5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

எதுக்கு 2 நாள் லீவ்? கவலைப்படும் இன்போசிஸ் நாராணய மூர்த்தி.. கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!

Narayana Murthy : வாரத்திற்கு ஆறு நாள் வேலை செய்வது என்ற தனது நிலைப்பாட்டில் தான் உறுதியாக இருப்பதாக வாரத்திற்கு 70 மணி நேரம் மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி கூறியுள்ளார். இவர் கூறிய கருத்திற்கு நெட்டிசன்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

எதுக்கு 2 நாள் லீவ்? கவலைப்படும் இன்போசிஸ் நாராணய மூர்த்தி.. கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
நாராயண மூர்த்தி (picture credit : PTI)
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 15 Nov 2024 16:49 PM

வாரத்திற்கு ஆறு நாள் வேலை செய்வது என்ற தனது நிலைப்பாட்டில் தான் உறுதியாக இருப்பதாக வாரத்திற்கு 70 மணி நேரம் மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி கூறியுள்ளார். ஏற்கனவே, இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி கடந்த ஆண்டு கூறியது பெரும் விவாதத்தை கிளப்பியது. இதற்கு பலரும் கடும் எதிர்ப்புகளை தெரிவித்தனர். இந்த சூழலில், மீண்டும் அவர் பேசியது தற்போது விவாதத்தை கிளப்பியுள்ளது. அதாவது, வாரத்திற்கு ஆறு நாள் வேலை செய்வது என்ற தனது நிலைப்பாட்டில் தான் உறுதியாக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

”வாரத்தில் 6 நாட்கள் வேலை”

குளோபல் லீடர்ஷிப் உச்சிமாநாட்டில் மூர்த்தி நாராயண மூர்த்தி இந்த கருத்தை கூறியுள்ளார். அதாவது, “முதலில், வேலை-வாழ்க்கை சமநிலையில் எனக்கு நம்பிக்கை இல்லை. இந்தியாவின் வளர்ச்சிக்கு தியாகம் தேவை. ஓய்வெடுப்பது அல்ல.

Also Read : ஜார்க்கண்டில் பாஜக பிரச்சாரத்தில் பிரபல நடிகரின் பர்ஸ் திருட்டு..!

நாட்டின் முன்னேற்றத்திற்கு இந்தியர்கள் வாரத்திற்கு 70 மணி நேரம் உழைக்க வேண்டும். 1986ல் இந்தியாவில் ஆறு நாட்கள் வேலை, ஐந்து நாட்களாக மாறியது. எனவே, வாரத்திற்கு ஆறு நாள் வேலை அவசியம். இதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

அந்த கருத்தை தன் கல்லறை வரை கொண்டு செல்வேன். ஒருபோதும் அதை மாற்றிக் கொள்ளபோவதில்லை. நீங்கள் மிகவும் புத்திசாலியாக இருந்தாலும், நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும். நான் மிகவும் கடினமாக உழைத்ததற்காக மிகவும் பெருமைப்படுகிறேன்… நான் ஓய்வு பெறும் வரை ஒரு நாளைக்கு 14 மணி நேரம் உழைத்தேன்.

வாரத்தில் 6.5 நாட்களும் உழைத்தேன். இந்தியா வளர்ந்து வரும் நாடு. இதனால் பல சவால்களை எதிர்கொண்டு வருகிறது. எனவே, நாட்டின் முன்னேற்றத்திற்கு கடினமாக உழைக்க வேண்டும். பிரதமர் மோடி வாரத்தில் 100 மணி நேரம் உழைக்கிறார்.

Also Read : மைனர் மனைவியுடன் பாலியல் உறவு சரியா? மும்பை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கொந்தளிக்கும் நெட்டிசன்கள்

அவரது அமைச்சர்கள், அதிகாரிகளும் கடுமையாக உழைக்கும்போது, இந்த அற்புதமான விஷயங்கள் அனைத்திற்கும் நமது பாராட்டுகளை வெளிப்படுத்த ஒரே வழி, நமது உழைப்பு தான்” என்று கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு அக்டோபரில், சீனா மற்றும் ஜப்பான் போன்ற வேகமாக வளரும் நாடுகளுடன் இந்தியா போட்டியிட, இளைஞர்கள் வாரத்திற்கு 70 மணிநேரம் வேலை செய்ய வேண்டும் என்று மூர்த்தி கூறியிருந்த நிலையில், மீண்டும் அந்த முடிவில் உறுதியாக இருப்பதாக கூறியுள்ளார்.

நாராயண மூர்த்தி கூறிய கருத்துகளுக்கு நெட்டிசன்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதாவது, 6 நாட்கள் வேலை செய்வது கடினம் என்றும், இது தவறான முறை என்றும் நெட்டிசன்கள் கூறியுள்ளனர்.

அண்மைக் காலமாக பணி நேரம் என்பது விவாத பொருளாக மாறியுள்ளது. குறிப்பாக கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு பணி நேரம் என்பது மாற்றப்பட்டாக பலரும் கூறுகின்றனர். குறிப்பாக அலுவலகத்தில் வேலை என்பது மாறி வீட்டில் இருந்து வேலை பார்க்கும் முறை பல நிறுவனங்களில் வந்துள்ளது.

இதனால் அதிக நேரம் வேலை பார்ப்பதாக இளைஞர்கள் பலரும் கூறுகின்றனர். ஒரு காலத்தில் 15 மணி நேரத்திற்கு மேலாக அடிமைகள் போல் தொழிலாளர்கள் வேலை பார்த்தனர். இதனால் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு, வேலை நேரம் 12 மணி நேரமாக குறைக்கப்பட்டது.

Also Read : பிரதமர் மோடியின் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு.. பதறிய அதிகாரிகள்.. என்னாச்சு?

பின்னர், சர்வதேக தொழிலாளர்களின் முயற்சிகளுக்கு பிறகு வேலை நேரம் 8 மணி நேரமாக குறைக்கப்பட்டது. 8 மணி நேரம் வேலை, 8 மணி நேரம் ஓய்வு என தொழிலாளர்களின் உரிமையாக கருதப்பட்டது. இந்த 8 மணி நேரம் வேலையின்போதே பல உடல்நல பிரச்னைகள் ஏற்படுகின்றனர்.

இப்படியிருக்கையில், இதை உயர்த்தினால் பாதிப்புகள் அதிகமாகும் என பலரும் அச்சப்படுகின்றனர்.  இந்த சூழலில், இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி  வாரத்தில் 6 நாட்கள் வேலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்.

Latest News