்.
பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தெரியாத நபர்களே விட தெரிந்த நபர்கள் தான் குற்றச் செயல்களில் அதிகம் ஈடுபடுவதாக ஆய்வில் தெரிய வந்தது. எனவே பெண்களுக்கு எதிராக நடக்கும் கொலை, கொள்ளை, வன்முறை போன்ற சம்பவங்களை தடுக்க மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
Also Read : எச்சரித்த மீனவர்கள்.. அதிர்ந்த இந்தியா.. மும்பை தாக்குதல் நடந்தது எப்படி? ரீவைண்ட்!
இதற்கான சட்டங்களை கடுமையாக இயற்றி வருகிறது. இருப்பினும், வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. எனவே இதனை தடுக்க பொது மக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.