ஸ்வாதி மலிவாலுக்கு நடந்தது என்ன? வெளியான புது சிசிடிவி காட்சிகள் - Tamil News | | TV9 Tamil

ஸ்வாதி மலிவாலுக்கு நடந்தது என்ன? வெளியான புது சிசிடிவி காட்சிகள்

Updated On: 

18 May 2024 13:15 PM

Swati Maliwal: முதல்வர் கெஜ்ரிவாலின் தனிப்பட்ட உதவியாளர் ஸ்வாதி மலிவாலை தாக்கப்பட்டாக கூறப்படும் சம்பவம் டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஸ்வாதி மலிவாலிடம் உயர் அதிகாரிகள் வாக்குமூலம் பெற்றனர். முதல்வர் கெஜ்ரிவாலின் வீட்டிற்கு சென்றபோது அவரின் உதவியாளர் பிபவ் குமார் கொடூரமாக தாக்கியதாக குற்றம்சாட்டினார். தாக்குதலின்போது தன்னுடைய ஆடை கிழிந்ததாகவும், தலை மற்றும் காலில் பலத்த காயம் ஏற்பட்டதாக கூறினார்.

ஸ்வாதி மலிவாலுக்கு நடந்தது என்ன? வெளியான புது சிசிடிவி  காட்சிகள்

ஸ்வாதி மலிவால்

Follow Us On

ஸ்வாதி மலிவால் தாக்கப்பட்ட விவகாரம்: டெல்லி மகளிர் ஆணைய முன்னாள் தலைவரும், ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்பியுமான ஸ்வாதி மலிவால், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் அவரது உரிமையாளரால் தாக்கப்பட்டதாக போலீஸில் புகார் அளித்தார். கடந்த சில நாட்களுக்கு முன் டெல்லி காவல்துறை கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட ஸ்வாதி மலிவால் டெல்லி முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் கெஜ்ரிவாலின் தனிப்பட்ட உதவியாளர் தாக்கப்பட்டதாக புகார் அளித்தார். இதனை அடுத்து, டெல்லி போலீசார் முதல்வர் கெஜ்ரிவாலின் வீட்டிற்கு சென்றனர். சிறிது நேரத்தில் டெல்லி சிவில் லைன்ஸ் பகுதி காவல் நிலையத்திற்கு ஸ்வாதி மலிவால் வந்தார்.

பின்னர், போலீசில் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தார். இந்த சம்பவம் டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ஸ்வாதி மலிவாலிடம் உயர் அதிகாரிகள் வாக்குமூலம் பெற்றனர். முதல்வர் கெஜ்ரிவாலின் வீட்டிற்கு சென்றபோது அவரின் உதவியாளர் பிபவ் குமார் கொடூரமாக தாக்கியதாக குற்றம்சாட்டினார். தாக்குதலின்போது தன்னுடைய ஆடை கிழிந்ததாகவும், தலை மற்றும் காலில் பலத்த காயம் ஏற்பட்டதாக கூறினார்.

Also Read : 5ஆம் கட்ட வாக்குப்பதிவு.. 49 தொகுதிகளில் இன்றுடன் ஓய்கிறது தேர்தல் பரப்புரை!

வெளியான புதிய சிசிடிவி காட்சி:

இந்த சம்பவத்திற்கு பாஜக கடும் கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், டெல்லி அமைச்சருமான அதிஷி, கெஜ்ரிவாலை சிக்க வைப்பதற்காக பாஜகவினர் செய்த சதி என்று தெரிவித்திருக்கிறார். மேலும், ஸ்வாதி மலிவால் தாக்கப்பட்டது உண்மைதான் என்று சஞ்சிங் சிங் எம்.பி தெரிவித்திருந்த நிலையில், சம்பவத்தன்று கெஜ்ரிவால் வீட்டில் ஸ்வாதி மலிவால் அமைதியாக அமர்ந்திருந்து எழுந்து செல்லும் சிசிடிவி காட்சி இணையத்தில் நேற்று வைரலானது.


இந்த நிலையில், சம்பவத்தன்று கெஜ்ரிவாலின் வீட்டில் இருந்து ஸ்வாதி மலிவாலை பாதுகாப்பு அதிகாரிகள் வெளியே அழைத்து செல்லும் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. மூன்றுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஸ்வாதி மலிவாலின் கைகளை பிடித்து வீட்டிற்கு வெளியே அழைத்து செல்வது போன்று சிசிடிவியில் பதிவாகி உள்ளது.

இந்த காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.  இந்த விவகாரத்தில் பல தரப்பில் இருந்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இதற்கு டெல்லி காவல்துறை என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பது அனைவரின் கேள்வியாக உள்ளது.

Also Read : பேருந்து தீ பிடித்து விபத்து.. 10 பேர் உயிரிழந்த சோகம்.. ஹரியானாவில் அதிர்ச்சி!

யூரிக் அமிலம் அதிகமாக இருந்தால் இந்த பருப்பு வகைகளை தவிர்க்க வேண்டும்..
வெயில் காலத்தில் அன்னாசி பழம் சாப்பிடலாமா?
ஒரே ஒரு சதம்.. பல்வேறு சாதனைகளை குவித்த அஸ்வின்!
பக்கவாதத்தை தடுக்கும் நூக்கல்.. இதில் இவ்வளவு நன்மை பண்புகளா..?
Exit mobile version