PM Modi : ஜூன் 9ம் தேதி பிரதமராக பதவியேற்கும் நரேந்திர மோடி.. ஏற்பாடுகள் தீவிரம்!

Narendra Modi : 3வது முறையாக மோடி பிரதமராக பதவியேற்கவுள்ளார். நேற்றே, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்த மோடி, பிரதமர் பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தையும், 17வது மக்களவைய கலைக்கும் அமைச்சரவைக் கூட்டத்தின் பரிந்துரையும் குடியரசுத் தலைவரிடம் கொடுத்தார். இந்நிலையில் நாளை குடியரசுத்தலைவரை மோடி சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார்.

PM Modi : ஜூன் 9ம் தேதி பிரதமராக பதவியேற்கும் நரேந்திர மோடி.. ஏற்பாடுகள் தீவிரம்!

பிரதமர் மோடி

Published: 

06 Jun 2024 17:27 PM

நரேந்திர மோடி : ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெற்று முடிந்த நிலையில், ஜூன் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டது. நாடு முழுவதும் பாஜக கூட்டணி 292 இடங்களிலும், பாஜக தனித்து 240 தொகுதிகளில் மட்டுமே வென்றது. பெரும்பான்மைக்கு கூட்டணி கட்சிகளை நம்பி கைகோர்த்த பாஜக நரேந்திர மோடியை ஒருமனதாக தேர்வு செய்தது. இந்நிலையில் அவர் எப்போது பிரதமராக பதவியேற்பார் என யூகங்கள் இருந்த நிலையில் ஜூன் 9ம் தேதி மாலை பதவியேற்பு இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக டெல்லியில் உள்ள பிரதமரின் இல்லத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அந்தக் கூட்டத்தின் முடிவில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவராக மோடி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

மேலும், சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் ஆகியோர் தங்களது ஆதரவை எழுத்துப்பூர்வமாக அளித்தனர். இதன் மூலம் 3வது முறையாக மோடி பிரதமராக பதவியேற்கவுள்ளார். நேற்றே, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்த மோடி, பிரதமர் பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தையும், 17வது மக்களவைய கலைக்கும் அமைச்சரவைக் கூட்டத்தின் பரிந்துரையும் குடியரசுத் தலைவரிடம் கொடுத்தார். இந்நிலையில் நாளை குடியரசுத்தலைவரை மோடி சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார். அதன்படி ஜூன்9ம் மாலை 6 மணிக்கு பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது

Also Read : சுரேஷ் கோபி வெற்றியால் வெடித்த பிரச்னை.. கேரள காங்கிரஸ் வேட்பாளர் முரளிதரன் எடுத்த ஷாக் முடிவு

பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக பதவி ஏற்க உள்ள நிலையில், தொடர்ந்து மூன்று முறை பிரதமரான முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு சாதனையை பிரதமர் மோடி சமன் செய்ய உள்ளார்.

நீண்ட கால பிரதமர்களின் லிஸ்ட்:

இந்த நிலையில், இந்தியாவில் நீண்ட கால பிரதமர்கள் யார் என்ற பட்டியலை அலசி பார்ப்போம். நாட்டின் மிக நீண்ட காலம் பிரதமராகப் பதவி வகித்தவர் ஜவஹர்லால் நேரு. ஏறத்தாழ 17 ஆண்டுகள் அவர் பிரதமர் பதவியில் இருந்தார். அதாவது, நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு 16 ஆண்டுகள் 286 நாட்கள் பிரதமர் பதவியில் இருந்த நிலையில், இவருக்கு அடுத்த படியாக அவரது மகள் இந்திரா காந்தி 11 ஆண்டுகளாக பிரதமர் பதவியை அலங்கரித்தார். அதாவது, 11 ஆண்டுகள் 59 நாட்கள் பிரதமராக இருந்தார். இவர்களுக்கு அடுத்தப்படியாக நரேந்திர மோடி அடைந்துள்ளார். 2014ஆம் ஆண்டு மே 26ஆம் தேதி நாட்டின் 14வது பிரதமராக பதவியேற்றார் நரேந்திர மோடி. தொடர்ந்து இரண்டாவது முறையாக 2019ஆம் ஆண்டு மே 30ஆம் தேதி மீண்டும பிரதமராக பொறுப்பேற்றார். தற்போதைய நிலவரப்படி, நரேந்திர மோடி 10 ஆண்டுகள் 8 நாட்களுக்கு மேல் பிரதமர் பதவியில் இருந்து வருகிறார்.

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!