சிறுமி கடத்தப்பட்டு கொடூர கொலை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்.. மம்தாவுக்கு மீண்டும் நெருக்கடி!
மேற்கு வங்க மாநிலத்தில் 9 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் உள்ளூர் மக்களே பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதி முழுவதிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.
மேற்கு வங்க மாநிலத்தில் 9 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் உள்ளூர் மக்களே பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதி முழுவதிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது. நேற்றைய தினம் மதியம் சிறுமி பயிற்சி மையத்திற்கு சென்றிருக்கிறார். பயிற்சி யைமத்திற்கு சென்ற சிறுமி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் இரவு 9 மணியளவில் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறுமி கட்டத்தப்பட்டு கொடூர கொலை
இன்று காலை கிரிபகாலி கிராமத்தின் அருகே ஓடும் ஆற்றின் கால்வாயில் சிறுமியின் சடலம் மீட்கப்பட்டது. சிறுமியின் சடலத்தை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், சிறுமி பயிற்சி வகுப்பிற்கு சென்றுவிட்டு திரும்பும் வழியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதை வைத்து குற்றவாளிளை போலீசார் கைது செய்தனர். 19 வயது இளைஞர் மோஸ்டாக் சர்தார் என்பவர் கைதாகி உள்ளார். இந்த சம்பவத்தை கண்டித்து உள்ளூர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
உள்ளூர் மக்கள் காவல்நிலையத்திற்கு தீ வைத்து, வாகனங்களை உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றமான சூழல் நிலவுகிறது. நிலைமையை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர். மேலும் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி போராட்டத்தை களைத்தனர்.
#WATCH | Kolkata, West Bengal | Members of Bharatiya Janata Yuva Morcha (BJYM)- North Kolkata District protest after girl’s body found in canal in South 24 Paraganas pic.twitter.com/1lE5SKQHNw
— ANI (@ANI) October 5, 2024
மம்தாவுக்கு மீண்டும் நெருக்கடி:
குற்றவாளிகளை கைது செய்துள்ளோம் என்று கூடுதல் எஸ்பி பன்வார் கோஸ்வாமி தெரிவித்தார். இதுவரை ஒருவர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணையில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா இல்லையா என்பதை விசாரணைக்கு பிறகு தான் தெரியும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மேலும், கொலை செய்யப்படுவதற்கு சிறுமி பாலியல் வன்கொடுமை செய்ய்பபட்டரா என்பது பிரேத பரிசோதனையில் தான் தெரிய வரும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். உள்ளூர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது. வட மாநிலங்களில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
அண்மையில் கூட மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் 31 வயது பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்ப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த விவகாரம் தேசிய அளவில் மருத்துவர்கள் போராட்டத்திற்கும் வழிவகுத்தது.
எதிர்க்கட்சிகள் கண்டனம்:
மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்க தவறிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பதவி விலக வேண்டும் என்றும் மருத்துவ மாணவக்ள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தின் தாக்கம் சற்றும் குறையாத நிலையில், நேற்றைய தினம் 9 வயது சிறுமி கொலை செய்யப்பட்டு கால்வாயில் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது முதல்வர் மம்தா பானர்ஜிக்கு பெரும் நெருக்கடியாக மாறியுள்ளது.
இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து பேசிய பாஜக தலைவர் சுகந்தா மஜூம்தார், “மம்தா பானர்ஜியின் ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது.
துர்கா பூஜை நடக்கும் இந்த நேரத்தில் கூட இன்னும் எத்தனை வங்க பெண்கள் இந்த அரசு பலி கொடுக்கும். இந்த அரசுக்கு பொதுமக்கள் பாடம் புகட்ட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறி, முதல்வர் பானர்ஜி பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.