PM Modi Swearing-in Ceremony 2024: 3ஆவது முறையாக பிரதமராக பதவியேற்றார் மோடி.. கரகோஷம் எழுப்பிய தொண்டர்கள்! - Tamil News | | TV9 Tamil

PM Modi Swearing-in Ceremony 2024: 3ஆவது முறையாக பிரதமராக பதவியேற்றார் மோடி.. கரகோஷம் எழுப்பிய தொண்டர்கள்!

குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியல் மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றார் மோடி. அவருக்கு குடியரசுத் தலைர் திரௌபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார். டெல்லியில்  மிகவும் பிரம்மாணடமாக பதவியேற்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் அரசியில் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், குடிமக்கள் என 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மேலும், மோடியின் பதவியேற்பு விழாவில் மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, நேபாள பிரதமர் புஷ்ப கமால் தாஹல் பிரச்சாந்தா, இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, மொரிஷியல் பிரதமர் பிரவிந்த் குமுர் ஜுகனாத், பூட்டார் பிரதமர் ஷெரிங் டாக்டே ஆகியோர் கலந்து கொண்டனர்.

PM Modi Swearing-in Ceremony 2024: 3ஆவது முறையாக பிரதமராக  பதவியேற்றார் மோடி.. கரகோஷம் எழுப்பிய தொண்டர்கள்!

மோடி

Updated On: 

09 Jun 2024 20:37 PM

பிரதமராக பதவியேற்ற மோடி: உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1ஆம் தேதி முதல் நடந்து முடிந்தது. ஜூன் 4ஆம் தேதி தேர்தல் முடிவுகள் நிலையில், பாஜக 240 இடங்களை கைப்பற்றியது. தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களில் வென்றது. இந்தியா கூட்டணி 232 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பாஜகவுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்காத சூழலில், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கிறார் மோடி. இந்த நிலையில்,  டெல்லியில் 3வது முறையாக பிரதமராக மோடி பதவியேற்றார். டெல்லியில்  மிகவும் பிரம்மாணடமாக பதவியேற்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் அரசியில் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், குடிமக்கள் என 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மேலும், மோடியின் பதவியேற்பு விழாவில் மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, நேபாள பிரதமர் புஷ்ப கமால் தாஹல் பிரச்சாந்தா, இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, மொரிஷியல் பிரதமர் பிரவிந்த் குமுர் ஜுகனாத், பூட்டார் பிரதமர் ஷெரிங் டாக்டே ஆகியோர் கலந்து கொண்டனர்.

Also Read: அண்ணாமலைக்கு நோ சொன்ன மோடி.. அமைச்சரவையில் இடம்பெற்ற தமிழர்கள் யார்?

இதனால் டெல்லி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.  பதவியேற்பு விழாவுக்கு நீல நிற கோட்  அணிந்து வந்த மோடிக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர், 3வது முறையாக பிரதமராக மோடி பதவியேற்றார். மோடிக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.  மோடி பதவியேற்றபோது தொண்டர்கள் பலரும் மோடி மோடி என கோஷமிட்டனர். பிரதமர் மோடி ஐவஹர்லால் நேருவுக்கு பின்னர் 3வது முறையாக நாட்டின் பிரதமாராகும் ஒரே நபர் என்ற அந்தஸ்ந்தைப் பெறுகிறார்.

பிரதமர் மோடி பதவியேற்றதை தொடர்ந்து, அமைச்சர்கள் பலரும் பதவியேற்றுக் கொண்டனர். அதாவது, ராஜ்நாத் சிங், அமித்ஷா, நிதின் கட்கரி, நட்டா, சிவராஜ் சிங் சௌகான்,நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர், மனோகர் லால் கட்டார், குமாரசாமி, பியூஷ் கோயல், தர்மேந்திர பிரதான், ஜிதன் ராம் மாஞ்சி, விரேந்திர குமார், சர்பானந்தா சோனோவால், ராம் மோகன் நாயுடு, விரேந்திர குமார், பிரகலாத் ஜோஷி, கிரிராஜ் சிங், ஜுவல் ஓரம், ராஜீவ் ரஞ்சன் சிங், அஷ்விணி வைஷ்ணவ் உள்ளிட்டோர் பதவியேற்றுக் கொண்டனர்.

Also Read: அமைச்சரவையில் இடம்பெற்ற நட்டா.. பாஜவின் புதிய தேசிய தலைவர் யார்?

12 வயதுக்குள் உங்கள் குழந்தை கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம்!
உங்கள் பயணங்களை சிறப்பான மாற்ற சில டிப்ஸ்!
கீரை ஃப்ரெஷாக இருக்க சில டிப்ஸ்
காலையில் எழுந்தவுடன் செல்போன் பார்ப்பதால் இவ்வளவு பிரச்னையா?