Year In Search 2024: 2024ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட பெயர் யாருடையது தெரியுமா? முதலிடத்தில் இவரா..?

Most searched personality in 2024: ஒலிம்பிக் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் பல திரையுலக மற்றும் கிரிக்கெட் வீரர்களை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளார். மேலும், இந்த பட்டியலில் ஹர்திக் பாண்டியா, ஷஷாங்க் சிங், அபிஷேக் சர்மா, லக்ஷ்யா சென் உள்ளிட்ட 4 தடகள வீரர்களும் முதல் 10 இடங்களுக்குள் இடம் பிடித்துள்ளனர்.

Year In Search 2024: 2024ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட பெயர் யாருடையது தெரியுமா? முதலிடத்தில் இவரா..?

கூகுளில் அதிகம் தேடப்பட்ட இந்தியர்கள் (Image: PTI)

Published: 

11 Dec 2024 21:27 PM

ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நபரின் பெயர்கள் அதிகம் பேசப்பட்டும், தேடப்பட்டும் இருக்கும். பொதுவாகவே, கூகுளில் அதிகம் தேடப்பட்ட நபர்கள் பிரபலமானவர்களாகவே இருப்பார்கள். அவர்கள் விளையாட்டு வீரர்களாக இருக்கலாம், அரசியல் கட்சியினராக இருக்கலாம், சினிமா பிரபலமாக இருக்கலாம். அந்தவகையில், இந்த ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட இந்தியர்களின் பட்டியலை சமீபத்தில் கூகுள் வெளியிட்டது. இதில், ஒலிம்பிக் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் பல திரையுலக மற்றும் கிரிக்கெட் வீரர்களை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளார். மேலும், இந்த பட்டியலில் ஹர்திக் பாண்டியா, ஷஷாங்க் சிங், அபிஷேக் சர்மா, லக்ஷ்யா சென் உள்ளிட்ட 4 தடகள வீரர்களும் முதல் 10 இடங்களுக்குள் இடம் பிடித்துள்ளனர்.

ALSO READ: Year in Search 2024: 2024ல் அதிகம் தேடப்பட்ட இந்திய கிரிக்கெட் வீரர் இவரா! கோலி முதலிடம் இல்லையா..?

வினேஷ் போகட்:

2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் இருந்து மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் தகுதி நீக்கம் செய்யப்பட்டது உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பிட்ட அளவிற்குள் தனது எடையை தற்காத்து கொள்ளாததாலும், அதிக எடை காரணமாகவும் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதன்மூலம், இந்தியாவின் முதல் மகளிர் ஒலிம்பிக் தங்க பதக்கத்தை வெல்லும் கனவு பறிபோனது. இதற்கு மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெற்ற வினேஷ் போகட், வெள்ளிப் பதக்கம் வழங்குவதற்காக விளையாட்டு நடுவர் மன்றத்தில் (CAS) வழக்கு தொடர்ந்தார். பின்னர், 2024 ஹரியானா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியில் இணைந்த வினேஷ் போகட், ஜூலானாவிலிருந்து சட்டமன்ற உறுப்பினராக (எம்எல்ஏ) தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த காரணங்களுக்காக கூகுளில் அதிகம் தேடப்பட்ட இந்தியர்கள் வினேஷ் போகட் முதல் இடம் பிடித்தார்.

பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார்:

கூகுளில் அதிகம் தேடப்பட்ட இந்தியர்கள் பட்டியலில் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் 2வது இடத்தை பிடித்துள்ளார். கடந்த ஜனவரியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் இணைந்தார் நிதிஷ் குமார். இதன் காரணமாக, கூகுளில் நிதிஷ் குமார் அதிகம் தேடப்பட்டுள்ளார்.

சிராக் பாஸ்வான்:

முன்னாள் மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானின் மகனும் நடிகருமான சிராக் பாஸ்வான் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார். 2024 ஆம் ஆண்டு மத்திய அமைச்சரவையில் உறுப்பினராக பதவியேற்றதிலிருந்து இந்திய அளவில் சிராக் பாஸ்வான் அதிகளவில் பிரபலமானார்.

ஹர்திக் பாண்டியா:

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, கூகுளில் அதிக தேடப்பட்ட இந்தியர்கள் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக பதவியேற்றதன் மூலம் சர்ச்சை, நடாஷா உடனான விவாகரத்து, டி20 உலகக் கோப்பையை வென்றது உள்ளிட்ட இந்த வருடம் ஹர்திக் பாண்டியா பல்வேறு ஏற்ற இறக்கங்களை கண்டார்.

பவன் கல்யாண்:

ஆந்திர பிரதேசத்தின் துணை முதலமைச்சர் பவன் கல்யாண் இந்த பட்டியலில் 5வது இடத்தில் உள்ளார். ஜனசேனா கட்சியின் தலைவரான பவன் கல்யாண், தெலுங்கு தேச கட்சி சந்திரபாபு நாயுடுவுடன் கூட்டணி அமைத்து சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்று துணை முதலமைச்சராக பதவியேற்றார்.

ஷஷாங்க் சிங்:

2024 ஐபில் ஏலத்தின்போது பஞ்சாப் கிங்ஸ் அணியால் ஷஷாங்க் சிங் தவறாக எடுக்கப்பட்டார். இருப்பினும், 19 வயது வீரருக்கு பதிலாக தவறாக எடுக்கப்பட்ட ஷஷாங்க் சிங் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக தனி ஆளாக நின்று, 3 போட்டிகளில் வெற்றியை தேடி தந்தார். இதன்மூலம், இந்திய அளவில் மிகவும் பிரபலமானார். இதன் காரணமாக, இந்த பட்டியலில் ஷஷாங்க் சிங் 6வது இடத்தை பிடித்தார்.

தொடர்ந்து, இந்த பட்டியலில் நடிகை பூனம் பாண்டே 7 வது இடத்தையும், ராதிகா மெர்ச்சன்ட் 8வது இடத்தையும், கிரிக்கெட் வீரர் அபிஷேக் சர்மா, பேட்மிண்டன் வீரர் லக்ஷயா சென் ஆகியோர் முறையே 9 மற்றும் 10வது இடத்தையும் பிடித்தனர்.

ALSO READ: Near Me Google Search : ராம் மந்திர் முதல் காஃபி ஷாப் வரை.. 2024-ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட இடங்கள் இவைதான்!

ராதிகா மெர்ச்சன்ட்:

கடந்த ஜூலை மாதம் முகேஷ் அம்பானி – நீதா அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியை திருமணம் செய்தவர்தான் இந்த ராதிகா மெர்ச்சண்ட். ராதிகா மெர்ச்சன்ட் வேறு யாரும் அல்ல, என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் துணைத் தலைவராக இருக்கும் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ஆவார்.

இரும்பு சத்து குறைவாக உள்ளவர்கள் சாப்பிட வேண்டியவை!
பச்சை பட்டாணி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!
இரவு நேரத்தில் சாப்பிடக்கூடாத உணவுகள்
மாதுளை இலைகளில் கிடைக்கும் ஏராள நன்மைகள்!