Manipur Violence : கலவர பூமியான மணிப்பூர்.. அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் வீடுகள் சூறை… ஊரடங்கு அமல்!
மணிப்பூர் மாவட்டத்தில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. ஜிரிபம் மாவட்டத்தில் 6 பேர் கடத்தி கொலை செய்யப்பட்டதை அடுத்து, அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. மேலும், அமைச்சர்கள், ஏம்எல்ஏக்களின் வீடுகள் சூறையாடப்பட்டுள்ளதால் அங்கு மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. இதனால் மணிப்பூரில் ஊரடங்கும் மற்றும் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.
மணிப்பூர் மாவட்டத்தில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. ஜிரிபம் மாவட்டத்தில் 6 பேர் கடத்தி கொலை செய்யப்பட்டதை அடுத்து, அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. மேலும், அமைச்சர்கள், ஏம்எல்ஏக்களின் வீடுகள் சூறையாடப்பட்டுள்ளதால் அங்கு மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. இதனால் மணிப்பூரில் ஊரடங்கும் மற்றும் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் ஜிரிபம் மாவட்டத்தில் மெய்தி மக்கள் இருந்த முகாம்களில் இருந்து 6 பேர் காணாமல் போகினர்.
கலவர பூமியான மணிப்பூர்
கடந்த வாரம் ஜிரிபாம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் நிவாரண முகாமில் வசிக்கும் மூன்று பெண்கள் மற்றும் மூன்று குழந்தைகள் காணாமல் போயினர். அவர்கள் பயங்கரவாதிகளால் மெய்தி சமூகத்தினர் குற்றச்சாட்டினர்.
காணாமல் போன 6 பேரையும் பாதுகாப்பு படையினர் மற்றும் மணிப்பூர் காவல்துறையினர் தேடி வந்தனர். அப்பகுதியில் மணிப்பூர் போலீசார் நடத்திய தேடுதல் பணிகளின்போது, 6 பேரின் உடல் ஆற்றில் மீட்கப்பட்டுள்ளன.
ஆற்றில் இருந்து எட்டு மாத கைக்குழந்தை உட்பட காணாமல் போன ஆறு பேரின் உடல்கள் மீட்கப்பட்டனர். கடந்த வாரம், ஜிரிபாம் மாவட்டத்தில் குக்கி பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த 31 வயதுடைய பெண் ஒருவர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டார்.
Also Read : “மோடிக்கு ஞாபக மறதி” பைடனை வைத்து கலாய்த்த ராகுல் காந்தி!
அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் வீடுகள் சூறை
இதனால் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகிறது. நேற்று பாஜகவைச் சேர்ந்த மூன்று அமைச்சர்கள், ஆறு எம்.எல்.ஏக்களின் வீடுகளை போராட்டக்காரர்கள் தாக்கியதல் பதற்றம் அதிகரித்தது.
மேலும், முதலமைச்சர் பிரைன் சிங்கின் இல்லத்தில் போராட்டக்காரர்கள் நுழைய முயன்றனர். அவரது மருமகனும், பாஜக எம்எல்ஏவுமான ராஜ்குமார் இமோ சிங், எம்ஏல்ஏக்கள் ரகுமணி சிங், சபம் குஞ்சகேஸ்வரர் மற்றும சபம் நிஷிகாந்தா ஆகியோரின் வீடுகள் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர்.
போராட்டக்காரர்கள் மூன்று எம்.எல்.ஏக்களின் வீடுகளை அடித்து நொறுக்கி தீ வைத்து எரித்தனர். இதனால் மணிப்பூரின் கலவர பூமியாக காட்சியளிக்கிறது. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.
இம்பாலின் பல்வேறு பகுதிகளில் போராட்டக்காரர்களைக் கலைக்க கண்ணீர்ப்புகைக் குண்டுகளைப் பயன்படுத்தினர். எம்.எல்.ஏக்கள் வீடுகள் மீது 6 பேர் கொல்லப்பட்டதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குற்றவாளிகளை 24 மணி நேரத்தில் கைது செய்ய வேண்டும் என்றும் கோஷங்கள் எழுப்பினர்.
ஊரடங்கும், இணைய சேவை துண்டிப்பு
போராட்டத்தை கட்டுப்படுத்த மணிப்பூரில் பல்வேறு மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இம்பால் பள்ளத்தாக்கின் கிழக்கு மற்றும் மேற்கு, பிஷ்னுபூர், தௌபால் மற்றும் காக்சிங் மாவட்டங்களில் காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், 6 மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது. இம்பால் மேற்கு, இம்பால் கிழக்கு, பிஷ்ணுபூர், தௌபல், கக்சிங், காங்போக்பி மற்றும் சுராசந்த்பூர் ஆகிய மாவட்டங்களில் 7 நாட்களுக்கு இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.
6 பேர் கொலை செய்யப்பட்ட விஷயம் தொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனவும், பொதுமக்களின் உணர்வுகளுக்கு அரசாங்கம் மதிப்பளிக்கத் தவறினால் பதவி விலகுவதாகவும் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சர் சபம் கூறியுள்ளார்.
Also Read : ராகுல் காந்தி பையில் என்ன இருந்தது? தேர்தல் அதிகாரிகள் அதிரடி சோதனை!
எதிர்க்கட்சிகள் கண்டனம்
The recent string of violent clashes and continuing bloodshed in Manipur is deeply disturbing.
After more than a year of division and suffering, it was the hope of every Indian that the Central and State governments would have made every effort at reconciliation and found a…
— Rahul Gandhi (@RahulGandhi) November 16, 2024
இதற்கிடையில், மணிப்பூரில் மீண்டும் கலவரம் ஏற்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். மணிப்பூர் கலவரத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ” மணிப்பூரில் சமீபகாலமாக வன்முறை மோதல்கள் தொடர்வது ஆழ்ந்த கவலை அளிக்கிறது.
ஒரு வருடத்திற்கும் மேலாக நடந்து வரும் வன்முறை கலவத்திற்கு மத்திய, மாநில அரசுகள் அமைதிக்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு தீர்வு கண்டிருக்க வேண்டும் என்பது ஒவ்வொரு இந்தியனின் நம்பிக்கையாக இருக்கிறது. மணிப்பூருக்கு மீண்டும் ஒருமுறை பிரதமர் வருகை தந்து, அந்தப் பிராந்தியத்தில் அமைதியை மீட்டெடுக்கவும், மக்களுக்கு உதவ வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.