5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

“எந்த ஆதாரமும் சிக்கவில்லை” மதுபான கொள்கை ஊழல் வழக்கு குறித்து கெஜ்ரிவால் பளீச்!

"மதுபான கொள்கை வழக்கில் எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்பதை பிரதமர் மோடியே ஒப்புக்கொண்டிருக்கிறார். இதனை மறைப்பதற்காகவே கெஜ்ரிவால் அனுபவம் வாய்ந்த திருடர் என்றும் என்னை கூறுகிறார். நீங்களே (மோடி) மதுபான கொள்கை வழக்கு போலியானது என்பதை ஒப்புகொண்டீர்கள். எனவே, எந்த ஆதாரமும் இல்லாதல் வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும்” என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

“எந்த ஆதாரமும் சிக்கவில்லை” மதுபான கொள்கை ஊழல் வழக்கு குறித்து கெஜ்ரிவால் பளீச்!
அரவிந்த் கெஜ்ரிவால்
umabarkavi-k
Umabarkavi K | Published: 25 May 2024 08:59 AM

எந்த ஆதாரமும் சிக்கவில்லை: மதுபான கொள்கை வழக்கில் எந்த ஆதாரமும் சிக்கவில்லை என்று டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட வீடியோவில், “கடந்த 2 ஆண்டுகளாக மதுபான கொள்ளை ஊழல் நடந்ததாக கூறி பாஜகவினர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். சஞ்சய் சிங், மணீஷ் சிசோடியா, என்னையும் கைது செய்தனர். 500க்கும் மேற்பட்ட சோதனைகள் நடத்தப்பட்டன. ஆனால், பணம் எதுவும் சிக்கவில்லை. சமீபத்தில் பிரதமர் மோடி அளித்த பேட்டியில் மதுபான கொள்கை வழக்கில் எந்த ஆதாரமும் கண்டுபிடிக்கப்படவில்லை. கெஜ்ரிவால் ஒரு அனுபவம் வாய்ந்த திருடர் என்பதால் கண்டுபிடிக்க முடியவில்லை என கூறியிருக்கிறார். இதன் மூலம் மதுபான கொள்கை வழக்கில் எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்பதை பிரதமர் மோடியே ஒப்புக்கொண்டிருக்கிறார்.


இதனை மறைப்பதற்காகவே கெஜ்ரிவால் அனுபவம் வாய்ந்த திருடர் என்றும் என்னை கூறுகிறார். நீங்களே (மோடி) மதுபான கொள்கை வழக்கு போலியானது என்பதை ஒப்புகொண்டீர்கள். எனவே, எந்த ஆதாரமும் இல்லாதல் வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும்” என்றார்.

Also Read: வங்க தேச எம்.பி. கொலையில் திருப்பம்.. ஹனி ட்ராப்.. யார் அந்த பெண்?

வழக்கின் பின்னணி:

டெல்லி அரசின் 2021-22ஆம் ஆண்டுக்கான மதுபான கொள்கை வகுத்ததிலும், நடைமுறைப்படுத்தியதிலும் முறைகேடுகள் நடைபெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சிபிஐயும் அமலாக்கத்துறையும் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் இந்த வழக்கை விசாரித்து வரும் அமலாக்கத்துறை டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் 21ஆம் தேதி கைது செய்தது பின்னர் பீகார் சிறையில் அடைக்கப்பட்ட கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் அடுத்து தடுத்து நீடிக்கப்பட்டது. இதற்கிடையில், ஜாமீன் கேரி உச்ச நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் தரப்பு மேற்முறையீடு செய்தது. இந்த நிலையில், கடந்த 10ஆம் தேதி கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்காக 21 நாளுக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. அதாவது, ஜூன் 2ஆம் தேதி அவர் மீண்டும் சரணடைய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.

Also Read: 6ஆம் கட்ட மக்களவை தேர்தல்.. 58 தொகுதிகளில் விறுவிறு வாக்குப்பதிவு!

Latest News