5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

மும்பையை புரட்டிப்போட்ட புழுதிப் புயல்..14 பேர் உயிரிழப்பு..என்ன நடந்தது?

மும்பையில் கடுமையான புழுதிப் புயல் வீசியதால் 100 அடி உயர விளம்பரப் பலகை சரிந்து விழுந்ததில் 14 பேர் உயிரிந்துள்ளனர்.

மும்பையை புரட்டிப்போட்ட புழுதிப் புயல்..14 பேர் உயிரிழப்பு..என்ன நடந்தது?
மும்பை விபத்து
umabarkavi-k
Umabarkavi K | Published: 14 May 2024 11:31 AM

மும்பையை புரட்டிப்போட்ட புழுதிப் புயல்:

நாடு முழுவதும் கோடை கால வெயில் மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், மும்பையில் நேற்று மாலை திடீரென புழுதிப் புயல் கழன்று வீசியது. அத்துடன் மழையும் பெய்தது. பல அடி உயரத்துக்கு புழுதிக் காற்று வீசியதால் சாலைகளில் எதிரே வருபவர்கள் கூட தெரியாத நிலை உருவானது. இதனால், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர். சாலையில் நடந்து சென்ற சிலர் பாதுகாப்பான இடத்தை நோக்கி ஓடிச் சென்றனர். மேலும், மும்பையில் விமானம், புறநகர் மின்சார ரயில், மெட்ரோ ரயில் என அனைத்து போக்குவரத்து சேவையும் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டன. 15ஆம் மேற்பட்ட விமானகள் வேறு இடங்களுக்கு திருப்பிவிடப்பட்டன. மும்பை நோக்கி வந்த ரயில்களும் நிறுத்தி வைக்கப்பட்டன.

Also read : பீகார் முன்னாள் துணை முதல்வர் சுசில் குமார் மோடி காலமானார்!

14 பேர் உயிரிழப்பு:

தொடர்ந்து பலத்த காற்று வீசியதால் விளம்பரப் பலகை அடியோடு சரிந்து, அருகில் இருந்த பெட்ரோல் விற்பனை நிலையத்தின் மீது விழுந்தது. இதனால், அதற்கு அடியில் 100க்கும் மேற்பட்டோர் சிக்கினர். விளம்பரப் பலகை இரும்புக் கம்பிகளை வைத்து கட்டப்பட்டிருந்ததால், விழுந்த வேகத்தில் கீழே இருந்தவர்களை நசுக்கியது. இதனை அடுத்து, சம்பவ இடத்திற்கு தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.


இருப்பினும் இடிபாடுகளில் சிக்கி இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர்.  70க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து, இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

Also Read : வாரணாசியில் பிரதமர் மோடி இன்று வேட்புமனு தாக்கல்!

Latest News