நாடாளுமன்றத்தில் முதல் நாளே எதிரொலித்த நீட் விவகாரம்.. பாஜகவுடன் மல்லுக்குட்டும் I.N.D.I.A கூட்டணி! - Tamil News | | TV9 Tamil

நாடாளுமன்றத்தில் முதல் நாளே எதிரொலித்த நீட் விவகாரம்.. பாஜகவுடன் மல்லுக்குட்டும் I.N.D.I.A கூட்டணி!

2024-25ஆம் ஆண்டுக்கான் பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. மக்களவை தொடங்கியதும் நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக எதிர்க்கட்சிகள் மற்றும் மத்திய அரசு இடையே காரசார விவாதம் நடைபெற்றது. குறிப்பாக, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்தார். "மில்லியன் கணக்கான மாணவர்கள் இது மோசடி என்று நம்புகிறார்கள். பணம் இருந்தால் தேர்வுகளை விலைக்கு வாங்க முடியும் என்று கோடிக்கணக்கான மாணவர்கள் நம்புகிறார்கள். இதே உணர்வுதான் எதிர்கட்சியினருக்கும் உள்ளது" என்றார்.

நாடாளுமன்றத்தில் முதல் நாளே எதிரொலித்த நீட் விவகாரம்.. பாஜகவுடன் மல்லுக்குட்டும் I.N.D.I.A  கூட்டணி!

ராகுல் காந்தி - தர்மேந்திர பிரதான்

Updated On: 

22 Jul 2024 15:45 PM

பட்ஜெட் கூட்டத்தொடர்: 2024-25ஆம் ஆண்டுக்கான் பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. மக்களவை தொடங்கியதும் நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக எதிர்க்கட்சிகள் மற்றும் மத்திய அரசு இடையே காரசார விவாதம் நடைபெற்றது. நீட் முறைகேடு தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் மக்களவை தொடங்கியதும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தனர். தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், “நீட் முறைகேடுகளுக்கு மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரா பிரதான் பொறுப்பேற்க வேண்டும்” என்று பேசினார். இதற்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், “ஓரிரு இடங்களில் தான் நீட் முறைகேடு நடந்துள்ளது. பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்பட்டால் ஒட்டுமொத்த பாஜக அரசும ஏற்கும்” என்றார். இதன்பின், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், “நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்துகிறார்கள். விசாரணையில் பல விஷயங்கள் வெளிவருகின்றன. கைதுகள் நடக்கின்றன. வினாத்தாள் கசிவுகளில் இந்த அரசு புதிய சாதனை படைத்துள்ளது. தர்மேந்திர பிரதான் கல்வி அமைச்சராக தொடர்ந்தால் மாணவர்களுக்கு நீதி கிடைக்காது” என்று தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், “உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளின்படி முடிவுகள் வெளியாகின. இந்த விவகாரத்தில் நான் அரசியல் செய்ய விரும்பவில்லை. ஆனால் அகிலேஷ் யாதவ் (உத்தரப்பிரதேச முதல்வராக) பொறுப்பில் இருந்தபோது எத்தனை வினாத்தாள் கசிவுகள் நடந்தன என்ற பட்டியல் என்னிடம் உள்ளது” என்றார்.

முதல் நாளே காரசார விவாதம்:

இந்த பரபரப்பான விவாதத்திற்கு இடையே எழுந்த எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்தார். அவர் பேசுகையில், “நீர் தேர்வு முறையில் ஒரு மிகக் கடுமையான பிரச்சனை உள்ளது என்பது முழு நாட்டிற்கும் தெளிவாகத் தெரிகிறது. அமைச்சர் தன்னைத் தவிர மற்ற அனைவரையும் குற்றம் சாட்டியுள்ளார். இங்கு என்ன நடக்கிறது என்பதன் அடிப்படைகள் அவருக்கு புரியவில்லை என்று நினைக்கிறேன். மில்லியன் கணக்கான மாணவர்கள் இது மோசடி என்று நம்புகிறார்கள். பணம் இருந்தால் தேர்வுகளை விலைக்கு வாங்க முடியும் என்று கோடிக்கணக்கான மாணவர்கள் நம்புகிறார்கள். இதே உணர்வுதான் எதிர்கட்சியினருக்கும் உள்ளது” என்றார்.

இதற்கு பதிலளித்த கல்வி அமைச்சர், “கத்துவதால் பொய் உண்மையாகிவிடாது. நாட்டின் தேர்வு முறை குப்பை என்று எதிர்க்கட்சித் தலைவர் கூறுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. போட்டித் தேர்வுகளில் முறைகேடுகளை தடுக்கும் நோக்கில் அரசு புதிய சட்டத்தை கொண்டு வந்துள்ளது. 2010ல் கல்விச் சீர்திருத்தங்களுக்கான மூன்று மசோதாக்களை அமைச்சர் கபில் சிபல் கொண்டு வந்தார். யாருடைய அழுத்தத்தால் அந்த மசோதா வாபஸ் பெறப்பட்டது. தனியார் மருத்துவக் கல்லூரிகளின் அழுத்தத்தால் இது நடந்ததா? என்று கூறினார்.

இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, “கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதில் அளித்திருக்க வேண்டும். உச்சநீதிமன்றம் மற்றும் பிரதமர் மோடியைப் பற்றி அவர் பேசினார். ஆனால் இந்த விவகாரத்தில் என்ன செய்கிறார் என்பதை அவரால் சொல்ல முடியவில்லை. நீட் மிகவும் மோசமானது. இளைஞர்களுக்கான முக்கியமான பிரச்சினையை நாங்கள் எப்போதும் நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். நாங்கள் தொடர்ந்து இந்த பிரச்சினையை எழுப்பி அரசுக்கு அழுத்தம் கொடுப்போம்” என்றார்.

Also Read: குழந்தைகளை தாக்கும் சண்டிபுரா வைரஸ்.. அறிகுறிகள் என்ன?

உங்கள் பயணங்களை சிறப்பான மாற்ற சில டிப்ஸ்!
கீரை ஃப்ரெஷாக இருக்க சில டிப்ஸ்
காலையில் எழுந்தவுடன் செல்போன் பார்ப்பதால் இவ்வளவு பிரச்னையா?
46 ரன்களுக்கு ஆல் அவுட்.. மோசமான சாதனை படைத்த இந்திய அணி..!