“ஆகஸ்ட் மாதத்திற்குள் மோடி அரசு கவிழும்” அடித்து சொல்லும் லாலு பிரசாந் யாதவ்!

மத்தியில் மோடி அரசு பெரும்பான்மையில்லாமல் பலவீனமாக உள்ளது என்றும் அடுத்த மாதம் கவிழ்ந்துவிடும் என்றும் ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார். ஜனதா தளத்தில் இருந்து பிளவுபட்டு ராஷ்ட்ரிய ஜனதா தளம் உருவாகி 28 ஆண்டுகள் நிறைவடைந்ததை குறிக்கும் வகையில் பீகார் தலைநகர் பாட்னாவில் விழா நடைபெற்றது.

ஆகஸ்ட் மாதத்திற்குள் மோடி அரசு கவிழும் அடித்து சொல்லும் லாலு பிரசாந் யாதவ்!

மோடி - லாலு பிரசாந் யாதவ்

Updated On: 

06 Jul 2024 11:50 AM

“ஆகஸ்ட் மாதத்திற்குள் மோடி அரசு கவிழும்”  மத்தியில் மோடி அரசு பெரும்பான்மையில்லாமல் பலவீனமாக உள்ளது என்றும் அடுத்த மாதம் கவிழ்ந்துவிடும் என்றும் ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார். ஜனதா தளத்தில் இருந்து பிளவுபட்டு ராஷ்ட்ரிய ஜனதா தளம் உருவாகி 28 ஆண்டுகள் நிறைவடைந்ததை குறிக்கும் வகையில் பீகார் தலைநகர் பாட்னாவில் விழா நடைபெற்றது. இதில் தனது இளைய மகனும், அரசியல் வாரிசுமான தேஜஸ்வி யாதவுடன் கலந்து கொண்டு பேசிய லாலு பிரசாந் யாதவ், “தொண்டர்களுக்கு இங்கு ஒரு செய்தியை கூற விரும்புகிறேன். எப்போது வேண்டுமானாலும் தேர்தல் நடக்கலாம். இதனால் கட்சி தொண்டர்கள் தயாராக இருக்க வேண்டும். டெல்லியில் மோடியின் அரசாங்கம் மிகவும் பலவீனமாக உள்ளது.

Also Read: கேரளாவில் பரவும் ஆப்பிரிக்கா பன்றி காய்ச்சல்.. பன்றிகளை அழிக்க உத்தரவு..!

ஆகஸ்ட் மாதத்திற்குள் அது கவிழும் வாய்ப்புள்ளது. எனவே தொண்டர்கள் தேர்தலில் பணியாற்ற தயாராகுகள். ஜக்கிய ஜனதா தளம் தங்கள் கொள்கையில் இருந்து சமரசம் செய்து கொண்டு ஆட்சி அதிகாரத்துக்காக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது. ஆனால், ராஷ்டிரிய ஜனதா தளம் எப்போது கொள்கைகளை விட்டுக் கொடுக்காது. யாரிடமும் பயப்படாத ஒரே கட்சி ராஷ்டிரிய ஜனதா தளம். கடந்த மக்களவை தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் வாக்கு சதவீதம் 6 சதவீதம் குறைந்துள்ளது. இந்த தேர்தலில் 9 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது” என்றார்.

அண்மையில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களை கைப்பற்றியது. பாஜக 240 இடங்களில் மட்டுமே வென்றதால் தனிப்பெரும்பான்மை பெற முடியவில்லை. இதனால், நிதிஷ் குமார், சந்திரபாபு நாயுடு கட்சிகளின் ஆதரவுடன் கூட்டணி அரசு அமைந்தது. பாஜக கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்ததில் இருந்து பல எதிர்க்கட்சித் தலைவர்கள் மோடி அரசு நீண்ட காலம் நீடிக்காது என்றும் சில மாதங்களில் கவிழும் என்றும் கூறி வருகின்றனர். இந்த நிலையில், ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவும் கூறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறியுள்ளது.

அடுத்த ஆண்டு பீகாரில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. பொதுவாக தேர்தலுக்கு முன்பு நிதிஷ் குமார் கூட்டணி மாறுவது வழக்கமான ஒன்றாகிவிட்டது. இப்படிப்பட்ட சூழலில், பெரும்பான்மையில்லாமல் ஆட்சி நடத்தி வரும் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறி நிதிஷ் குமார் இந்தியா கூட்டணியில் இணைவாரா?  அல்லது பாஜக கூட்டணியிலேயே தொடருவாரா? என்பதற்கு காலம் தான் பதில் சொல்லும்.

Also Read: இந்திய வீரர்கள் கோப்பையுடன் பேரணி.. கொட்டும் மழையில் லட்சக்கணக்கான ரசிகர்கள் உற்சாக வரவேற்பு..

 

ஐபிஎல் மெகா ஏலம் எப்போது, ​​எங்கு நடைபெறுகிறது?
ராஷ்மிகாவிற்கு புஷ்பா 2 படத்தில் சம்பளம் இவ்வளவா?
தளபதி 69 பட நடிகை தான் இந்த சிறுமி... யார் தெரியுதா?
மலச்சிக்கல் பிரச்னையை தடுக்க டிப்ஸ்