Noel Tata: டாடா அறக்கட்டளைக்கு புதிய தலைவர் நியமனம்.. யார் இந்த நோயல்?

நோயல் டாடா: டாடா அறக்கட்டளை தலைவராக நோயல் டாடா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மறைந்த ரத்தன் டாடாவின் தம்பி ஆவார். நோயல் டாடா 40 ஆண்டுகளுக்கு மேலாக டாடா குழுமத்தில் பல்வேறு துறைகளில், பல்வேறு பதவிகளில் பணியாற்றியுள்ளார்.

Noel Tata: டாடா அறக்கட்டளைக்கு புதிய தலைவர் நியமனம்.. யார் இந்த நோயல்?

நோயல் டாடா

Updated On: 

11 Oct 2024 15:28 PM

டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடா மறைவுக்கு பின்னர், அவரது பதவிக்கு அடுத்த யார் வருவார் என்று அனைவரின் கேள்வியாக இருந்தது. இதற்கு தற்போது பதில் கிடைத்துள்ளது. அதாவது, டாடா சன்ஸ் குழுமத்தின் அறக்கட்டளை தலைவராக நோயல் டாடா நியமிக்கப்பட்டுள்ளார்.  பிரபல தொழிலதிபரும், டாடா சன்ஸ் நிறுவன தலைவருமான ரத்தன் டாடா வயது முதிர்வு காரணமாக நேற்றுமுன் தினம் இரவு காலமானார். இவருக்கு வயது முதிர்வு தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டார். ரத்தம் அழுத்தம் குறைந்ததால் கடந்த வாரம் மும்பையில் உள்ள மருத்துவமனையில் ரத்தன் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

டாடா அறக்கட்டளைக்கு புதிய தலைவர்

இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் ரத்த டாடா உயிர் பிரிந்ததாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியனாது. இவரது மறைவு நாட்டையே பெரும் சோகத்தை ஆழ்த்தியுள்ளது.  இவர் பல தொழிலதிபர்கள் இளைஞர்களுக்கு பெரிதும் இன்ஸ்பிரெஸனாக இருந்துள்ளார்.

அதேநேரத்தில் உலக அளவில் டாடா குழுமத்தின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியவர் ரத்தன் டாடா.  இவர் மறைந்த பிறகு இவரது பதவிக்கு அடுத்த யார் வருவார் என்று எதிர்பார்ப்பு இருந்தது. இருப்பினும், தற்போது சந்திரசேகரன் டாடா குழுமத்தின் தலைவராக தொடர்ந்து வருகிறார்.

Also Read: திருப்பதி பிரம்மோற்சவம்.. கோலாகலமாக நடைபெற்ற தேரோட்டம்!

எப்போதுமே டாடா சன்ஸ் குழுமத்தின் அறக்கட்டளை தலைவராக டாடா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இருந்திருக்கிறார்கள். அதன்படி தற்போது டாடா அறக்கட்டளை தலைவராக நோயால் டாடா நியமிக்கப்பட்டுள்ளார்.

யார் இந்த நோயல் டாடா?

மும்பையில் இன்று நடைபெற்ற நிர்வாகக் குழுக் கூட்டத்தைத் தொடர்ந்து, ரத்தன் டாடாவின் சகோதரர் நோயல் டாடா, டாடா அறக்கட்டளையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் மறைந்த ரத்தன் டாடாவின் தம்பி ஆவார்.  நோயல் டாடா 40 ஆண்டுகளுக்கு மேலாக டாடா குழுமத்தில் பல்வேறு துறைகளில், பல்வேறு பதவிகளில் பணியாற்றியுள்ளார்.

தற்போது நோயல் டாடா டாடா ஸ்டீல் மற்றும் வாட்ச் நிறுவனமான டைட்டனின் துணைத் தலைவராக உள்ளார். நோயல் டாடா 2000ஆம் ஆண்டு டாடா குழுமத்தில் இணைந்தார். அன்றில் இருந்து தற்போது டாடா குழுமத்தின் முக்கிய நபராக இருந்து வருகிறார்.

மேலும், இவர் ஜூடியோ மற்றும் வெஸ்ட் சைட் ஆகிய நிறுவனங்களின் தாய் நிறுவனமான ட்ரெண்டின் தலைராகவும் உள்ளார். இதோடு, டாடா இன்டர்நேஷனல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகவும் உள்ளார். சர் ரத்தன் டாடா டிரஸ்ட் மற்றும் சர் டோராப்ஜி டாடா டிரஸ்ட் ஆகியவற்றின் அறங்காவலராகவும் உள்ளார் நோயல் டாடா.

இந்த அறக்கட்டளைகள் டாடா சன்ஸ் குழுமத்தின் 66% பங்குகளை வைத்துள்ளன. சர் டோராப்ஜி டாடா டிரஸ்ட் மற்றும் சர் ரத்தன் டாடா டிரஸ்ட் டாடா அறக்கட்டளை டாடா சன்ஸ் நிறுவனத்தின் 52 சதவீத பங்குகளை வைத்துள்ளன.

நோயல் தனது 3 குழந்தைகளான நியூவெல், மாயா மற்றும் லியாவுடன் சேர்ந்து உலகெங்கிலும் 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள டாடா குழுமத்தின் பில்லியன் கணக்கான சொத்துகளை கையாளுவார்கள். நோயலின் மூன்று குழந்தைகளும் தற்போது டாடா குழுமத்தில் வெவ்வேறு பொறுப்புகளை ஆற்றி வருகின்றனர்.

Also Read: பிரதமர் மோடி பரிசாக கொடுத்த காளி கோயில் கிரீடம் திருட்டு!

நோயல் டாடாவின் மூத்த மகள் லியா டாடா. 39 வயதான லியா, டாடா குழுமத்தின் ஹோட்டல் துறையை நிர்வகித்து வருகிறார். இவர் 2006ஆம் ஆண்டு தாஜ் ஹோட்டல் ரிசார்ட்ஸ், பேலசில் உதவி விற்பனை மேலாளராக டாடா குழுமத்தில் சேர்ந்தார். மேல், பல்வேறு பதவிகளில் இருந்து, தற்போது தி இந்தியன் ஹோட்டல்கள் கம்பெனி லிமிடெட்டில் துணைத்தலைவராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இணையத்தை கலக்கும் பார்வதியின் நியூ லுக்
சன் டிவியா? விஜய் டிவியா? இந்த வாரம் டிஆர்பி-யில் முந்தியது யார்
மன அழுத்த பாதிப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி?
குளிர்காலத்தில் நாம் செல்ல முடியாத இந்தியாவின் இடங்கள்!