5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Anant Radhika Wedding Expenses: ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சண்ட் திருமணம்.. ரூ. 5000 கோடி செலவில் கோலாகல ஏற்பாடுகள்..

முகேஷ் அம்பானி- நீடா அம்பானிக்கு 2 மகன்கள் ஒரு மகள் உள்ளனர். இதில் மூத்த மகன் ஆகாஷ் அம்பானிக்கு ஸ்லோகா மேத்தாவுடன் திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். இதில், இரண்டாவது மகனான ஆனந்த் அம்பானிக்கு திருமணம் நடைபெற உள்ளது. ஆனந்த் அம்பானி ரிலையன்ஸ் நிறுவனத்தின் எரிசக்தி வணிகத்தை வழிநடத்தி வருகிறார். பிரபல தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட் – ஷைலாவின் மகள் ராதிகா, இவர் நியூயார்க் பல்கலையில் பட்டம் பெற்றவர். ஆனந்த் அம்பானி, தன்னுடன் படித்த ராதிகா மெர்சன்டை காதலித்து வந்தார். கடந்த ஆண்டு ஜனவரி 19, 2023-ல் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

Anant Radhika Wedding Expenses: ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சண்ட் திருமணம்.. ரூ. 5000 கோடி செலவில் கோலாகல ஏற்பாடுகள்..
ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சண்ட்
aarthi-govindaraman
Aarthi Govindaraman | Updated On: 12 Jul 2024 07:48 AM

ஆனந்த் அம்பானி – ராதிகா திருமண நிகழ்வு: முகேஷ் அம்பானியின் மகன் – நீடா அம்பானியின் 2வது மகன் ஆனந்த அம்பானி – ராதிகா மெர்ச்சண்ட் திருமண நிகழ்வு இன்று மும்பையில் மிகவும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதற்காக அங்கு பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இத்தாலியில் கடந்த் ஆண்டு தொடங்கிய இந்த திருமண நிகழ்வு உலகத்தின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. ஆனால் இந்த திருமணத்திற்காக முகேஷ் அம்பானி உண்மையில் செலவுகளை அதிகமாக செய்யவில்லை என கூறுகின்றனர். அம்பானி குடும்பம் தங்கள் நிகர மதிப்பில் 0.5 சதவீதத்தை மட்டுமே ஆனந்த் மற்றும் ராதிகாவின் திருமணத்திற்காக செலவிடுகிறது என்று NC ஃபைனான்சியல் அட்வைசரி சர்வீசஸ்’ நிறுவனர் நிதின் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

முகேஷ் அம்பானி- நீடா அம்பானிக்கு 2 மகன்கள் ஒரு மகள் உள்ளனர். இதில் மூத்த மகன் ஆகாஷ் அம்பானிக்கு ஸ்லோகா மேத்தாவுடன் திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். இதில், இரண்டாவது மகனான ஆனந்த் அம்பானிக்கு திருமணம் நடைபெற உள்ளது. ஆனந்த் அம்பானி ரிலையன்ஸ் நிறுவனத்தின் எரிசக்தி வணிகத்தை வழிநடத்தி வருகிறார். பிரபல தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட் – ஷைலாவின் மகள் ராதிகா, இவர் நியூயார்க் பல்கலையில் பட்டம் பெற்றவர். ஆனந்த் அம்பானி, தன்னுடன் படித்த ராதிகா மெர்சன்டை காதலித்து வந்தார். கடந்த ஆண்டு ஜனவரி 19, 2023-ல் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

Also Read: கண்களை கவர்ந்த அம்பானி மருமகள் ராதிகா மெர்ச்சன்ட் ஆடை.. இணையத்தில் வைரல்…!

மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட ஆனந்த் மற்றும் ராதிகாவின் திருமணம் இன்று இந்து முறைப்படி மும்பையில் இருக்கும் ஜியோ கன்வென்ஷன் செண்டரில் நடைபெறுகிறது. இதற்காக உலகில் இருக்கும் பிரபலங்கள் பலரும் இந்தியா வருகை தந்துள்ளனர். அவர்களுக்கு பிரத்தியேகமாக அழைப்புகள் விடுக்கப்பட்டது. இதில் முக்கியமாக ஆனந்த் ராதிகா திருமண அழைப்பிதழின் மதிப்பு மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஒரு திருமண அழைப்பிதழ் சுமார் 6 முதல் 7 லட்சம் ரூபாய் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதைதவிர இந்த திருமண செலவுகள் மொத்தமும் சுமார் ரூ.5000 கோடி மதிப்பில் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

அனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் திருமணத்திற்கு விருந்தினர்களை அழைப்பதற்காக அம்பானி குடும்பம் 2000 ஜெட் விமானங்களை வாடகைக்கு எடுத்துள்ளது. கிளப் ஒன் ஏர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ராஜன் மெஹ்ரா, இந்த நிகழ்விற்கு 100க்கும் மேற்பட்ட தனியார் விமானங்கள் பயன்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார். பிரபல பாப் பாடகர்கள் ரிஹன்னா, ஜஸ்டின் பீபர் உள்ளிட்டோர் இவர்களின் திருமண நிகழ்விற்கு சிறப்பு விருந்தினரகளாக கலந்து கொண்டனர். இதற்காக சுமார் 15 மில்லியன் டாலர் செலவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம் சுமார் 320 மில்லியன் டாலர் இவர்களின் திருமண நிகழ்விற்காக செலவு செய்யப்பட்டுள்ளது என கூறுகின்றனர்.

Also Read: டபுள் ஹேப்பி.. மருமகளும் திருநெல்வேலி தான்..நன்றி மறக்காத நெப்போலியன்!

Latest News