5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Maharastra: தேர்தலில் ஜெயித்தால் தொகுதி இளைஞர்களுக்கு திருமணம்- வாக்குறுதி கொடுத்த வேட்பாளர்!

Maharastra Assembly Election 2024: மகாராஷ்டிரா மாநிலத்தில் வரும் நவம்பர் 20ஆம் தேதி மொத்தம் உள்ள 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினரிடையே கடும் போட்டி நிலவுகிறது. இப்படியான நிலையில் நேற்று (நவம்பர் 7) காங்கிரஸ், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா,  சரத்பாபுவின் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கொண்ட கூட்டணியான மகா விகாஸ் அகாடி சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. 

Maharastra: தேர்தலில் ஜெயித்தால் தொகுதி இளைஞர்களுக்கு திருமணம்-  வாக்குறுதி கொடுத்த வேட்பாளர்!
ராஜா சாகேப் தேஷ்முக் (கோப்பு புகைப்படம்)
petchi-avudaiappantv9-com
Petchi Avudaiappan | Published: 08 Nov 2024 17:42 PM

மகாராஷ்ட்ரா: மகாராஷ்ட்ராவில் நடைபெற்ற உள்ள சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால் தனது தொகுதியில் உள்ள திருமணமாகாத இளைஞர்களுக்கு மணமுடித்து வைப்பதாக வேட்பாளர் ஒருவர் வாக்குறுதியளித்துள்ள சம்பவம் பெரும் பேசுபொருளாக சமூக வலைத்தளங்களில் மாறியுள்ளது. பொதுவாக இந்தியா மட்டுமல்ல உலக நாடுகள் அனைத்திலும் தேர்தல் என வந்து விட்டாலே போட்டியிடும் வேட்பாளர்கள் தொடங்கி அவர்களுக்காக பிரச்சாரம் செய்யும் கட்சியின் உயர்மட்ட தலைவர்கள், அடிமட்ட தொண்டர்கள் வரை அனைவரும் தங்கள் விருப்பங்களுக்கு ஏற்ப கட்சி அளித்துள்ள வாக்குறுதிகளுடன் சில எக்ஸ்ட்ரா உறுதிமொழிகளையும் அளிப்பார்கள். அதாவது தனது தொகுதியின் பிரச்னை அறிந்து அதனை சரி செய்ய வாக்குறுதி கொடுப்பார்கள். ஆனால் மகாராஷ்ட்ராவில் அளிக்கப்பட்ட வாக்குறுதி எல்லாவற்றையும் தூக்கி சாப்பிடுவது போல உள்ளதாக பலரும் தெரிவித்துள்ளனர்.

அங்குள்ள பீட் மாவட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் சரத்பவார் கட்சியின் சார்பில் பர்லி தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ராஜா சாகேப் தேஷ்முக் என்பவர் தான் இந்த வாக்குறுதியை அளித்துள்ளார். கிராமப்புறங்களில் திருமண வயதை எட்டிய ஆண்களுக்கு மணமகள் கிடைக்காமல் போகும் பிரச்சினையை அவர் தனது தேர்தல் பரப்புரையின் போது பேசினார்.

“வரும் சட்டமன்ற தேர்தலில் நான் எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டால் தொகுதி இளைஞர்களுக்கு திருமணம் செய்து வைப்பேன். அவர்களுக்கு வேலை ஏற்பாடு செய்யப்படும்.  வேலை கிடைக்காததால் பல இளைஞர்கள் திருமணம் செய்துக் கொள்ளாமல் இருக்கிறார்கள்” என  தெரிவித்துள்ளார். ஒருவேளை ராஜா சாகேப் தேஷ்முக் வெற்றி பெற்றால் அவர் தனது வாக்குறுதியை எப்படி நிறைவேற்றப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Also Read: Himachal Pradesh: முதலமைச்சரின் சமோசாவை சாப்பிட்டது தப்பு.. இமாச்சலில் 5 பேருக்கு நோட்டீஸ்!

விறுவிறுப்பாக செல்லும் தேர்தல் களம்

மகாராஷ்டிரா மாநிலத்தில் வரும் நவம்பர் 20ஆம் தேதி மொத்தம் உள்ள 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினரிடையே கடும் போட்டி நிலவுகிறது. இப்படியான நிலையில் நேற்று (நவம்பர் 7) காங்கிரஸ், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா,  சரத்பாபுவின் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கொண்ட கூட்டணியான மகா விகாஸ் அகாடி சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.

இதில் எங்கள் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மாதம் ரூ. 3 ஆயிரம் உதவித்தொகையும், வேலையிலாத இளைஞர்களுக்கு மாதம் ரூ. 4 ஆயிரம் உதவி தொகையும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இலவச பேருந்து பயணம், ரூ.3 லட்சம் வரையிலான விவசாய கடன் தள்ளுபடி, விவசாய கடனை முறையாக செலுத்தினால் ரூ.50 ஆயிரம் ஊக்கத்தொகை, ரூ.25 லட்சம் வரை சுகாதார காப்பீடு என பல வாக்குறுதிகளை மகாவிகாஸ் அகாடி அள்ளி வீசியுள்ளது. இதனால் அக்கூட்டணி தேர்தலில் கண்டிப்பாக வெற்றி பெறுவோம் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

அதேசமயம் பாஜக ஜார்க்கண்ட் மற்றும் மகாராஷ்ட்ரா சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றி விட வேண்டும் என வியூகத்துடன் செயல்பட்டு வருவதால் கடும் போட்டி நிலவுகிறது.

Also Read: Sabarimala: சபரிமலை போகும் பக்தர்களுக்கு சிக்கல்.. இந்த தப்பை பண்ணாதீங்க!

எதிர்பார்ப்பில் அரசியல் வட்டாரம்  

இதனிடையே மகாராஷ்டிராவை பொறுத்தவரையில் அங்கு அரசியல் பாதையை எடுத்துக் கொண்டால் சிவசேனா கட்சி தான் ஆரம்பகால அரசியலில் இருந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சியுடன் இணைந்து ஆட்சியை கைப்பற்ற பாஜக முயன்றது. ஆனால் அதற்கு சிவசேனா ஒத்துவரவில்லை. இதனால் சிவசேனா கட்சியில் இருந்த முக்கிய தலைவரான ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சில எம்எல்ஏக்கள் பிரிந்து சென்று பாஜகவில் இணைந்தனர்.

இதனால் பெரும்பான்மை இழந்தால் சிவசேனா அரசு கவிழ்ந்தது. மேலும் கட்சிக்கு உத்தவ் தாக்கரே மற்றும் ஏக்நாத் ஷிண்டே தரப்பு உரிமை கோரியதால் கட்சி இரண்டாக உடைந்தது.  சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கும் இதே நிலைமைதான் உள்ளது. இப்படியான நிலையில்தான் அந்த இரண்டு கட்சிகளும் இணைந்து காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது.

Latest News