5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Haryana CM: ஹரியானா புதிய முதல்வர் இவரா? அக்டோபர் 17ல் பதவியேற்பு.. பிரதமர் மோடி பங்கேற்பு!

ஹரியானாவில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜக அபார வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் மூன்றாவது முறையாக பாஜக ஆட்சி அமைத்துள்ளது. ஹரியானா வரலாற்றிலேயே ஒரு கட்சி மூன்றாது முறை ஆட்சி அமைப்பது இதுவே முதல்முறை. இந்த நிலையில், ஹரியானாவில் வரும் 17ஆம் தேதி பாஜக புதிய அரசை அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Haryana CM: ஹரியானா புதிய முதல்வர் இவரா? அக்டோபர் 17ல் பதவியேற்பு.. பிரதமர் மோடி பங்கேற்பு!
ஹரியான முதல்வர் – பிரதமர் மோடி (picture credit: PTI)
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 12 Oct 2024 15:23 PM

ஹரியானாவில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜக அபார வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் மூன்றாவது முறையாக பாஜக ஆட்சி அமைத்துள்ளது. ஹரியானா வரலாற்றிலேயே ஒரு கட்சி மூன்றாது முறை ஆட்சி அமைப்பது இதுவே முதல்முறை. இந்த நிலையில், ஹரியானாவில் வரும் 17ஆம் தேதி பாஜக புதிய அரசை அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், புதிய முதல்வராக மீண்டும் நயாப் சிங் சைனி பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஹரியானாவில் கடந்த 1ஆம் தேதி 90 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. இதில் பதிவான வாக்குகள் கடந்த 8ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில், பாஜக 48 இடங்களை கைப்பற்றியது. காங்கிரஸ் 37 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.

ஹரியானா புதிய முதல்வர்:

மேலும், 3 இடங்களில் சுயேட்சைகளும், 2 இடங்களில் தேசிய லோக் தளம் கட்சியும் வெற்றி பெற்றது. இதில் ஒரு சுயேச்சை எம்எல்ஏ பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில், பாஜகவுக்கு எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 49ஆக உயர்ந்தது. இந்த நிலையில்,  ஹரியானாவில் வரும் 17ஆம் தேதி பாஜக புதிய அரசை அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், புதிய முதல்வராக மீண்டும் நயாப் சிங் சைனி பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  ஹரியானா முதல்வராக நயாப் சிங் சைனி அக்டோபர் 17 ஆம் தேதி காலை 10 மணிக்கு பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Also Read: டாடா அறக்கட்டளைக்கு புதிய தலைவர் நியமனம்.. யார் இந்த நோயல்?

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள், மூத்த தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. விழாவுக்கு முன்னதாக நடைபெறும் கூட்டத்தில் சைனி பாஜகவின் சட்டமன்றக் கட்சியின் தலைவராக முறைப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்.

பதவியேற்பு விழா ஏற்பாடுகளை மேற்பார்வையிட மாநில தலைமைச் செயலாளரால் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என்று வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தக் குழுவுக்கு பஞ்சகுலா மாவட்ட ஆணையர் தலைமை தாங்குவார். முன்னதாக கடந்த மார்ச் மாதம் மனோகர் லால் கட்டாருக்குப் பதிலாக முதல்வராகப் பதவியேற்றவர் நயாப் சிங் சைனி.

தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால் நயாப் சைனி முதல்வராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்பதை கட்சி கூறியிருந்தது. அதன்படியே தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதை அடுத்து, முதல்வராக நயாப் சிங் சைனியை கட்சி மேலிடம் தேர்வு செய்துள்ளது. அவர், வரும் 17ஆம் தேதி பதவியேற்க உள்ளார். இவர் மாநிலத்தின் முக்கிய வாக்கு வங்கியான இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்.

நூலிழையில் வென்ற பாஜக:

நடந்து முடிந்த தேர்தலில் பாஜக பெரும்பான்மை பலத்துடன் 3வது முறையாக ஆட்சியை கைப்பற்றி உள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட காங்கிரஸ் 37 இடங்களில் வென்று அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது. இத்தேர்தலில் ஆம் ஆத்மி தனித்து போட்டியிட்டதால் வாக்குகள் சிதறியது காங்கிரஸ் தோல்விக்கு மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

கடந்த 2019 தேர்தலை விட பாஜக, காங்கிரஸ் இரு கட்சிகளும் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது. அப்போது 90 இடங்களில் பாஜக 40ல் வெற்றி பெற்றது. அதன் வாக்கு சதவீதம் 36.49 ஆக இருந்தது. இம்முறை 48 இடங்களில் வென்ற நிலையில், பாஜகவின் வாக்கு சதவீதம் 39.94 சதவீதமாக அதிகரித்துள்ளது.

Also Read: பிரதமர் மோடி பரிசாக கொடுத்த காளி கோயில் கிரீடம் திருட்டு!

இதுவே காங்கிரஸ் கட்சி 2019 தேர்தலில் 31 இடங்களில் வென்றபோது, 28.08 சதவிதமாக இருந்த வாக்கு சதவீதம், இம்முறை 37 தொகுதிகளில் வென்ற நிலையில், 11 சதவீதம் அதிகரித்து 39.09 சதவீதமாகி உள்ளது. பாஜக, காங்கிரஸ் இடையே வாக்கு சதவீத வித்தியாசம் வெறும் 0.85 சதவீதம் மட்டுமே. இதன் மூலம் தனித்து ஆட்சி அமைத்தாலும் பாஜக நூலிழையில் வெற்றியை வசமாக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News