Ration Card : பெயர் முதல் முகவரி வரை.. இனி ரேஷன் கார்டு தகவல்களை சுலபமாக அப்டேட் செய்யலாம் – முழு விவரம்!
New App | ரேஷன் அட்டையில் குடும்ப தலைவன், தலைவி மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் இடம்பெற்றிருக்கும். தற்போது ரேஷன் அட்டையும் டிஜிட்டல் மயாமாக்கப்பட்டுள்ளதால், குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் கைரேகையும் ரேஷன் அட்டையில் பதிவு செய்ய வேண்டியது கட்டாயம். அதுமட்டுமன்றி ரேஷன் அட்டையுடன் குடும்ப உறுப்பினர்களின் ஆதார் எண்ணும் இணைக்கப்பட வேண்டும்.
ரேஷன் அட்டை : இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திலும், பொதுமக்களுக்கு ரேஷன் அட்டை வழங்கப்படுகிறது. ரேஷன் அட்டை ஒரு குடும்பத்தின் அடையாள ஆவணமாக விளங்குகிறது. அதுமட்டுமன்றி ரேஷன் அட்டை மூலம் மக்கள் பல்வேறு விதங்களில் பயனடைந்து வருகின்றனர். குறிப்பாக ரேஷன் அட்டை மூலம் பொதுமக்களுக்கு மாநிய விலையில் அரிசி, பரும்பு, எண்ணேய், கோதுமை உள்ளிட்ட உணவு தானியங்கள் வழங்கப்படுகின்றன. இந்த திட்டத்தின் மூலம் ஏராளமான ஏழை குடும்பங்கள் பயனடைந்து வருகின்றன.
ரேஷன் பொருட்களை பெற இதெல்லாம் கட்டாயம்
ரேஷன் அட்டையில் குடும்ப தலைவன், தலைவி மற்றும் குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் இடம்பெற்றிருக்கும். தற்போது ரேஷன் அட்டையும் டிஜிட்டல் மயாமாக்கப்பட்டுள்ளதால், குடும்ப உறுப்பினர்கள் அனைவரின் கைரேகையும் ரேஷன் அட்டையில் பதிவு செய்ய வேண்டியது கட்டாயம். அதுமட்டுமன்றி ரேஷன் அட்டையுடன் குடும்ப உறுப்பினர்களின் ஆதார் எண்ணும் இணைக்கப்பட வேண்டும். அதுமட்டுமன்றி ரேஷன் அட்டையில் குடும்ப உறுப்பினர்கள் குறித்த தகவல்கள் அனைத்தும் சரியாக இருக்க வேண்டும். அப்போதுதான், அரசாங்கத்தின் சலுகைகளை பெற முடியும்.
இதையும் படிங்க : Ration Card : ரேஷன் கார்டில் இறந்தவர் பெயரை நீக்க வேண்டுமா.. அலைய தேவையில்லை.. ஆன்லைனில் ஈசிய பண்ணிடலாம்!
ரேஷன் அட்டை திருத்தங்களை மேற்கொள்ள செயலி அறிமுகம்
இந்நிலையில் ரேஷன் கார்டில் பெயர் திருத்தம் செய்வது அல்லது முகவரி செய்வது இனி சுலபமாகிவிடும். அதற்கான புதிய வசதி தான் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இனி ரேஷன் அட்டையில் பெயர், முகவரி, வயது ஆகியவற்றை மாற்ற அலுவலகங்களுக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. வீட்டில் இருந்தபடியே அவற்றை சுலபமாக செய்து முடித்துவிடலாம். ரேஷன் அட்டையில் பெயர், முகவரி உள்ளிட்ட தகவவல்கள் தவறாக இருந்தால் அவற்றை செயலி மூலம் வீட்டில் இருந்தபடியே திருத்திக்கொள்ளலாம்.
இதையும் படிங்க : Income Tax : வருமான வரி தாக்கல் செய்ய காலக்கெடு நீட்டிப்பு?.. வருமான வரித்துறை விளக்கம்!
உணவுத் துறை அமைச்சர் ரத்தின் கோஷ் சட்டப்பேரவையில் அறிவிப்பு
உணவுத் துறை அமைச்சர் ரத்தின் கோஷ் சட்டப்பேரவையில் இது தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளார். அதன்படி, நாட்டிலேயே முதல் முறையாக மேற்கு வங்கத்தில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். இக்ஷ்தற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே தொடங்கபபட்டுவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமன்றி ரேஷன் கார்டு ஷிப்பிங் வசதி பெறுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அதாவது, ஒரு ரேஷன் டீலருக்கு பதிலாக வேறு ரேஷன் டீலரிடம் பொருள் வாங்க விரும்பினால் அதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.