Arvind Kejriwal: கெஜ்ரிவாலுக்கு தொடர் சிக்கல்.. ஜாமீனுக்கு இடைக்கால தடை விதித்த உயர் நீதிமன்றம்!
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் தொடர்புடைய சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு விசாரணை நீதிமன்றம் கடந்த 20ஆம் தேதி ஜாமீன் கொடுத்தது. ஆனால், அமலாக்கத்துறை கெஜ்ரிவாலின் ஜாமீனுக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேற்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தது. இதனால், கெஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை டெல்லி உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்தது. இதனால், திகார் சிறையில் இருந்து கெஜ்ரிவாலின் விடுப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
கெஜ்ரிவாலுக்கு தொடர் சிக்கல்: டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் தொடர்புடைய சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு விசாரணை நீதிமன்றம் கடந்த 20ஆம் தேதி ஜாமீன் கொடுத்தது. ஆனால், அமலாக்கத்துறை கெஜ்ரிவாலின் ஜாமீனுக்கு எதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேற்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தது. இதனால், கெஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை டெல்லி உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்தது. இதனால், திகார் சிறையில் இருந்து கெஜ்ரிவாலின் விடுப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது. விசாரணை நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என டெல்லி மாநில உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனுதாக்கல் செய்து அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தது. இந்த வழக்கில் ஜாமீனுக்கு இடைக்காலத் விதித்த உயர்நீதிமன்றம், வழக்கின் தீர்ப்பை தள்ளிவைத்தது.
இந்த வழக்கு நீதிபதி சுதிர் குமார் ஜெயின் அமர்வில் இன்று விசரணை வந்தது. அப்போது, நீதிபதி விசாரணை நீதிமன்ற நீதிபதி அமலாக்கத்துறை தரப்பு ஆவணங்களை சரியாக ஆராயவில்லை, சட்டவிரோத பணப்பரிமாற்ற விதி 45 குறித்து சரியாக ஆராயவில்லை எனவும், முறையாக விசாரிக்காமல் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது என்றார். மேலும், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமீனுக்கு விதிக்கப்பட்ட தடையை உறுதி செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Delhi HC allows Enforcement Directorate’s plea to stay the trial court’s bail order for Delhi Chief Minister Arvind Kejriwal in the money laundering case linked to the alleged money laundering excise scam.
The bench of Justice Sudhir Kumar Jain stays the Arvind Kejriwal bail… pic.twitter.com/A4XL3FKdm1
— ANI (@ANI) June 25, 2024
Also Read: ரீல்ஸ் மோகம்.. கடலில் சிக்கிய மஹிந்திரா தார்.. வைரல் வீடியோ..!
வழக்கின் பின்னணி:
டெல்லி அரசின் 2021-22ஆம் ஆண்டுக்கான மதுபான கொள்கை வகுத்ததிலும், நடைமுறைப்படுத்தியதிலும் முறைகேடுகள் நடைபெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சிபிஐயும் அமலாக்கத்துறையும் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் இந்த வழக்கை விசாரித்து வரும் அமலாக்கத்துறை டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் 21ஆம் தேதி கைது செய்தது பின்னர் பீகார் சிறையில் அடைக்கப்பட்ட கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் அடுத்து தடுத்து நீடிக்கப்பட்டது.
அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து, டெல்லி உயர்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவைத் தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் அவரது கைது நடவடிக்கையில் சட்டவிதிகள் எதுவும் மீறப்படவில்லை என்று தெரிவித்தது. இந்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மேல்முறையீடு செய்தார். தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் அவரது தரப்பில் கோரப்பட்டது. கடந்த 10ஆம் தேதி கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில், ஜூன் 2ஆம் தேதி மீண்டும் சிறைக்கு திரும்பினார்.
Also Read: நாடாளுமன்றத்தில் எதிரொலித்த உதயநிதி பெயர்.. தமிழில் பதவியேற்ற தமிழக எம்பிக்கள்!