5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Fastag Rules: வாகன ஓட்டிகள் கவனத்திற்கு..! பாஸ்ட்டேக் முறையில் புதிய மாற்றம்- தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அதிரடி..

இந்தியாவில் உள்ள தேசியநெடுஞ்சாலைகளில் பாஸ்ட் டேக் முறையில் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. தற்போது நாடுமுழுவதும் உள்ள சுமார் 1,000 சுங்கச் சாவடிகளில் 45,000 கி.மீ தொலைவில் பாஸ்ட்டேக் முறை பின்பற்றப்பட்டு வருகிறது. பணம் செலுத்தி சுங்கக் கட்டணம் வசூலிக்கும் போது வாகன ஒட்டிகள் நீண்டவரிசையில் காத்திருக்கும் நிலை இருந்தது. இதனை தடுக்கவே பாஸ்ட்டேக் கார்டுகள் அறிமுகம் செய்யப்பட்டு, அதனை ரீசார்ஜ் செய்தால் அதிலிருந்து நேரடியாக பணம் கழிக்கப்பட்டு சுங்க கட்டணம் வசூல் செய்யும் முறை கொண்டு வரப்பட்டது.

Fastag Rules: வாகன ஓட்டிகள் கவனத்திற்கு..! பாஸ்ட்டேக் முறையில் புதிய மாற்றம்- தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அதிரடி..
கோப்பு புகைப்படம்
Follow Us
aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Updated On: 19 Jul 2024 16:59 PM

பாஸ்டேக் முறையில் புதிய மாற்றம்: சுங்கச்சாவடிகள் வழியே பயணிக்கும் வாகனங்களின் முன்புற கண்ணாடியில் பாஸ்ட்டேக் ஸ்டிக்கர் ஒட்டவில்லை என்றால் இரட்டிப்பு சுங்கக் கட்டணம் வசூலிக்கும்படி தேசிய நெடுஞ்சாலை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இந்த வாகனங்களின் பதிவு எண்களை சி.சி.டி.வி.கேமராவில் பதிவு செய்து தடுப்பு பட்டியலில் (பிளாக்லிஸ்ட்) சேர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள தேசியநெடுஞ்சாலைகளில் பாஸ்ட் டேக் முறையில் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. தற்போது
நாடுமுழுவதும் உள்ள சுமார் 1,000 சுங்கச் சாவடிகளில் 45,000 கி.மீ தொலைவில் பாஸ்ட்டேக் முறை பின்பற்றப்பட்டு வருகிறது. பணம் செலுத்தி சுங்கக் கட்டணம் வசூலிக்கும் போது வாகன ஒட்டிகள் நீண்டவரிசையில் காத்திருக்கும் நிலை இருந்தது. இதனை தடுக்கவே பாஸ்ட்டேக் கார்டுகள் அறிமுகம் செய்யப்பட்டு, அதனை ரீசார்ஜ் செய்தால் அதிலிருந்து நேரடியாக பணம் கழிக்கப்பட்டு சுங்க கட்டணம் வசூல் செய்யும் முறை கொண்டு வரப்பட்டது.

மேலும் படிக்க: விண்டோஸ் திடீர்னு ஏன் முடங்கியது? காரணம் இதுதான்!

மூன்று வருடங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட பாஸ்ட்டேக் என்பது RFID தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கட்டணம் வசூலிக்கும் முறை ஆகும். தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள டோல் கேட்டில் கடந்து செல்லும் அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்ட்டேக் கட்டாயம் தேவை. இதை பெரும்பாலான வாகன உரிமையாளர்கள் பயன்படுத்தும் காரணத்தால் டோல் கேட்டில் காத்திருப்பு காலம் வெகுவாக குறைந்துள்ளது. பெரும்பாலான வாகன ஓட்டிகள் இதனை பின்பற்றும் நிலையிl ஒரு சிலர் இதனை கடைப்பிடிக்காமல் இருந்து வருகின்றனர். இதனால் பிற வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது.


இதன் காரணமாக தேசிய நெடுஞ்சாலை இந்த புதிய திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள டோல் கேட்டில் விரைவில் இந்த நடைமுறை கொண்டு வரப்படும் என தெரிவித்துள்ளது, இதற்கான அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூரவ்மாக வர உள்ளது. மேலும் வாகனத்தின் கண்ணாடி மீது பாஸ்ட்டேக் ஸ்டிக்கரை ஒட்டாமல் இருப்பவர்கள் மீது தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: தொடர்ந்து நடக்கும் ரயில் விபத்துகள்.. இந்தியாவில் மட்டும் இவ்வளவு நடப்பதற்கு காரணம் என்ன?

Latest News