5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

“நான் என்ன கிறிஸ்டியனா?” மணிசங்கர் ஐயரை திணற வைத்த சோனியா காந்தி பதில்!

Mani Shankar Aiyar: காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் ஐயர் சோனியா, ராகுல் மற்றும் பிரியங்கா காந்தியுடனான தனது நீண்டகால தொடர்பை பற்றி விளக்கினார். மேலும், தனது அரசியல் பயணம் குறித்து மணிசங்கர் ஐயர் விவரித்தார்.

“நான் என்ன கிறிஸ்டியனா?” மணிசங்கர் ஐயரை திணற வைத்த சோனியா காந்தி பதில்!
மணிசங்கர் ஐயர் – சோனியா காந்தி (picture credit : PTI)
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 15 Dec 2024 14:10 PM

காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் ஐயர் சோனியா, ராகுல் மற்றும் பிரியங்கா காந்தியுடனான தனது நீண்டகால தொடர்பை பற்றி விளக்கினார். மேலும், அரசியல் பயணம் குறித்து மணிசங்கர் ஐயர் விவரித்தார். இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு மணிசங்கர் ஐயர் பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசுகையில், “10 ஆண்டுகளில் சோனியா காந்தியை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. ஒருமுறை கூட எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஒருமுறை ராகுல் காந்தியுடன் அர்த்தமுள்ளதாக நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைத்தது. ஒருமுறை கூட பிரியங்கா காந்தியுடன் நேரத்தை செலவழிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.

மணிசங்கர் ஐயர் ஓபன் டாக்

அவர் என்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொள்வார். அதனால் நான் அவர்களுடன் தொடர்பில் இருக்கிறேன். ஆக, எனது அரசியல் வாழ்க்கை காந்தி குடும்பத்தால் உருவாகியது. இது தான் நடக்கும் என்று நான் எடுத்துக்கொள்கிறேன்.. நான் கட்சிக்கு வெளியே இருக்க பழகிவிட்டேன். நான் இன்னும் கட்சியில் உறுப்பினராக இருக்கிறேன்.

நான் ஒருபோதும் மாறமாட்டேன், நிச்சயமாக நான் பாஜகவுக்குச் செல்லமாட்டேன்” என்று தெரிவித்தார். 2012ல் காங்கிரஸுக்கு இரண்டு பேரழிவுகள் நடந்ததாகவும், சோனியா காந்தி நோய்வாய்ப்பட்டதையும், மன்மோகன் சிங்குக்கு பைபாஸ் அறுவை சிகிச்சைகள் நடந்ததையும் மணிசங்கர் ஐயர் விவரித்தார்.


மன்மோகன் சிங்கை குடியரசுத் தலைவராகவும், பிரணப் முகர்ஜியை பிரதமாக தேர்ந்தெடுத்து இருந்தால் 2014 தேர்தல் நாங்கள் இந்தளவு தேல்வி அடைந்திருக்க மாட்டோம் என்றும் அவர் கூறினார். மேலும், “2012-இல் எங்களுக்கு இரண்டு பேரழிவுகள் நடந்தன. ஒன்று சோனியா காந்தி உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

Also Read : ஒரே நாடு ஒரே தேர்தல் அமலாகுமா? நாடாளுமன்றத்தில் நாளை மசோதா தாக்கல்!

மனிசங்கர் ஐயரை தினற வைத்த சோனியா காந்தி பதில்

மன்மோகன் சிங்குக்கு ஆறு பைபாஸ் சிகிச்சைகள் செய்யப்பட்டன. அதனால், அரசுத் தலைமையிலும், கட்சித் தலைமையிலும் முடங்கிவிட்டோம். பிரணப் முகர்ஜி பிரதமராக இருந்திருந்தால் 2014 தேர்தலில் தோல்வி அடைந்து இருக்க மாட்டோம்.

சோனியா காந்திக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்தபோது எப்படி நடந்துகொண்டார் என்பதை மணிசங்கர் ஐயர் நினைவு கூர்ந்தார். அவர் கூறுகையில், “சோனியா காந்திக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறினேன். அதற்கு அவர் நான் கிறிஸ்தவன் அல்ல. நான் அதிர்ச்சி அடைந்தேன். அவர் தன்னை ஒரு கிறிஸ்தவராக பார்க்கவில்லை என்று நான் நினைக்கிறேன்.

Also Read : பெங்களூரு ஐடி ஊழியர் தற்கொலை.. மனைவி உட்பட 3 பேரை தட்டி தூக்கிய போலீஸ்!

நான் எந்த ஒரு குறிப்பிட்ட மதத்தையும் சார்ந்தவனாக என்னைப் பார்க்கவில்லை. நான் ஒரு மத நம்பிக்கை இல்லாதவன், அதைச் சொல்ல நான் தயாராக இருக்கிறேன். ஆனால், மத நம்பிக்கை இல்லாதவனாக இருப்பதால் நான் மதங்களை மதிக்கவில்லை என்று அர்த்தமில்லை. அதன் அர்த்தம் என்ன? நான் அனைத்து மதங்களையும் சமமாக மதிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Latest News