5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Manipur Riots : பெண்களை கொலை செய்த கொடூரம்.. மணிப்பூரில் மீண்டும் பதற்றம்!

Manipur Violence : மணிப்பூரில் நிவாரண முகாமில் இருந்து 6 பேர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து, அம்மாநிலத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது. 6 பேர் உயிரிழந்தற்கு எதிராக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் வெடித்ததன.

Manipur Riots : பெண்களை கொலை செய்த கொடூரம்.. மணிப்பூரில் மீண்டும் பதற்றம்!
மணிப்பூர் வன்முறை (picture credit : PTI)
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 16 Nov 2024 21:11 PM

மணிப்பூரில் நிவாரண முகாமில் இருந்து 6 பேர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து, அம்மாநிலத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது. 6 பேர் உயிரிழந்தற்கு எதிராக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் வெடித்ததன. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதத்தில் மெய்தி மற்றும் குக்கி என இருகுழுவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இது பெரும் வன்முறையாக மாறி, இரு தரப்பிலும் இருநூற்றுக்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். மணிப்பூரில் ஏற்பட்ட வன்முறை காரணமாக சுமார் 70 ஆயிரம் பேர் வேறு இடங்களுக்கு புலம்பெயர்ந்து சென்றனர்.

பெண்களை கொன்ற  ஆற்றில் வீசிய கொடூரம்

இந்த கலவரம் கடந்த ஓராண்டுக்கு மேலாக நீடித்து வருகிறது. மணிப்பூரில் ஏற்பட்ட கலவரம் தணிந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வந்தனர். ஆனாலும், ஆங்காங்கே மோதல் ஏற்பட்டு வருகிறது. இதனால் மணிப்பூரில் அமைதியற்ற சூழல் நிலவுகிறது.

அண்மையில் ஜிரிபாம் மாவட்டத்தில் 3 குழந்தைகளுக்கு தாயான 31 வயதான பழங்குடியின பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு வன்முறையாளர்களால் எரித்து கொலை செய்யப்பட்டார்.

தொடர்ந்து, ஜிரிபம் பகுதியில் குக்கி இனத்தைச் சேர்ந்தவர்கள் அப்பகுதியில் உள்ள வீடுகள், கடைகளை தீ வைத்து எரித்து வந்தனர். அண்மையில் பாதுகாப்புப் படையினர், ஆயுதக்குழுவினர் இடையே நடந்த மோதலில் 11 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

Also Read : “மோடிக்கு ஞாபக மறதி” பைடனை வைத்து கலாய்த்த ராகுல் காந்தி!

மணிப்பூரில் மீண்டும் பதற்றம்

இந்த சம்பவத்தை தொடர்ந்து, மெய்தி மக்கள் இருந்த முகாம்களில் இருந்து 6 பேர் காணாமல் போனதாக தகவல் வெளியானது. 2 பெண்கள் மற்றும் 4 சிறுமிகள் மாயமாகினர். அவர்கள் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டதாக கூறப்பட்டது.

காணாமல் போன 6 பேரையும் பாதுகாப்பு படையினர் மற்றும் மணிப்பூர் காவல்துறையினர் தேடி வந்தனர்.  அப்பகுதியில் மணிப்பூர் போலீசார் நடத்திய தேடுதல் பணிகளின்போது, 2 உடல்கள் எரிக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டன.


முதியவர்கள் இருவர் உடல் எரித்து கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.  இதற்கிடையில், காணாமல் போனவர்களை தேடி வந்த நிலையில், ஜிரிமுக் என்ற தொலைதூர கிராமத்தில் ஜிரி என்ற ஆற்றில் அருகே ஒரு பெண் மற்றும் இரண்டு சிறுமிகள் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

இவர்கள் முகாமில் இருந்து காணாமல் போனவர்கள் என்பது தெரியவந்தது. மேலும், இன்று 3 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இவர்களின் உடல்கள் அசாமின் சில்சார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், விரைவில் அவர்களின் அடையாளம் உறுதிப்படுத்தப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

Also Read : ராகுல் காந்தி பையில் என்ன இருந்தது? தேர்தல் அதிகாரிகள் அதிரடி சோதனை!

போராட்டத்தில் குதித்த மக்கள்

மேலும் மீட்கப்பட்ட சடலங்கள் காணாமல் போனவர்களின் சடலங்களா அல்லது வேறு யாருடையதா என கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தீவிரவாதிகள் 6 பேரை கடத்திச் சென்றதாகவும், அவர்களின் உடல்கள் தற்போது மீட்கப்பட்டுள்ளதாகவும் இம்பால் பள்ளத்தாக்கில் உள்ளவர்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

6 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டதை அடுத்து, அங்கு பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது. காணாமல் போனவர்களை உடனடியாக விடுவிக்கக் கோரி இம்பால் மற்றும் ஜிரிபாமில் மக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இம்பால் பள்ளத்தாக்கு மாவட்டங்களில் பல எம்எல்ஏக்களின் வீடுகளுக்கு தீ வைத்து எரித்துள்ளதாக தெரிகிறது.

இதனால் ஐந்து மாவட்டங்களிலும் பதற்றம் அதிகரித்தது. இதனால் 6 மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளது. இம்பால் மேற்கு, இம்பால் கிழக்கு, பிஷ்ணுபூர், தௌபல், கக்சிங், காங்போக்பி மற்றும் சுராசந்த்பூர் ஆகிய மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு இணைய சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

Latest News