5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

ஹோட்டலுக்கு விசிட் அடித்த மோடி.. பில் கட்டாத பாஜக.. என்னாச்சு?

2023ஆம் ஆண்டில் மைசூருவில் உள்ள பிரபல ஹோட்டலில் மோடி தங்கிய வாடகை பாக்கி 80 லட்ச ரூபாய் இதுவரை செலுத்தபடவில்லை என ஹோட்டல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஜூன் 1ஆம் தேதிக்குள் பாக்கி தொகையை செலுத்தாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஹோட்டல் நிர்வாகம் எச்சரித்துள்ளது. 50 ஆண்டு கால புலிகள் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்க வருகை தந்திருந்தபோது அவர் தங்கிய ஹோட்டலுக்கு கட்டணம் செலுத்தப்படாமல் இருந்திருக்கிறது.

ஹோட்டலுக்கு விசிட் அடித்த மோடி.. பில் கட்டாத பாஜக.. என்னாச்சு?
பிரதமர் மோடி
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 25 May 2024 12:31 PM

ஹோட்டலுக்கு விசிட் அடித்த மோடி: 2023ஆம் ஆண்டில் மைசூருவில் உள்ள பிரபல ஹோட்டலில் மோடி தங்கிய வாடகை பாக்கி 80 லட்ச ரூபாய் இதுவரை செலுத்தபடவில்லை என ஹோட்டல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஜூன் 1ஆம் தேதிக்குள் பாக்கி தொகையை செலுத்தாவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஹோட்டல் நிர்வாகம் எச்சரித்துள்ளது. 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் மற்றும் சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்ற அமைச்சகம் இணைந்து நடத்திய 50 ஆண்டு கால புலிகள் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்க மைசூருவுக்கு வந்தார்.  இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த மோடி, மைசூருவில் உள்ள பிரபல சொகுசு ஹோட்டலில் தங்கியிருந்தார்.  மூன்று நாள்  நிகழ்ச்சிக்கு ரூ.3 கோடி நிதி உதவி வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. ஆனால், இந்த நிகழ்ச்சியின் செலவு ரூ.6 கோடியாக உயர்ந்தது என்று நிகழ்ச்சி நடத்திய தனியார் நிறுவனம் தெரிவித்தது.

Also Read: “எந்த ஆதாரமும் சிக்கவில்லை” மதுபான கொள்கை ஊழல் வழக்கு குறித்து கெஜ்ரிவால் பளீச்!

கட்டணம் செலுத்தாத பாஜக:

இந்த தொககையினை மத்திய அரசு விடுக்கப்பட்டவில்லை. கடந்த 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் கர்நாடக முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் டெல்லியில் உள்ள தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் துணை காவலர் ஜெனரலுக்கு ரூ.3.33 கோடி கேட்டு கடிதம் எழுதினார். ஆனால், அந்த தொகையினை மாநில அரசே ஈடு செய்ய வேண்டும் என புலிகள் பாதுகாப்பு ஆணையம் பதிலளித்தது. இதனை ஏற்க மறுத்ததுடன்  மத்திய அரசு நிலுவை தொகையை விடுவிக்கும்படி கர்நாடக வனத்துறை மீண்டும் கடிதம் அனுப்பியது.

அதைத் தொடர்ந்து, கடந்த மார்ச் 22ஆம் தேதி மோடி தங்கிய பிரபல ஹோட்டலின் பொது மேலாளர், கர்நாடக அரசின் வனத்துறைக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், எங்கள் ஹோட்டலின் சேவைகளை பயன்படுத்தி 12 மாதங்களுக்கு பிறகும் ரூ.80.6 லட்சம் கட்டணம் செலுத்தவில்லை என்று கூறியிருந்தார். இதுகுறித்து பலமுறை கடிதம் எழுதியும் பாக்கி தொகை செலுத்தப்படாமல் இருந்தது. எனவே, நிலுவையில் உள்ள பாக்கிகளுக்கு ஆண்டுக்கு 18 சதவீதம் தாமதமாக செலுத்தும் வட்டி பொருந்தும். எனவே, கட்டணத்துடன் ரூ.12.09 லட்சம் வட்டியையும் ஜூன் 1ஆம் தேதிகுள் செலுத்த வேண்டும். செலுத்த தவறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஹோட்டல் உரிமையாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Also Read: திரௌபதி முர்மு டூ ராகுல் காந்தி வரை.. ஜனநாயக கடமையாற்றிய தலைவர்கள்!

Latest News