5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

இஸ்லாமியரால் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருக்க முடியாதா? நீதிமன்றம் பரபர கருத்து!

திருமணமான இஸ்லாமியர் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருக்க முடியாது என்று அலகாபாத் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இஸ்லாமியரால் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருக்க முடியாதா? நீதிமன்றம் பரபர கருத்து!
அலகாபாத் நீதிமன்றம்
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 09 May 2024 15:39 PM

அலகாபாத் நீதிமன்றம் பரபர தீர்ப்பு:

உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் முஹம்மது சதாப் கான். இவர் சினேகா தேவி என்ற பெண்ணுடன் லின் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்திருக்கிறார். இதனால், சினேகாதேவியின் பெற்றோர் எங்களது மகளைக் கடத்தி, திருமண செய்துக் கொள்ள முஹம்மது சதாப் கான் கட்டாயப்படுத்துவதாக அவர் மீது புகார் அளித்தனர்.

இதனை அடுத்து, முஹம்மது சதாப் கானும், சினேகா தேவி இருவரும் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் ரிட் மனுதாக்கல் செய்தனர். சட்டப்பிரிவு 21 உயிர் மற்றும் தனிப்பட்ட சுதந்திர பாதுகாப்பு கீழ் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ”நாங்கள் இருவரும் மைனர்.

எனவே, உச்ச நீதிமன்றத்தின்படி, லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் சேர்ந்து வாழ சுதந்திரம் இருப்பதாகவும், தங்கள் உயிருக்கு பாதுகாப்பு வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தனர்.

இந்த வழக்கு அலகாபாத் நீதிபதிகள் ஏ.ஆர்.மசூதி, ஏ.கே. ஸ்ரீவஸ்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை நடத்தது. விசாரணையின் முடிவில், “2020ல் முஹம்மது சதாப் கான் திருமணம் செய்து கொண்டார். அவருக்கு ஒரு குழந்தை இருக்கிறது என்பதை நீதிமன்றம் அறிந்து கொண்டது.

Also Read : “அதானி, அம்பானி வீட்டுக்கு ED அனுப்புங்கள்” ராகுல் காந்தி பதிலடி!

“திருமணமான இஸ்லாமியர் லிவ் இன் உறவில் இருக்க முடியாது”

இஸ்லாமியர் வாழ்கைத் துணையுடன் வாழும்போது மற்றொருவருடன் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருக்க உரிமை கோர முடியாது. இந்த உறவு முறைகள் இஸ்லாம் கொள்கையின்படி அனுமதிக்கப்படாது.

திருமண விஷயத்தில் அரசியலமைப்பு ஒழுக்கமும், சமூக ஒழுக்கமும் சமநிலையில் இருக்க வேண்டும். தவறினால், சமூகத்தில் அமைதி, சமூக ஒற்றுமை மங்கி மறைந்துவிடும்.

சட்டப்பிரிவு 21-ன் படி, திருமண உறவில் ஒழுக்கத்துடன் வாழும் தம்பதியினரை காப்பாற்றும். இந்திய அரசியலமைப்பு 21வது பிரிவு திருமண மீறிய உறவுக்காக எந்த பாதுகாப்பு வழங்காது.

ஒருவேளை இருவரும் திருமணமாகாதவர்கள் இருந்தால், தங்கள் விருப்பப்படி வாழ்க்கையை நடத்துவதைத் தேர்வு இச்சட்டம் வழிவகுக்கும். இந்த வழக்கின் தீர்ப்பும் மாறுப்படும். எனவே, சினேகா தேவியை அவரது பெற்றோருடன் பாதுகாப்புடன் அனுப்பி வைக்க வேண்டும் என்று காவல்துறைக்கு உத்தரவிடப்படுகிறது” என்றனர்.

Also Read : கொளுத்திப்போட்டட சாம் பிட்ரோடா! “காங்கிரஸ் கூட்டணியை முறிக்க ஸ்டாலின் தயாரா?” பிரதமர் மோடி கேள்வி

Latest News