மோடி அமைச்சரவையில் நிதிஷ், சந்திரபாபுவுக்கு எத்தனை இலாகாக்கள்? வெளியான முக்கிய தகவல்! - Tamil News | | TV9 Tamil

மோடி அமைச்சரவையில் நிதிஷ், சந்திரபாபுவுக்கு எத்தனை இலாகாக்கள்? வெளியான முக்கிய தகவல்!

Updated On: 

08 Jun 2024 18:38 PM

கடந்த 10 ஆண்டுகளைப் போல இல்லாமல் மோடி அமைச்சரவையில் கூட்டணி கட்சிகளின் ஆதிக்கம் அதிகம் இருக்கும் இருக்கும் சொல்லப்படுகிறது. குறிப்பாக, சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியும், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளமும் தங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த மத்திய அமைச்சர் பதவிகளை கேட்டு பெற இருகட்சிகளும் முனைப்பு காட்டி வருகிறது. இதற்கிடையில்,  நாளை இரவு 7.15 மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகைளில் மோடி மீண்டும் பிரதமராக பெறுப்பேற்க உள்ளார். இப்படியான சூழலில், தற்போது அமைச்சரவை குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்தது. இதுதொடர்பாக, இன்று ஆலோசனை கூட்டமும் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் என்டிஏ கூட்டணி தலைவர்கள் கலந்து கொண்டு ஆலோசித்தனர்.

மோடி அமைச்சரவையில் நிதிஷ், சந்திரபாபுவுக்கு எத்தனை இலாகாக்கள்? வெளியான முக்கிய தகவல்!

என்டிஏ கூட்டணி

Follow Us On

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 240 தொகுதிகளிலும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. பாஜவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில், கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கிறார் மோடி. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் 16 எம்.பிக்களுடன் தெலுங்கு தேசம் இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது. அதேபோல, 12 எம்.பிக்களுடடுன் ஐக்கிய ஜனதா தளம் மூன்றாவது பெரிய கட்சியாகவும் உள்ளன. கடந்த 10 ஆண்டுகளைப் போல இல்லாமல் மோடி அமைச்சரவையில் கூட்டணி கட்சிகளின் ஆதிக்கம் அதிகம் இருக்கும் இருக்கும் சொல்லப்படுகிறது. குறிப்பாக, சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியும், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளமும் தங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த மத்திய அமைச்சர் பதவிகளை கேட்டு பெற இருகட்சிகளும் முனைப்பு காட்டி வருகிறது.

Also Read: மக்களவை எதிர்க்கட்சி தலைவராகிறாரா ராகுல் காந்தி? காங்கிரஸ் மாஸ்டர் பிளான்!

மோடி அமைச்சரவையில் நிதிஷ், சந்திரபாபுவுக்கு எத்தனை இடம்?

இதற்கிடையில்,  நாளை இரவு 7.15 மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகைளில் மோடி மீண்டும் பிரதமராக பெறுப்பேற்க உள்ளார். இப்படியான சூழலில், தற்போது அமைச்சரவை குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்தது. இதுதொடர்பாக, இன்று ஆலோசனை கூட்டமும் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் என்டிஏ கூட்டணி தலைவர்கள் கலந்து கொண்டு ஆலோசித்தனர். அப்போது தெலுங்கு சேதம் கட்சிக்கு 4 மத்திய கேபினட் பெறுப்பையும், நிதிஷ் குமார் 3 கேபினட் அமைச்சர் பெறுப்பை கேட்டுள்ளதாக தெரிகிறது.

ஆனால், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சிக்கு 4 கேபினட் பொறுப்பையும், நிதிஷ் குமாரி ஐக்கிய ஜனதா தளத்திற்கு 2 கேபினட் பொறுப்பையும் பாஜக அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  ஐக்கிய ஜனதா தளத்தில் மூத்த தலைவர்களான லாலன் சிங் மற்றும் ராம்நாத் தாக்கூர் ஆகியோரின் பெயரை நிதிஷ் குமார் முன்மொழிந்துள்ளதாக தெரிகிறது.

அதேபோல, தெலுங்கு தேச கட்சியின் ராம் மோகன் நாயுடு, ஹரிஷ் பாலயோகி மற்றும் டக்குமல்ல பிரசாத் உள்ளிட்டோரின் பெயரை சந்திரபாபு நாயுடு முன்மொழிந்துள்ளதாக சொல்லப்படுகிறது.   இருப்பினும் உறுதியாக எந்த தகவலும் வெளிவரவில்லை. மேலும், என்டிஏ கூட்டணியில் உள்ள ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா கட்சிக்கும், லோக் ஜனசக்தி கட்சிக்கும் எத்தனை இடங்கள் கொடுக்கப்பட்டது என்ற தகவல் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: 3வது முறை பிரதமராகும் மோடி.. பதவியேற்பில் கலந்து கொள்ளும் உலக தலைவர்கள்!

 

இந்த உணவுகளை ஒருப்போதும் சூடு படுத்தி சாப்பிடக்கூடாது..!
தினமும் காலையில் கறிவேப்பிலை சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா?
உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வாரி வழங்கும் பூண்டு..!
நுரையீரலை பாதுகாக்க உதவும் உணவுகள்!
Exit mobile version