5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Miss India 2024 Winner: மிஸ் இந்தியா பட்டத்தை தட்டித் தூக்கிய நிகிதா போர்வால்… யார் இந்த பேரழகி?

2024ஆம் ஆண்டின் ஃபெமின் மிஸ் இந்தியா பட்டத்தை வென்றார் மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த நிகிதா போர்வால். இவருக்கு கடந்த ஆண்டு வெற்றி பெற்ற நந்தின் குப்தா மற்றும் நேஹா தூபியா ஆகியோர் பட்டத்தை வழங்கி கௌரவித்தனர். மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனியை சேர்ந்தவர் நிகிதா போர்வால்.

umabarkavi-k
Umabarkavi K | Updated On: 17 Oct 2024 16:29 PM
ஆண்டுதோறும் ஃபெமினா இதழ் சார்பில் மிஸ் இந்தியா போட்டி நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில்  நடப்பாண்டு 72வது மிஸ் இந்திய போட்டி நேற்று இரவு மும்பையில் கோலாகலமாக நடைபெற்றது.  இந்த போட்டியில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அழகிகள் கலந்து கொண்டனர்.   இந்தியாவின் பல மாநிலங்களில் நடத்தப்பட்ட தேர்வுகளில் இருந்து 30 பேர் இறுதிப்போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

1 / 6
இதில் 2024ஆம் ஆண்டின் ஃபெமின் மிஸ் இந்தியா பட்டத்தை வென்றார் மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த நிகிதா போர்வால்.  இவருக்கு கடந்த ஆண்டு வெற்றி பெற்ற நந்தின் குப்தா மற்றும் நேஹா தூபியா ஆகியோர் பட்டத்தை வழங்கி கௌரவித்தனர். மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனியை சேர்ந்தவர் நிகிதா போர்வால்.

2 / 6
இவர் தனது 18 வயதில் இருந்தே நடித்து வருகிறார். தொலைக்காட்சி தொகுப்பாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். இதனைத் தொடர்ந்து பல்வேறு நாடகங்களை நடித்து பிரபலமானார்.  அவர் 60க்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்துள்ளார். மேலும், கிருஷ்ண லீலா என்ற தலைப்பில் 250 பக்க நாடகத்தையும் எழுதியுள்ளார்.  அவரது சமீபத்திய திரைப்படம் சர்வதேச விழாக்களில் திரையிடப்பட்டது.

3 / 6
நிகிதா போர்வாலுக்கு இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி படத்தில் நடிக்க வேண்டும் என ஆசை என கூறியுள்ளார்.  மேலும், "நவீனத்தை தழுவி எனது இந்திய பாரம்பரியத்தை கொண்டாடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளேன். என் வாழ்க்கையில் நான் மிகவும் செல்வாக்கு மிக்க நபர். எனது சொந்த திறமையை அங்கீகரிப்பது ஒவ்வொரு நாளும் சிறந்து விளங்க என்னைத் தூண்டுகிறது" என்று உருக்கமாக பேசினார். மேலும், மேடையில் கண்ணீர் வீட்டு அழுகி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

4 / 6
இதனைத் தொடர்ந்து, மிஸ் இந்தியா 2024 போட்டியில் ரேகா பாண்டே இரண்டாவது இடத்தையும், யுஷி டோலாக்கியா மூன்றாவது இடத்தை பிடித்தனர். மிஸ் இந்தியா பட்டம் வென்றுள்ள நிகிதா போர்வால், உலக அழகி போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  இவருக்கு பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

5 / 6
முன்னதாக, உலக அழகி போட்டியில் 1994ஆம் ஆண்டு ஐஸ்வர்யா ராய், 2000ஆம் ஆண்டில் பிரியங்கா சோப்ரா, 2017ஆம் ஆண்டு மனுஷி சில்லர், 1997ஆம் ஆண்டு டயானா ஹைடன், 2022ஆம் ஆண்டு யுக்தா முகி உள்ளிட்டோர் மிஸ் இந்தியா பட்டத்தை வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

6 / 6
Latest Stories