5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

ஒரே நேரத்தில் 4 மனைவிகள்.. முஸ்லீம்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணம் செய்யலாமா? நீதிமன்றம் பரபர தீர்ப்பு

Muslim Marriage: இஸ்லாமிய ஆண்கள் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்களை செய்து கொள்ளலாம் என்று மும்பை நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஒரே நேரத்தில் நான்கு மனைவியுடன் வாழ்வதற்கு இஸ்லாமிய தனிநபர் சட்டத்தில் உரிமை இருப்பதால் இஸ்லாமிய ஆண்டுகள் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்களை பதிவு செய்யலாம் என்று மும்பை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஒரே நேரத்தில் 4 மனைவிகள்.. முஸ்லீம்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணம் செய்யலாமா? நீதிமன்றம் பரபர தீர்ப்பு
மாதிரிப்படம்
umabarkavi-k
Umabarkavi K | Published: 24 Oct 2024 17:07 PM

இஸ்லாமிய ஆண்கள் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்களை செய்து கொள்ளலாம் என்று மும்பை நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஒரே நேரத்தில் நான்கு மனைவியுடன் வாழ்வதற்கு இஸ்லாமிய தனிநபர் சட்டத்தில் உரிமை இருப்பதால் இஸ்லாமிய ஆண்டுகள் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்களை பதிவு செய்யலாம் என்று மும்பை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் தானே பகுதியைச் சேர்ந்த இஸ்லாமிய இளைஞருக்கு ஏற்கனவே இரண்டு திருமணம் நடத்திருக்கிறது. அவர் மூன்றாவதாக அல்ஜீரியா நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்தார். இந்த திருமணத்தை பதிவு செய்ய மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்றிருக்கிறார். அங்கு 3வது திருமணத்தை பதிவு செய்ய அதிகாரிகள் மறுத்துள்ளதாக தெரிகிறது.

முஸ்லீம் ஆண்கள் 4 திருமணம் செய்யலாமா?

இரண்டு திருமணங்களை அந்த இளைஞர் பதிவு செய்துள்ளார். எனவே, மூன்றாவது திருணமத்தை பதிவு செய்ய அதிகாரிகள் மறுத்திருக்கின்றனர். தேவையான ஆவணங்கள் சமர்ப்பிக்காத காரணத்தால் இளைஞரின் மூன்றாவது திருமணத்தை பதிவு செய்ய அதிகாரிகள் மறுத்துவிட்டனர் என்று கூறப்படுகிறது.

மகாராஷ்டிரா ஒழுங்குமுறை மற்றும் திருமணப் பதிவுச் சட்டத்தின் கீழ், திருமணத்தின் வரையறை ஒரு திருமணத்தை மட்டுமே கருதுகிறது என்று அதிகாரிகள் கூறினர். இதனை எதிர்த்து இஸ்லாமிய இளைஞர் மும்பை உயர்நீதிமன்றம் கடந்த பிப்ரவி மாதம் மனு தாக்கல் செய்தார்.

Also Read: விமானம் மாதிரி இருக்கும் ரயில்.. வந்தே பாரத் லேட்டஸ்டில் இவ்வளவு வசதிகளா? வெளியான புகைப்படங்கள்!

எனது மூன்றாவது திருமணத்தை பதிவு செய்ய வேண்டும் என பதிவு செய்ய வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு குறித்தும் மும்பை நீதிமன்றம் பல கட்ட விசாரணைகள் நடத்தியது. இந்த நிலையில், நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் கோலபவல்லா மற்றும் சோமசேகர் சுந்தரேசன் ஆகியோர் கொண்ட அமர்வு தீர்ப்பு வழங்கியது.

அதன்படி, “மகாராஷ்டிர திருமண அமைப்பு மற்றும் திருமணப் பதிவுச் சட்டம், 1998-ன் விதிகளின் கீழ் ஒரு திருமணம் மட்டுமே பதிவு செய்ய முடியும் என்று அதிகாரிகள் கூறியிருப்பது முற்றிலும் தவறான கருத்து. இந்தச் சட்டத்தின் கீழ் இஸ்லாமிய ஆண் மூன்றாவது திருமணத்தைப் பதிவு செய்யலாம். இதற்கு எந்த தடையும் இல்லை.

மும்பை நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு

முஸ்லீம்களுக்கான தனிப்பட்ட சட்டங்களின் கீழ், ஒரே நேரத்தில் நான்கு மனைவிகளுடன் இருக்க அவர்களுக்கு உரிமை உண்டு. எனவே, முஸ்லீம் ஆண் ஒரே ஒரு திருமணத்தை மட்டுமே பதிவு செய்ய முடியும் என்ற அதிகாரிகளின் கருத்தை ஏற்க முடியாது.

இந்த கருத்தை நாங்கள் ஏற்றுக் கொண்டால் இந்த சட்டம் முஸ்லிம்களின் தனிப்பட்ட சட்டங்களை மீறுவதாக இருக்கும். திருமணத்தை பதிவு செய்யும்போது, தனிப்பட்ட சட்டங்களை அதிகாரிகள் கருத்தில் கொள்ளப்பட வேண்டியது மிகவும் முக்கியம்.

இஸ்லாமிய தனிநபர் சட்டத்தில் ஒரே நேரத்தில் 4 பெண்கள் திருமணம் செய்ய அனுமதிக்கிறது. எனவே, மூன்றாவது திருமணத்தை பதிவு செய்ய முடியாது என்பது தவறானது. எனவே, தேவையான ஆவணங்களை பெற்று, தம்பதியினரிடம் விசாரணை நடத்தி, பத்து நாட்களுக்கு திருமருணம் பதிவை செய்ய வேண்டும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு  உத்தரவிடுகிறோம்.

Also Read: இன்று நள்ளிரவு முதல் கரையை கடக்கும் டானா புயல்.. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்..

மறுக்கப்பட்டால், இந்த விவகாரம் மேலும் ஆய்வு மற்றும் விசாரணைக்காக சட்டத்தின் கீழ் பதிவாளர் ஜெனரலுக்கு அனுப்பப்படும்” என்று நீதிபதிகள் கூறினர். மேலும்,  திருமணப் பதிவு செயல்முறை நடந்துகொண்டிருக்கும்போதும் அல்ஜீரியா நாட்டைச் சேர்ந்த பெண் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என்றும், அவரது பாஸ்போர்ட் தொடர்பாகவும் எந்த முடிவு எடுக்கக் கூடாது என்று மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

Latest News